இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் போலோ கார் விற்பனை தற்காலிகமாக நிறுத்தம்!

இந்தியாவில், ஃபோக்ஸ்வேகன் போலோ கார் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக, தனது அனைத்து டீலர்களுக்கும் ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் அவசர கடிதம் அனுப்பியிருக்கிறது. அதில், போலோ காருக்கான முன்பதிவு மற்றும் டெலிவிரியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ விற்பனை திடீர் நிறுத்தம்

சர்வதேச அளவில் ஃபோக்ஸ்வேகன் டீசல் கார்களில் மாசு அளவு பிரச்னை விஸ்வரூபமெடுத்திருக்கிறது. இந்த மோசடி ஃபோக்ஸ்வேகன் குழுமத்துக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ விற்பனை திடீர் நிறுத்தம்

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கார்களிலும் மாசு அளவில் மோசடி செய்யப்பட்டிருக்கிறதா என்று அராய் அமைப்பு விசாரணை துவங்கியிருக்கிறது. இதுதொடர்பாக, ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திடமும் அறிக்கை கேட்டிருக்கிறது. மத்திய அரசும் இந்த விவகாரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

கடிதம்

கடிதம்

இந்த பரபரப்பான சூழலில், போலோ கார் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு டீலர்களுக்கு ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அவசர கடிதம் அனுப்பியிருக்கிறது. இதுதொடர்பாக, அடுத்த அறிவிப்பு வரும் வரை அனைத்து போலோ கார் மாடல்களின் முன்பதிவு மற்றும் டெலிவிரி வழங்குவதை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

காரணம்

காரணம்

டீசல் கார்களில்தான் மாசு அளவு பிரச்னை இருக்கிறது. ஆனால், டீசல் மட்டுமின்றி, பெட்ரோல் கா்ரகளின் விற்பனையையும் ஃபோக்ஸ்வேகன் நிறுத்தி வைத்திருப்பது கவனித்தக்கது. அக்கடிதத்தில் விற்பனை நிறுத்தப்படுவதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், மாசு அளவு பிரச்னையால் விற்பனை நிறுத்தப்படவில்லை, இன்று மாலை உரிய காரணத்தை வெளியிடுவோம் என்று அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

கிடுக்கிப்பிடி

கிடுக்கிப்பிடி

மத்திய அரசின் நெருக்குதல் காரணமாகவே, ஃபோக்ஸ்வேகன் இந்த விஷயத்தில் தீவிரமாக நடவடிக்கைளை எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

Most Read Articles
English summary
German car maker Volkswagen has directed its dealers not to sell any Polo, its popular hatchback model in the market with immediate effect.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X