கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற புதிய ஃபோர்டு என்டெவர்!

Written By:

ஆஸ்திரேலிய என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில், புதிய ஃபோர்டு என்டெவர் எஸ்யூவி) 5 நட்சத்திர தர மதிப்பீட்டை பெற்றுள்ளது.

வெளிநாடுகளில் எவரெஸ்ட் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த கார், விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வர உள்ளது. இந்த எஸ்யூவி-வை சர்வதேச சந்தைகளில் விற்பதற்கு கிராஷ் டெஸ்ட்களில் தேர வேண்டியது அவசியமாகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் ஆஸ்திரேலிய என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட் எனப்படும் பாதுகாப்பு சோதனையில் புதிய ஃபோர்டு என்டெவர் 5 நட்சத்திர தர மதிப்பீட்டை பெற்றிருக்கிறது.

மோதல் சோதனை

மோதல் சோதனை

பல்வேறு பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையில், மொத்தமாக கணக்கிடப்படும் 37 புள்ளிகளில், ஃபோர்டு என்டெவர் 35.38 புள்ளிகள் பெற்றுள்ளது.

மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத்தில், ஃபோர்டு என்டெவர் எஸ்யூவியின் முன்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதிகளை மோதச் செய்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், அதிகபட்ச தரமதிப்பீட்டை பெற்று அசத்தியிருக்கிறது.

மதிப்பீடு

மதிப்பீடு

லேடர் ஃபிரேம்-மை அடிப்படையாக கொண்டு, ஃபோர்டின் இந்த என்டெவர் எஸ்யூவி வடிவமைக்கபட்டுள்ளது.

முன்புற மோதல் சோதனையில் 16 புள்ளிகளுக்கு என்டெவர் எஸ்யூவி 15.98 புள்ளிகளை பெற்றுள்ளது. பக்கவாட்டு மோதல் சோதனையில், 16 புள்ளிகளுக்கு, 16 புள்ளிகளை பெற்று அசத்தியது. என்டெவர் கார், பாதசாரிகளின் பாதுகாப்பு அம்சத்திலும் ஏற்க கூடிய அளவிலான மதீப்பீடை பெற்றுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

ஃபோர்டு என்டெவர், 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் என்ற 2 இஞ்ஜின் வகைகளில் கிடைக்கிறது. இந்த இஞ்ஜின்கள் தேர்வு முறையில், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதிகளுடன் கிடைக்கின்றது.

ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷனலாகவும் அல்லது 4 வீல் டிரைவ் சிஸ்டம் முறையில் வாகனத்தை இயக்கும் திறனை இந்த இஞ்ஜின்கள் அளிக்கிறது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

ஃபோர்டு என்டெவர் எஸ்யூவியின் பேஸ் மாடலில் கூட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

ஏர்பேக்குகள், சைட் கர்டெய்ன் ஏர்பேக்குகள், சீட் பெல்ட் ரிமைண்டர், எமர்ஜென்சி பிரேக் அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஆன்ட்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் எலக்ட்ரானிக் பிரேக்-ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

இந்தியாவை பொறுத்த வரையில், ஃபோர்டு என்டெவர் காரானது டொயோட்டா ஃபார்ச்சூனர், ஹூண்டாய் சான்ட்டா ஃபே, சாங்யோங் ரெக்ஸ்டன், மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட், ஷெவ்ரோலே ட்ரெய்ல்பிளேசர் உள்ளிட்ட கார்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

இந்தியாவில் இந்த கார்களின் விலை நிர்ணயம் செய்வது மிக முக்கியமான விஷயமாக இருந்தது. கார்களின் விலை நிர்ணய விவகாரத்தில், ஃபோர்டு இந்தியா சிறப்பான முடிவுகளை எடுத்துள்ளது.

கிராஷ் டெஸ்டின் வீடியோ

இந்த கிராஷ் டெஸ்டின் வீடியோவை காணலாம்.

English summary
Upcoming New Ford Endeavour has secured 5-Star ANCAP Safety Rating. Ford Endeavour was subjected to frontal and offset crashes at a speed of 64km/h and has achieved a 5-Star ANCAP rating.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark