கூகுளுக்கு போட்டியாக டிரைவரில்லா கார் நுட்பத்தை உருவாக்கும் உபேர் டாக்சி

Posted By:

கூகுளுக்கு போட்டியாக டிரைவரில்லா கார் தொழில்நுட்பத்தை அமெரிக்காவை சேர்ந்த உபேர் டாக்சி நிறுவனம் உருவாக்க இருக்கிறது.

அமெரிக்காவின் கார்னிக் மெல்லன் ஆராய்ச்சி பல்கலைகழகத்துடன் கூட்டணி அமைத்துள்ள உபேர் நிறுவனம், டிரைவரில்லா காரை உருவாக்குவதற்காக பிட்ஸ்பர்க்கில் தனி ஆராய்ச்சி மையத்தையும் அமைத்திருக்கிறது.

Uber Taxi
 

இந்த ஆராய்ச்சி மையத்தில், டிரைவரில்லா கார் தொழில்நுட்பம், பயணிகள் பாதுகாப்பு நுட்பங்கள் மற்றும் டாக்சி போக்குவரத்துக்கான வரைபட நுட்பம் போன்றவற்றை தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

உபேர் டாக்சி நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் ஓர் முக்கிய முதலீட்டாளராக இருக்கும் நிலையில், உபேர் நிறுவனமும் டிரைவரில்லா கார் தொழில்நுட்பத்தை சொந்தமாக தயாரிக்க இருப்பதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று, உபேர் டாக்சிக்கு போட்டியாக, கூகுள் நிறுவனமும் சொந்தமாக டாக்சி அப்ளிகேஷனை உருவாக்கி சோதித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
Uber has formed a partnership with Carnegie Mellon University to develop driverless car and mapping technology, potentially putting the car-hailing company in direct competition with one of its biggest investors Google. 
Please Wait while comments are loading...

Latest Photos