பேட்டரியில் இயங்கும் ஃபோக்ஸ்வேகன் மினி வேன் தயாராகிறது!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பழமையும், பாரம்பரியும் மிக்க ஹிப்பி கேம்பர் வேன் புதிய அவதாரம் எடுக்க உள்ளது. ஆம், அந்த கேம்பர் வேனில் கால மாற்றத்துக்கு ஏற்ப, நவீன சிறப்பம்சங்களுடன் மாற்றி அறிமுகம் செய்ய ஃபோக்ஸ்வேகன் முடிவு செய்துள்ளது.

குறிப்பாக, அதிக தூரம் பேட்டரியில் இயங்கும் மாடலையும் ஃபோக்ஸ்வேகன் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த அசத்தலான எலக்ட்ரிக் மைக்ரோ பஸ் குறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 ஹிப்பி பஸ்

ஹிப்பி பஸ்

ஃபோக்ஸ்வேகன் ஹிப்பி மினி வேன் 1949 முதல் 2013 வரை பல்வேறு உருவ மாறுதல்கள் மற்றும் மாடல்களில் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், ஹிப்பி மினி வேன் விட்டுச் சென்ற இடத்தை புதிய மாடலை வைத்து நிரப்புவதற்கு ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

 மின்சார மாடல்

மின்சார மாடல்

ஃபோக்ஸ்வேகன் புல்லி கான்செப்ட் அடிப்படையில், இந்த புதிய மினி வேன் மாடல் உருவாக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஹிப்பி மினி வேனிலிருந்து அடிப்படை டிசைன் தாத்பரியங்கள் புதிய மாடலிலும் கையாளப்படும்.

ரேஞ்ச்

ரேஞ்ச்

ஃபோக்ஸ்வேகன் ஹிப்பி மினி வேனின் எலக்ட்ரிக் மாடலில், லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு வருகிறது. இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் ஏற்றினால், 405 கிமீ முதல் 490 கிமீ வரை செல்லக்கூடியதாக இருக்கும்.

அறிமுகம்

அறிமுகம்

அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற இருக்கும் நுகர்வோர் மின்னணு சாதன கண்காட்சியில் இந்த புதிய பஸ் கான்செப்ட்டை ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதைத்தொடர்ந்து, 2018ல் உற்பத்திக்கு செல்லும் என்று கணிக்கப்படுகிறது.

இதர மாடல்கள்

இதர மாடல்கள்

ஃபோக்ஸ்வேகன் மைக்ரோ பஸ் மாடல் பேட்டரியில் இயங்கும் மாடல் தவிர்த்து, பெட்ரோல் மற்றும் டீசல் மாடலிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
German car company Volkswagen is working on a brand new camper concept -- one that would run on batteries, rather than petrol, powering an electric motor driving the front wheels.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X