டொயோட்டா ஈடியோஸ் லிவா ஸ்போர்டிவோ மாடல் விற்பனை நிறுத்தம்

குறைந்து கொண்டிருக்கும் விற்பனையால், டொயோட்டா நிறுவனத்தின் ஈடியோஸ் லிவா ஸ்போர்டிவோ மாடலின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்படுகிறது.

ஜப்பானிய நிறுவனமான டொயோட்டா, வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக இந்த ஈடியோஸ் லீவோ ஸ்போர்டிவோவை ஸ்பெஷல் எடிஷன் காராக அறிமுகம் செய்தது.

Toyota Liva Sportivo

ஈடியோஸ் லிவாவின் ஸ்போர்டிவோ எடிஷன் கார்கள் டொயோட்டா ரேஸிங் பிரிவு வழங்கிய ஆலோசனைகளை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்பெஷல் எடிஷன் கார் வி வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

இந்த ஈடியோஸ் லிவா ஸ்போர்டிவோவில் 89 ஹார்ஸ்பவரையும், 131.99 என் எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கும் 1.5 லிட்டர் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இஞ்ஜின் அதிகமான வரிகளை ஈர்த்ததால், கூடுதல் விலை அதிகரிப்புக்கு காரணமாக விளங்கியது.

ஸ்போர்டியான பாடி கிட், ஸ்பெஷல் எடிஷன் பேட்ஜ், காரின் உடல் பாகம் முழுவதும் ரேசிங் ஸ்டிக்கர்கள் உள்ளிட்ட அம்சங்களுடன் வடிவமைப்பாளர்கள் இதனை வடிவமைத்தனர்.

வழக்கமான ஹேட்ச்பேக் கார்களை விட தங்களின் இந்த ஹேட்ச்பேக் கார் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் டொயோட்டா முனைப்புடன் இருந்தது.

டொயோட்டா கிர்லோஸ்கார் மோட்டார்ஸ் ஈடியோஸ் லிவா ஸ்போர்டிவோவை பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்ஜின் கொண்ட இரு ரகங்களில் வழங்கப்பட்டு வந்தது. டொயோட்டா ஈடியோஸ் லிவா ஸ்போர்டிவோ போட்டி வாகனங்களை காட்டிலும், மிக கன கச்சிதமாக கொண்டதாக இருந்தது.

Most Read Articles
English summary
Toyota Discontinues Etios Liva Sportivo Owing To Demand.
Story first published: Saturday, October 10, 2015, 14:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X