இந்தியாவில், டொயோட்டா கரொல்லா கார்களுக்கு மீண்டும் ரீகால்!

Written By:

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட டொயோட்டா கரொல்லா கார்களை திரும்ப அழைக்க இருப்பதாக டொயோட்டா அறிவித்துள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2008 ஜூலை வரை இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட டொயோட்டா கரொல்லா கார்களின் முன்புற பயணி அமரும் பக்கத்திற்கான ஏர்பேக்கில் தொழில்நுட்ப பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Toyota Recall
 

இதையடுத்து, அந்த தொழில்நுட்ப பிரச்னையை சரிசெய்து தருவதற்காக, டொயோட்டா கரொல்லா கார்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன. இந்த ஏர்பேக்குகளை ஜப்பானை சேர்ந்த தகட்டா நிறுவனம் சப்ளை செய்துள்ளது.

இதே பிரச்னைக்காக லக அளவில் 2.86 மில்லியன் கார்களை டொயோட்டா திரும்ப அழைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், ஒரே ஆண்டிற்குள் இந்தியாவில் மூன்று முறை டொயோட்டா கரொல்லா கார்கள் திரும்ப அழைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Japanese car maker Toyota is recalling more than 7,100 units of its executive sedan Corolla manufactured between April 2007 and July 2008 and sold in India to fix defective passenger-side airbags, supplied by Japanese component maker Takata.
Story first published: Tuesday, July 7, 2015, 9:36 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark