பருவ மழை காலத்துக்கான சர்வீஸ் பேக்கேஜுகள்: டொயோட்டா அறிமுகம்!

Written By:

பருவ மழை காலம் துவங்குவதையடுத்து, கார்களுக்கு சிறப்பு பராமரிப்பு திட்டங்களை டொயோட்டா கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

'Monsoon Magic with Q Service' என்ற பெயரில் நாடுமுழுவதும் உள்ள டொயோட்டா டீலர்ஷிப்புகளில் இந்த சிறப்பு பராமரிப்பு திட்டங்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

டொயோட்டா கார்
 

பருவமழை காலத்தை எதிர்கொள்ளும் விதத்தில் வைப்பர் பரிசோதனை, அன்டர்பாடி பாதுகாப்பு திட்டங்கள், பெயிண்ட்டை பாதுகாப்பதற்கான விசேஷ பாலிஷ் மற்றும் இதர பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சேவை திட்டங்களை இந்த சிறப்பு பராமரிப்பு முகாம்கள் மூலமாக வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

இந்த மாதமும், அடுத்த மாதம் டொயோட்டா டீலர்ஷிப்புகளில் இந்த சிறப்பு பராமரிப்பு சேவை திட்டங்களை வாடிக்கையாளர்கள் பெற்று தங்களது காரை பாதுகாத்துக் கொள்ள அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு அருகாமையிலுள்ள டொயோட்டா டீலரை அணுகவும்.

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Kirloskar Motor greets this monsoon season with the announcement of the 'Monsoon Magic with Q Service' across India.
Story first published: Saturday, June 6, 2015, 10:18 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark