மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

Posted By:

குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் புதிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

வடிவமைப்பிலும், வசதிகளிலும் மட்டுமின்றி கூடுதல் எரிபொருள் சிக்கனம் தரும் வகையில், இதன் எஞ்சின்கள் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த புதிய வென்ட்டோவில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள், விலை விபரம் உள்ளிட்ட தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 டிசைன்

டிசைன்

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் புதி முகப்புடன் கவர்ச்சிகரமாக மாறியுள்ளது. புதிய பானட், முப்பட்டை க்ரோம் க்ரில் அமைப்பு, புதிய பம்பர், பனி விளக்குகள் என வசீகரிக்கிறது. பின்புறத்தில் முப்பரிமான தோற்றத்தை அளிக்கும் டெயில் லைட்டுகள், பம்பர் மற்றும் புகைப்போக்கி குழாயில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. புதிய 15 இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டிருப்பதும் காரின் அழகிற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியர் இருவிதமான வண்ணங்களில் கிடைக்கும். க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், எலக்ட்ரிக்கல் கன்ட்ரோல் சிஸ்டம் கொண்ட சாலையின் பின்புறத்தை காட்டும் கண்ணாடிகள், புதிய எல்இடி இன்டிகேட்டர்கள், டெட் பெடல், கூல்டு க்ளவ் பாக்ஸ் உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

டர்போசார்ஜ்டு பெட்ரோல் மாடல்

டர்போசார்ஜ்டு பெட்ரோல் மாடல்

புதிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரில் டர்போசார்ஜர் துணையுடன் இயங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 105 பிஎஸ் பவரையும், 175 என்எம் டார்க்கையும் வழங்கும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கொண்டதாக மட்டுமே கிடைக்கும்.

சாதாரண பெட்ரோல் மாடல்

சாதாரண பெட்ரோல் மாடல்

டர்போசார்ஜர் இல்லாமல் இயங்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎஸ் பவரையும், 153 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த எஞ்சின் கொண்ட மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக மட்டுமே கிடைக்கும்.

டீசல் மாடல்கள்

டீசல் மாடல்கள்

புதிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் டீசல் மாடலில் 1.5 லிட்டர் டிடிஐ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க்கையும் வழங்கும். டீசல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கும். இதன் எஞ்சின் சிறிது கூடுதல் எரிபொருள் சிக்கனம் தரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

1.2 லிட்டர் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.19 கிமீ மைலேஜையும், 1.6 லிட்டர் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16.09 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று, டீசல் மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 20.64 கிமீ மைலேஜையும், டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 21.50 கிமீ மைலேஜையும் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

 பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

இந்த புதிய வென்ட்டோ காரின் கம்போர்ட்லைன் மற்றும் ஹைலைன் வேரியண்ட்டுகளில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இருக்கிறது. டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் காரின் பேலன்ஸ் குறையும் சமயங்களில் எஞ்சின் பவரை தானியங்கி முறையில் குறைத்து, ஒவ்வொரு சக்கரத்திற்கும் தேவையான ஆற்றலை மட்டும் செலுத்தும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் சிஸ்டம், மலைச் சாலைகளில் காரை பின்னோக்கி நகர்ந்து கட்டுப்பாட்டை இழப்பதை தவிர்க்கும் ஹில் ஹோல்டு தொழில்நுட்பம் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், ஓட்டுனர் மற்றும் முன்புற பயணிக்கான டியூவல் ஏர்பேக்குகள் அனைத்து வேரியண்ட்டுகளிலும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. கைகள் மாட்டிக் கொள்ளாமல் தவிர்க்கும் பின்ச் சிஸ்டம் கொண்ட பவர் விண்டோ ஆகியவை முக்கியமானவையாக இருக்கின்றன.

வண்ணங்கள்

வண்ணங்கள்

டைட்டானியம் பீஜ், கார்பன் ஸ்டீல் போன்ற புதிய வண்ணங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர்த்து, கேண்டி ஒயிட், டாஃபி பிரவுன், நைட் புளூ மற்றும் ரிஃப்லெக்ஸ் சில்வர் ஆகிய வண்ணங்களிலும் கிடைக்கும்.

விலை விபரம்

விலை விபரம்

பெட்ரோல் மாடல்கள்

ட்ரென்ட்லைன் 1.6லி (பெ): ரூ.7.85 லட்சம்

கம்ஃபோர்ட்லைன் 1.6லி (பெ) :ரூ. 8.67 லட்சம்

ஹைலைன் 1.6லி: ரூ.9.42 லட்சம்

கம்ஃபோர்ட்லைந் 1.2லி டிஎஸ்ஐ: ரூ.9.87 லட்சம்

ஹைலைன் 1.2லி டிஎஸ்ஐ: ரூ.10.62 லட்சம்

டீசல் மாடல் விலை

டீசல் மாடல் விலை

டீசல் மாடல்கள்

ட்ரென்ட்லைன் 1.5லி: ரூ.9.10 லட்சம்

கம்ஃபோர்ட்லைன் 1.5லி: ரூ.9.92 லட்சம்

ஹைலைன் 1.5லி: ரூ.10.67 லட்சம்

கம்போர்ட்லைன் 1.5லி டிஎஸ்ஜி: ரூ.11.12 லட்சம்

ஹைலைன் 1.5லி: ரூ.11.87 லட்சம்

 
English summary
Volkswagen India has launched its refreshed Vento in the country on 23rd of June, 2015. The German designers have provided this sedan with mild updates for 2015.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark