டொயோட்டா எட்டியோஸ் எக்ஸ்க்ளூசிவ் எடிசன் மாடல் அறிமுகம்!

Written By:

பண்டிகை காலத்தை முன்னிட்டு, டொயோட்டா எட்டியோஸ் செடான் காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

டொயோட்டா எட்டியோஸ் எக்ஸ்க்ளூசிவ் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய மாடல் கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் சிறப்பம்சங்களை தாங்கி வந்துள்ளது. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

வேரியண்ட் விபரம்

வேரியண்ட் விபரம்

பெட்ரோல் மற்றும் டீசல் மாடலின் டாப் வேரியண்ட்டில் கூடுதல் வசதிகளை சேர்த்து டொயோட்டா எட்டியோஸ் எக்ஸ்க்ளூசிவ் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

 வெளிப்புற சிறப்புகள்

வெளிப்புற சிறப்புகள்

க்ரோம் அலங்காரம் கொண்ட சைடு மிரர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எக்ஸ்க்ளூசிவ் பேட்ஜும் இதன் தனித்துவத்தை பரைசாற்றுகிறது. டோர் வைசர்களும்12 ஸ்போக் அலாய் வீல்களும் பக்கவாட்டிற்கு அழகு சேர்க்கும் அம்சங்கள்.

உட்புற சிறப்புகள்

உட்புற சிறப்புகள்

ஸ்மார்ட் லிங்க் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மர வேலைப்பாடுகள் கொண்ட சென்டர் கன்சோல், இரட்டை வண்ண ஃபேப்ரிக் இருக்கைகள், முன்புறத்தில் எஸ்ஆர்எஸ் டியூவல் ஏர்பேக்ஸ், சக்திவாய்ந்த 6 ஸ்பீக்கர்களுடன் கூடிய மியூசிக் சிஸ்டம் ஆகியவை கூடுதலாக இருக்கின்றன.

 எஞ்சின் விபரம்

எஞ்சின் விபரம்

டொயோட்டா எட்டியோஸ் காரில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 88.47 எச்பி பவரையும், 132 என்எம் டார்க்கையும் வழங்கும். லிட்டருக்கு 16.78 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. டீசல் மாடலில் இருக்கும் 1.4 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 37.02 எச்பி பவரையும், 170 என்எம் டார்க்கையும் வழங்கும். டீசல் மாடல் லிட்டருக்கு 23.59 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 வண்ணங்கள்

வண்ணங்கள்

மூன்று வண்ணங்களில் இந்த லிமிடேட் எடிசன் மாடல் கிடைக்கும். சிம்பொனி சில்வர், பியர்ல் ஒயிட் ஆகிய வண்ணங்களை தவிர்த்து, புதிய நீல வண்ணத்திலும் வந்துள்ளது.

விலை விபரம்

விலை விபரம்

புதிய டொயோட்டா எட்டியோஸ் எக்ஸ்க்ளூசிவ் எடிசன் காரின் பெட்ரோல் மாடல் ரூ.7.82 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.8.93 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. கூடுதல் விபரங்களுக்கு அருகாமையிலுள்ள டொயோட்டா டீலரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

 
English summary
Toyota has a single offering in the compact sedan segment called Etios. Japanese manufacturer has now launched a limited edition model called Etios Xclusive. Only three colour options will be available in Etios Xclusive model. They are Blue Metallic, Symphony Silver and Pearl White all of which are priced attractively at INR 7,82,215 ex-showroom, Delhi.
Story first published: Thursday, August 13, 2015, 7:24 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark