பாலைவன மணலில் டிரிஃப்ட் செய்த லம்போர்கினி ஹுராகேன் கார் - வீடியோ

Written By:

லம்போர்கினி ஹுராகேன் பாலைவன மணலில் டிரிஃப்ட் செய்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

லம்போர்கினி கார்கள் அடிக்கடி தீவிபத்துக்களில் சிக்கி பிரபலமாகி வந்தது. சமீப காலமாக, லம்போர்கினி கார்களை வைத்திருப்பவர்கள், மூளை இல்லாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மேற்கொள்ளும் வேடிக்கையான செயல்களை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோவில், பச்சை நிற லம்போர்கினி ஹுராகேன் காரை கொண்டவர், தனது காரின் இயங்கும் திறனை, மிக வித்தியாசமான முறையில் சோதித்து பார்கிறார்.

லம்போர்கினி ஹுரகேன் கார், 5.2 லிட்டர், வி10 இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 602 பிஹெச்பி-யையும், 560 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த முழு திறனும் 7-ஸ்பீட் எல்டிஎஃப் ட்யூவல்-கிள்ட்ச் டிரான்ஸ்மிஷன் மூலம் அனைத்து சக்கரங்களுக்கும் பரிமாற்றப்படுகிறது.

நின்ற நிலையில் இருந்து, மணிக்கு 100 கிலோமீட்டர் என்ற வேகத்தை வெரும் 3.2 நொடிகளில் எட்டிவிடும். இது அதிகபடியாக மணிக்கு 225 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

இந்த வினோதமான மனிதர் செய்த செயலை மீறி, அவருடைய காரின் பச்சை பெயிண்ட் வேலைப்பாடுகள் ஒழுங்காக இருக்கிறதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

இந்த லம்போர்கினி ஹுரகேன் கொண்டவரின் வினோத செயலின் வீடியோ, ஒரு விதத்தில் சிரிக்கவும் வைக்கிறது.

<iframe width="600" height="450" src="https://www.youtube.com/embed/irX01BjhCfU" frameborder="0" allowfullscreen></iframe>

English summary
Video of Lamborghini Huracan Going Sand Drifting in desert Sand released. It seems these Lamborghini drivers need to get their Brains &#13; checked. The owner of the green Huracan pictured in this video, desired to test his Lamborghini Huracan driving capabilities in a very rude &#13; manner.
Story first published: Thursday, November 19, 2015, 15:31 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more