இந்திய - ஆப்பிரிக்க மாநாட்டிற்கு பயன்படுத்த 55 டொயோட்டா கேம்ரி கார்கள் ரெடி

டொயோட்டா கார் நிறுவனம் புது டெல்லியில் நடைபெறும் 3- வது இந்திய- ஆப்பிரிக்க உச்சிமாநாட்டிற்கு 55 கேம்ரி கார்களை வழங்குகிறது.

3 வது இந்திய ஆபிரிக்க உச்சிமாநாடு இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் அக்டோபர் 26-ஆம் தேதி துவங்கி, 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ள வரும் தலைவர்கள் மற்றும் தூதர்களின் போக்குவரத்திற்கு இந்த கேம்ரி கார்கள் பயன்படுத்தப்படுகிறது. இதற்கா, 55 கேம்ரி கார்களுக்கான விற்பனை ஆர்டர்களை மத்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சகம் கொடுத்துள்ளது.

இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் அறிமுகம்

டொயோடடா கேம்ரி ஹைபிரிட் கார்கள், 32 லட்சம் ரூபாய் என்ற விலையில், ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இது தான், இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் முதல் ஹைப்ரிட் கார்களாகும். மேலும், கேம்ரி கார்கள் தான், இந்திய அரசாங்கத்தின் எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களுக்கான மானியத திட்டத்தின் கீழ், சிறப்பு ஊக்கத்தொகை பெற்று விற்பனை செய்யப்படும் மாடலாக உள்ளது.

ஹைபிரிட் சிஸ்டம்

ஹைபிரிட் சிஸ்டம்

டொயோட்டா கேம்ரி ஹப்ரிட் 2.5 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் பெட்ரோல் இஞ்ஜின் 158 பிஹெச்பி மற்றும் 213 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதன் எலக்ட்ரிக் மோட்டார் 140 பிஹெச்பியும், 270 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் இஞ்ஜின்களின் கூட்டு இயக்கத்தின் மூலம், 202 பிஹெச்பி வரையிலான திறன் வெளிப்படுத்த கூடியவையாக உள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

இந்த காரில் 7 ஏர்பேக்குகள், வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல், எலக்ட்ரானிக்கல் கண்ட்ரோல்ட் பிரேக் (ஈ.சி.பி), லேன் சேஞ்ஜ் இண்டிகேட்டர், ஸ்பீட் சென்ஸிங் ஆட்டோ கிளாக், ரியர் கேமரா, பேக் ஸோனார் கொண்ட கிளியரன்ஸ், ஈ.பி.டி கொண்ட ஏ.பி.எஸ், பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகள், இந்த டொயோட்டா கேம்ரி காரில் உள்ளன.

பிரதமருடன் பேச்சு

பிரதமருடன் பேச்சு

செப்டம்பர் 2015-ல், டொயோட்டாவின் உயர் அதிகாரி டகெஷி உசியமாடா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, இந்திய ஆபிரிக்க உச்சிமாநாட்டிற்கு இந்த டொயோட்டா கேம்ரி கார்களை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக, டொயோட்டா கிர்லோஸ்கரின் உயர் அதிகாரி என்.ராஜா தெரிவித்தார்.

தனி நபர்களும் அதிக அளவில் டொயோட்டா கேம்ரி போன்ற ஹைப்ரிட் வாகனங்களை உபயோகித்தால் மாத்திரமே, கூடுதல் அளவில் சுற்றுசூழலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என என்.ராஜா கூறினார்.

டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் காரை இந்தியாவிலேயே தயாரித்து இந்தியா மற்றும் உலகின் பிற நாடுகளுக்கு வழங்குவதே, சுற்றுசூழலுக்கு சாதகமான வாகனங்கள வழங்குவதில், டொயோட்டாவின் அர்ப்பணிப்பு தன்மை வெளிப்படுவதாகவும் என்.ராஜா தெரிவித்தார்.

பென்ஸ் கார்களுக்கும் ஆர்டர்

பென்ஸ் கார்களுக்கும் ஆர்டர்

இந்திய-ஆப்பிரிக்க மாநாட்டிற்கு 55 மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார்களையும் மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் ஆர்டர் செய்து வாங்கியிருப்பது நினைவுகூறத்தக்கது.

Most Read Articles
English summary
Toyota Provides 55 Camry Hybrids For The 3rd India Africa Forum Summit. The India Africa Forum Summit is being held from 26th to 29th October 2015 in New Delhi. Toyota has sold more than 8 million hybrid vehicles globally.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X