இந்தியாவில், 1,00,000 கார்களை ஃபோக்ஸ்வேகன் திரும்ப பெறுவதாக தகவல்!

Written By:

இந்தியாவில், ஒரு லட்சம் கார்களை திரும்ப பெற ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், நவம்பர் 8, 2015 தேதி அன்றோ அல்லது அதற்கு முன்போ 1,00,000 கார்களை திரும்ப பெற்றுகொள்ளும் வாய்ப்புகள் உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் மாசு வெளிப்பாடு சோதனைகளில் தேறுவதற்காக, தவறான மென்பொருள்களை உபயோகித்த தில்லுமுல்லுவில் சிக்கியது. இதனையடுத்து, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மில்லியன் கணக்கான கார்களை திரும்ப பெற்று வருகிறது.

இந்த பிரச்னை, இந்திய வாடிக்கையாளர்களுக்கும் உள்ளதா என இந்திய அரசும் ஆராய்ந்து வருகிறது. இது தொடர்பாக, அராய் அல்லது ஆட்டோமொபைல் அஸோசியேஷன் ஆஃப் இந்தியா என்ற அமைப்பும், ஃபோக்ஸ்வேகன் நிறுவன உயர் அதிகாரிகளும் இந்த பிரச்னை தொடர்பாக சோதனைகள் நடத்தி வருகின்றனர். அப்படி ஒரு வேளை, பிரச்னை எழுந்தால், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதிக அளவில் இந்தியாவிலும் கார்களை திரும்ப பெறும் நிலை ஏற்படும்.

Volkswagen Likely To Recall 1 Lakh Cars In India

இந்திய வாகன சந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஃபோக்ஸ்வேகன், தங்கள் நிறுவனத்தின் இஞ்ஜின்களை இறக்குமதி செய்தது. இப்படிபட்ட இஞ்ஜின்களில் மாசு உமிழ்வு அனுமதிக்கபட்ட அளவுக்கு அதிகமாக இருந்தால், அந்த பாதிக்கப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டிய நிலை நேரிடும். இவ்வகையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 20,000-ற்கும் கூடுதலான ஃபோக்ஸ்வேகன் டீசல் இஞ்ஜின்களில் கூட இந்த மாசு உமிழ்வு பிரச்னை இருக்க வாய்ப்புகள் உள்ளது.

சர்வதேச அளவில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் பிரச்னைக்குறிய ஈஏ189 டீசல் இஞ்ஜின்களை, 11 மில்லியன் நான்கு சக்கர வாகனங்களுக்கு பொருத்தியுள்ளனர். மாசு உமிழ்வு சோதனைகளில் தேருவதற்காக, இந்த 11 மில்லியன் வாகனங்களிலும் அந்த ஊழல் மென்பொருள் பொருத்தப்பட்டிருந்த்தது. இந்த வாகனங்கள் அனைத்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மூலம் திரும்ப பெறப்பட உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கீழ் இயங்கும் பல்வேறு பிராண்ட் வாகனங்களின் இஞ்ஜின்களிலும் இத்தகைய சிக்கல் நிறைந்த மென்பொருள் உபயோகபடுத்தபட்டுள்ளது. ஆடி, தங்களின் 2.1 மில்லியன் கார்களின் இஞ்ஜின்கள், இந்த ஊழல் மென்பொருள் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளது. மறுபுறம், இதே வகையிலான மென்பொருள் சிக்கல் நிறைந்த இஞ்ஜினுடன் 1.2 மில்லியன் கார்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என ஷ்கோடா தெரிவித்துள்ளது.

தற்போது, போலோ, போலோ ஜிடி, கிராஸ் போலோ, நியூ வெண்டோ மற்றும் ஜெட்டா உள்ளிட்ட மாடல்கள், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சார்பாக இந்திய வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படுகிறது. தங்கள் நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்கும் நோக்கத்தில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதிக தள்ளுபடிகள், சலுகைகள் மற்றும் ஈர்க்கும் வகையில் அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை, ஃபோக்ஃபெஸ்ட் என்ற சிறப்பு பண்டிகைகால விற்பனை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இத்தகைய சூழலில், ஊழல் மென்பொருள் அல்லது #டீசல்கேட் என்றும் அழைக்கபடும் இந்த பிரச்னை, ஃபோக்ஸ்வேகன் நிறுவனதிற்கு இந்தியாவில் எழுந்துள்ளது குறிப்பிடதக்கதாகும்.

volkswagen-diesel-emission-scandal
English summary
Volkswagen Likely To Recall 1 Lakh Cars In India, due to the #DieselGate Scandal. Volkswagen India could recall over 100000 vehicles on or before November 8, 2015. Over the next few days, top officials of the company and Automotive Research Association of India (ARAI) will check if emission norms are breached.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark