புதிய டொயோட்டா இன்னோவா இந்தோனேஷியாவில் அறிமுகம் - விரைவில் இந்தியாவில்...

By Ravichandran

புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா எம்பிவி கார் இந்தோனேஷியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, அடுத்தபடியாக இந்தியாவிலும், பிற சர்வதேச சந்தைகளிலும் அறிமுகம் செய்யபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டொயோட்டா இன்னோவாவின் டீசல் மாடல் கார், 2.4 லிட்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது. இது தேர்வு முறையிலான 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

புதிய டொயோட்டா இன்னோவாவின் பெட்ரோல் மாடல் கார், 2.0 லிட்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதுவும், தேர்வு முறையிலான 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வேண்டுமா என தேர்வு செய்து கொள்ளும் வசதி வாடிக்கையாளர்களுக்கு பேஸ் வேரியண்ட்களில் இருந்தே கிடைக்கின்றது.

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு விஷயத்தில் ஏராளமான அம்சங்கள் இந்த 2016 புதிய இன்னோவாவில் உள்ளது.

இதில் 3 ஏர்பேக்கள், ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், ஈபிடி எனப்படும் எலக்ட்ரானிக் பிரேக்-ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன் உள்ளிட்டவை ஸ்டாண்டர்ட் அம்சங்களாக அனைத்து வேரியண்ட்களிலும் கிடைக்கின்றது.

இந்தோனேஷியாவில் கிடைக்கும் வேரியண்ட்கள்;

இந்தோனேஷியாவில் கிடைக்கும் வேரியண்ட்கள்;

டொயோட்டாவின் 2016 புதிய இன்னோவா இந்தோனேஷியாவில், ஜி, வி மற்றும் க்யூ என்ற மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

டீசல் மாடலின் விலை;

டீசல் மாடலின் விலை;

ஜி வேரியண்ட் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) - 310.1 மில்லியன் இந்தோனேஷிய ருபியா

(இந்திய மதிப்பில் 14.95 லட்சம் ரூபாய்)

ஜி வேரியண்ட் (ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்) - 331.6 மில்லியன் இந்தோனேஷிய ருபியா

(இந்திய மதிப்பில் 16.05 லட்சம் ரூபாய்)

வி வேரியண்ட் (மேனுவல்) - 357.5 மில்லியன் இந்தோனேஷிய ருபியா

( இந்திய மதிப்பில் 17.23 லட்சம் ரூபாய்)

வி வேரியண்ட் (ஆட்டோமேட்டிக்) - 377.3 மில்லியன் இந்தோனேஷிய ருபியா

( இந்திய மதிப்பில் 18.18 லட்சம் ரூபாய்)

க்யூ வேரியண்ட் (மேனுவல்) - 402.4 மில்லியன் இந்தோனேஷிய ருபியா

( இந்திய மதிப்பில் 19.39 லட்சம் ரூபாய்)

க்யூ வேரியண்ட் (ஆட்டோமேட்டிக்) - 423.8 மில்லியன் இந்தோனேஷிய ருபியா ( இந்திய மதிப்பில் 20.43 லட்சம் ரூபாய்)

இந்தோனேஷியாவில் பெட்ரோல் மாடல் விலை;

இந்தோனேஷியாவில் பெட்ரோல் மாடல் விலை;

ஜி வேரியண்ட் (எம்டி-மேனுவல் டிரான்ஸ்மிஷன்) - 282 மில்லியன் இந்தோனேஷிய ருபியா

(இந்திய மதிப்பில் 13.59 லட்சம் ரூபாய்)

ஜி வேரியண்ட் (ஏடி-ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்) - 302.2 மில்லியன் இந்தோனேஷிய ருபியா

(இந்திய மதிப்பில் 14.56 லட்சம் ரூபாய்)

வி வேரியண்ட் (எம்டி) - 325.6 மில்லியன் இந்தோனேஷிய ருபியா

(இந்திய மதிப்பில் 15.74 லட்சம் ரூபாய்)

வி வேரியண்ட் (ஏடி) - 345.2 மில்லியன் இந்தோனேஷிய ருபியா

(இந்திய மதிப்பில் 16.69 லட்சம் ரூபாய்)

க்யூ வேரியண்ட் (எம்டி) - 364.7 மில்லியன் இந்தோனேஷிய ருபியா

(இந்திய மதிப்பில் 17.58 லட்சம் ரூபாய்)

க்யூ வேரியண்ட் (ஏடி) - 384.8 மில்லியன் இந்தோனேஷிய ருபியா

(இந்திய மதிப்பில் 18.6 லட்சம் ரூபாய்)

2016 புதிய இன்னோவாவின் வீடியோ;

2016 புதிய இன்னோவாவின் வீடியோவை இங்கே காணலாம்..

இதற தொடர்புடைய செய்திகள்;

இதற தொடர்புடைய செய்திகள்;

புதிய டொயோட்டா இன்னோவா காரை பழைய மாடலிலிருந்து வேறுபடுத்தும் அம்சங்கள்!

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X