புதிய டொயோட்டா பிரையஸ் ஹைபிரிட் காரின் இந்திய வருகை விபரம்!

Written By:

அடுத்த ஆண்டு இறுதியில் டொயோட்டா நிறுவனத்தின் புதிய தலைமுறை பிரையஸ் ஹைபிரிட் கார், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட உள்ளது.

அதற்கு முன்னதாக, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய டொயோட்டா பிரையஸ் கார் அறிமுகம் செய்யபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்த புதிய டொயோட்டா பிரையஸ், பிரையஸ் ஹைப்ரிட் செடானின் நான்காம் தலைமுறை வாகனமாக கருதப்படுகிறது. இது, தற்போது இந்தியாவில் உள்ள பிரையஸ் காருக்கு மாற்றாக அமைய உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இந்த புதிய டொயோட்டா பிரையஸ், 4-சிலிண்டர்கள் கொண்ட 1.8 லிட்டர், பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் 97 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 142 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

எலக்ட்ரிக் மோட்டார் கொண்ட ஹைப்ரிட் இஞ்ஜின் அமைப்பானது, கூடுதலாக 71 பிஹெச்பி-யை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

பவர் (ஆற்றல்) நிக்கல்-மெட்டல் ஹைப்ரிட் பேட்டரி பேக்கில் தேக்கி வைக்கபடுகிறது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

முன்பு இருந்த பெட்ரோல் இஞ்ஜினை காட்டிலும், இந்த புதிய டொயோட்டா பிரையஸ் இஞ்ஜின் கூடுதல் திறன் வாய்ந்ததாக இருக்கும் என டொயோட்டா நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்த புதிய இஞ்ஜினின் தெர்மல் எஃப்ஃபீயன்ஸி (வெப்ப செயல்திறன்) 40 சதவிகிதம் கூட்டபட்டுள்ளது. முன்பு இருந்த மாடல்களை காட்டிலும், இந்த புதிய பிரையஸ், குறைந்த கார்பன் டை ஆக்ஸைட் மாசு உமிழ்வுக்கு வழிவகுத்து, சிறந்த எரிபொருள் சிக்கனத்தையும் வழங்கும் மாடலாக விளங்குகிறது.

வடிவமைப்பு;

வடிவமைப்பு;

2016 பிரையஸ் கார், டிஎன்ஜிஏ எனப்படும் புதிய பிளாட்பார்மில் (தடத்தில்) வடிவமைக்கபட்டுள்ளது. இந்த டிஎன்ஜிஏ பிளாட்பார்மானது, இந்த 2016 பிரையஸ் மாடலுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.

லேசர் ஸ்க்ரூ வெல்டிங்கள் மற்றும் மிக வலுவான ஒட்டும்பொருட்களின் உபயோகங்களால், முன்பு இருந்த மாடல்களை காட்டிலும், புதிய 2016 பிரையஸ் காரின் பிஃரேம்கள் 60 சதவிகிதம் கூடுதல் உறுதிதன்மையுடன் உள்ளது.

2016 பிரையஸ் மாடலின் பூட் ஸ்பேஸ் கனிசமாக உயர்த்தபட்டுள்ளது. இதன் தேக்கும் கொள்ளளவு, 502 லிட்டர் என்ற அளவில் இருக்க உள்ளது.

அறிமுகம் செய்யபடும் விதம்;

அறிமுகம் செய்யபடும் விதம்;

இந்த நான்காம் தலைமுறையை சேர்ந்த 2016 டொயோட்டா பிரையஸ், சிபியூ அல்லது கம்ப்லீட்லி பில்ட் யூனிட் எனப்படும் முழுமையாக தயாரித்து முடிக்கபட்ட காராக அறிமுகம் செய்யபட உள்ளது.

தற்போது விற்பனையில் மாடலை காட்டிலும், இந்த புதிய 2016 பிரையஸ் கார் சற்று விலை உயற்ந்ததாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.

தற்போது கிடைக்கும் பிற மாடல்கள்;

தற்போது கிடைக்கும் பிற மாடல்கள்;

தற்போதைய நிலையில், இந்தியாவில் 2 ஹைப்ரிட் மாடல்கள் மட்டுமே கிடைக்கின்றது. அவை பிரையஸ் மற்றும் கேம்ரி ஹைப்ரிட் மாடல்கள் ஆகும்.

டொயோட்டா, தங்கள் நிறுவனம் சார்பாக தயாரிக்கப்படும் மாடல்களை மேம்படுத்தி கொண்டும், புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.

விலை;

விலை;

டொயோட்டாவின் புதிய 2016 பிரையஸ் கார், 35 லட்சம் ரூபாய் முதல் 40 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Toyota To Launch The All-New Prius In India By 2016-End. This could be showcased at 2016 Auto Expo in Delhi. The All-New Prius is the fourth iteration of the Prius hybrid sedan and will replace the existing model in India.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark