டைகட்சூ பிராண்டை களமிறக்க டொயோட்டா திட்டம்?

Written By:

அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்து சந்தைப் பங்களிப்பை உயர்த்திக் கொள்ளும் திட்டம் இல்லை; எங்களது தரக் கொள்கைகளையும், வாடிகக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் கார்களை மட்டும் விற்பனை செய்ய விரும்புகிறோம்," என்று பிரபல வர்த்தக இதழுக்கு பேட்டியளித்த டொயோட்டா இந்தியா தலைவர் டகேஷி உச்சிமடா கூறியுள்ளார்.

அப்போது டைகட்சூ பிராண்டு கார்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, அதுகுறித்த சிந்தனை இப்போது இல்லை, ஆனாலும் அந்த எண்ணத்தை புறந்தள்ள முடியாது என்று அவர் கூறியிருக்கிறார். இந்தநிலையில், அடுத்த சில ஆண்டுகளில் டைகட்சூ பிராண்டு காம்பேக்ட் யுட்டிலிட்டி ரக வாகனங்களை இந்தியாவில் கொண்டு வருவதற்கான முயற்சிகளை டொயோட்டா தொடர்ந்து மேற்கொண்டு வருவது உறுதியாகியுள்ளது.

பட்ஜெட் மாடல்கள்

பட்ஜெட் மாடல்கள்

லிவா காரைவிட குறைவான விலை கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என டொயோட்டா கூறி வருகிறது. அதேநேரத்தில், நிசான் நிறுவனம் டட்சன் பிராண்டில் கார்களை அறிமுகம் செய்தது போன்று, டைகட்சூ பிராண்டில் குறைவான விலை மாடல்களை அறிமுகம் செய்வதற்கான வர்த்தக வாய்ப்புகள் குறித்து டொயோட்டா ஆய்வு செய்து வருகிறது.

டைகட்சூ கார் இறக்குமதி

டைகட்சூ கார் இறக்குமதி

இந்த ஆண்டு துவக்கத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக டைகட்சூ டெரியோஸ் மினி எஸ்யூவி ஒன்று இத்தாலியிலிருந்து நம் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இந்த டைகட்சூ டெரியோஸ் கார் மாடல் ஏற்கனவே நம் நாட்டில் பிரிமியர் ரியோ என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இது டொயோட்டா ரஷ் அடிப்படையிலான மாடல்தான். அதேநேரத்தில், புதிய தலைமுறை டைகட்சூ டெரியோஸ் மாடலையே டொயோட்டா பரிசீலிதத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

வாய்ப்பு

வாய்ப்பு

பொதுவாக, ஜப்பானிய கார் நிறுவனங்கள் இந்தோனேஷியாவில் விற்பனையாகும் அல்லது அறிமுகமாகும் கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்வது வாடிக்கை. எனவே, தற்போது டைகட்சூ பிராண்டிலான மாடல்கள் இந்தோனேஷியாவில் விற்பனை செய்யப்படுவதால், முக்கிய உதிரிபாகங்களை இந்தியாவில் இறக்குமதி செய்து அசெம்பிள் செய்ய வாய்ப்புள்ளது.

அறிமுகம் எப்போது?

அறிமுகம் எப்போது?

டைகட்சூ பிராண்டை அறிமுகம் செய்வதில் டொயோட்டா அவசரப்படவில்லை என்பது தெரிகிறது. எனவே, வரும் 2017ம் ஆண்டில் அல்லது 2018ம் ஆண்டில் டைகட்சூ பிராண்டை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான திட்டத்துடன், காய்களை நகர்த்தி வருகிறது.

சாத்தியக்கூறுகள்...

சாத்தியக்கூறுகள்...

தற்போது டொயோட்டா கிர்லோஸ்கர் இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை லாபகரமான பாதையில் செல்கிறது. மேலும், இந்திய வர்த்தகம் வலுவானதாகவும், லாபகரமானதாகவும் இருப்பதால், ஜப்பானிய தலைமையகம் இந்திய அதிகாரிகள் சொல்லும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். எனவே, டைகட்சூ கார் பிராண்டு வருவதற்கான சாத்திக்கூறுகள் அதிகம் தென்படுகின்றன.

 

Via- ET

English summary
Toyota is Considering Daihatsu Brand For Inidia.
Story first published: Friday, September 4, 2015, 10:36 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark