டெல்லியில் வாங்கபடும் வாகனங்களின் விலை இனி உயருகிறது ?

Written By:

டெல்லியில் வாங்கப்படும் வாகனங்களின் விலை இனி உயரும் என தெரிகிறது.

தற்போதைய நிலையில், டெல்லியில் வாகனங்களின் விலை, மற்ற இடங்களை காட்டிலும் சற்று குறைவாகவே உள்ளது. அங்கு அமலில் உள்ள வரி முறைகள் உள்ளிட்டவற்றால் இது சாத்தியமாகிறது. ஆனால், இனி டெல்லியிலும் வாகனங்களின் விலையும் உயர உள்ளது. இதற்கு முக்கிய காரணம்,அரசால் விரைவில் அமலுக்கு வர உள்ள ஒரு முறை பார்க்கிங் கட்டண முறை தான்.

டெல்லி தான், உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக உள்ளது. டெல்லி கூடுதல் மாசு அடைவதை குறைப்பதற்காகவும், மக்கள் அதிக அளவில் வாகனங்களை வாங்குவதை குறைப்பதற்காகவும், இந்த ஒரு முறை பார்க்கிங் கட்டணம் செலுத்தும் முறை கொண்டு வரப்பட உள்ளது.

இந்த ஒரு முறை பார்க்கிங் கட்டண முறையால், இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கபட உள்ளது. பயணியர் வாகனங்களுக்கும், இரு சக்கர வாகனங்களுக்கும், வாங்கப்படும் வாகன மாடல் மற்றும் வாகனத்தின் மதிப்பு படி, இந்த பார்க்கிங் கட்டணம் வசூலிக்கபட உள்ளது.

எந்தெந்த வாகனங்களுக்கு, எப்படிபட்ட பார்க்கிங் கட்டணங்கள் வசூலிக்கபட உள்ளது என விரிவாக ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

மோட்டர்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள்;

மோட்டர்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள்;

60,000 ரூபாய் வரையிலான விலையில் விற்கப்படும் மோட்டர்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு, ஒரு முறை பார்க்கிங் கட்டணமாக ரூபாய் 1,000 விதிக்கபடும்.

60,000 ரூபாய்-க்கு கூடுதலான விலையில் விற்கப்படும் மோட்டர்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு, வாகனத்தின் மதிப்பில், 2 சதவிகிதம், ஒரு முறை பார்க்கிங் கட்டணமாக முன்னதாகவே செலுத்தப்பட வேண்டும்.

Photo credit: Nikhilb239/Wiki Commons

ரூ. 4 லட்சதிற்கு குறைவான நான்கு சக்கர வாகனங்கள்;

ரூ. 4 லட்சதிற்கு குறைவான நான்கு சக்கர வாகனங்கள்;

ரூ. 4,00,000 அல்லது அதற்கு குறைவான விலையில் விற்கப்படும் வாகனங்களுக்கு, ரூபாய் 8,000 ஒரு முறை பார்க்கிங் கட்டணமாக வசூலிக்கப்படும்.

Photo credit: Ramesh NG/Wiki Commons

ரூ. 4,00,000 - ரூ.6,00,000 வரையிலான நான்கு சக்கர வாகனங்கள்;

ரூ. 4,00,000 - ரூ.6,00,000 வரையிலான நான்கு சக்கர வாகனங்கள்;

ரூ. 4,00,000 முதல் ரூ.6,00,000 வரையிலான வாகனங்களுக்கு, ரூ. 16,000 ஆல்லது வாங்கப்பட உள்ள வாகனத்தின் மதிப்பில் 4 சதவிகித தொகை, ஒரு முறை பார்க்கிங் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ரூ. 8,00,000 - ரூ. 12,00,000 வரையிலான நான்கு சக்கர வாகனங்கள்;

ரூ. 8,00,000 - ரூ. 12,00,000 வரையிலான நான்கு சக்கர வாகனங்கள்;

ரூ. 4,00,000 முதல் ரூ.6,00,000 வரையிலான வாகனங்களுக்கு, ரூ. 48,000 அல்லது வாங்கப்பட உள்ள வாகனத்தின் மதிப்பில் 6 சதவிகித தொகை, ஒரு முறை பார்க்கிங் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ரூ. 12,00,000 - ரூ. 20,00,000 வரையிலான நான்கு சக்கர வாகனங்கள்;

ரூ. 12,00,000 - ரூ. 20,00,000 வரையிலான நான்கு சக்கர வாகனங்கள்;

ரூ. 12,00,000 - ரூ. 20,00,000 வரையிலான நான்கு சக்கர வாகனங்களுக்கு, 96,000 ரூபாய் அல்லது வாகனத்தின் விலையில் 8 சதவிகித தொகை, ஒரு முறை பார்க்கிங் கட்டணமாக வசூலிக்கப்படும்.

லக்சுரி வாகனங்கள் (சொகுசு வாகனங்கள்);

லக்சுரி வாகனங்கள் (சொகுசு வாகனங்கள்);

லக்சுரி வாகனங்களும் (சொகுசு வாகனங்கள்) இந்த ஒரு முறை பார்க்கிங் கட்டண திட்டத்தில் கொண்டு வர பட்டுள்ளது.

ரூ. 20,00,000 முதல் ரூ. 40,00,000 லட்சம் வரை விற்கப்படும் வாகனங்களுக்கு, ரூ 2 லட்சம் அல்லது வாகனத்தின் விலையில் 10 சதவிகித தொகை, ஒரு முறை பார்க்கிங் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ரூ. 40,00,000 லட்சத்திற்கும், கூடுதலான லக்சுரி வாகனங்கள்;

ரூ. 40,00,000 லட்சத்திற்கும், கூடுதலான லக்சுரி வாகனங்கள்;

ரூ. 40,00,000 லட்சத்திற்கும் கூடுதலான விலையில் விற்கப்படும் வாகனங்களுக்கு, ரூ 6 லட்சம் அல்லது வாகனத்தின் விலையில் 10 சதவிகித தொகை, ஒரு முறை பார்க்கிங் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.

கமர்ஷியல் வாகனங்கள், பஸ்கள், ஆட்டோக்கள்;

கமர்ஷியல் வாகனங்கள், பஸ்கள், ஆட்டோக்கள்;

கமர்ஷியல் வாகனங்கள், பஸ்கள், ஆட்டோக்கள் வருடத்திற்கு ஒரு முறை, இந்த ஒரு முறை பார்க்கிங் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

ஒரு முறை கட்டணம் போன்ற புதிய விதிமுறைகளினால், டெல்லியில் மக்கள் வாகனங்கள் வாங்கும் விஷயத்தில் பெரிய அளவிலான மாறுதல்கள் நிகழ வாய்ப்புகள் உள்ளது.

English summary
Vehicles To Get Costlier In Delhi With One-Time Parking Fees. Vehicles are to get costlier in the capital city of India, Delhi with the introduction of one-time parking fees. In an attempt to control vehicle buying and pollution in India's capital, a new hike is proposed by the Government.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark