இந்தியாவின் அதிசக்திவாய்ந்த ஹேட்ச்பேக் மாடலாக வரும் ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ!!

By Ravichandran

அடுத்த ஆண்டு மத்தியில் ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ மாடல், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அதிசக்திவாய்ந்த இந்த புதிய ஹேட்ச்பேக் காரின் ஆய்வுப் பணிகள் தற்போது பூனே அருகில் உள்ள சகன் என்ற இடத்தில் உள்ள ஃபோக்ஸ்வேகன் ஆலை வளாகத்தில் துவங்கபட்டுள்ளது.

இந்தியாவின் அதிசக்திவாய்ந்த ஹேட்ச்பேக் கார் என்ற பெருமையை சமீபத்தில் வந்த ஃபியட் அபார்த் புன்ட்டோவுக்கு உள்ளது. ஆனால், இதைவிட அதிசக்திவாய்ந்த மாடல் போலோ ஜிடிஐ என்பது குறிப்பிடத்தக்கது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ கார், 1.8 லிட்டர், டிஎஸ்ஐ பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின் 189.30 பிஹெபி-யையும், 320 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் வகையில், இஞ்ஜினியர்கள் வடிவமைத்துள்ளனர்.

இதன் இஞ்ஜின் 7-ஸ்பீட் டிஎஸ்ஜி கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது. இந்தியாவில் அறிமுகபடுத்தபடும் மாடலுக்கு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இருக்காது.

திறன்;

திறன்;

இந்த பெர்ஃபார்மன்ஸ் ஹேட்ச்பேக், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெரும் 6.7 நொடிகளில் எட்டிவிடும்.

மேலும், ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ, உச்சபட்சமாக மணிக்கு 236 கிலோமீட்டர் வரை வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

போலோ ஜிடிஐ காரை இயக்குபவரை பொறுத்து, ஒரு லிட்டருக்கு 8.85 கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்கும் என ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிசைன்;

டிசைன்;

டிசைன்களை பொருத்த வரை, இந்த புதிய போலோ ஜிடிஐ மாடல், தற்போது இந்தியாவில் கிடைக்கும் போலோ ஜிடி காரை விட சற்று வித்தியாசமாக இருக்கும் என தெரிகிறது.

ஸ்போர்ட்டியான கார்;

ஸ்போர்ட்டியான கார்;

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சார்பாக வழங்கப்படும் கார்களிலேயே, போலோ ஜிடிஐ மாடல் தான் மிகவும் ஸ்போர்ட்டியான காராக விளங்குகிறது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

இந்த ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ, வைட் (அகலமான) பாடி கிட், ஏரோடைனமிக் ஃப்ரண்ட் (முன்) பம்பர், 17-இஞ்ச் அல்லாய் சக்கரங்கள், ரெட் ஆக்செண்ட்கள் கொண்ட ஃப்ரண்ட் (முன்) கிரில் கொண்டுள்ளது.

மேலும், இதில் ஜிடிஐ பேட்ஜிங், கிரோம் ட்யூவல் எக்ஹாஸ்ட் பைப்கள், ஸ்பாய்ளர் மற்றும் டிஃப்யூஸர் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளது.

அறிமுகம் செய்யபடும் விதம்;

அறிமுகம் செய்யபடும் விதம்;

இந்த போலோ ஜிடிஐ கார், சிகேஐ அல்லது கம்லீட்லீ நாக்ட் டவுன் முறைவில் ஃபோக்ஸ்வேகன் இந்தியா மூலம் அறிமுகம் செய்யபடுகிறது.

சிகேஐ அல்லது கம்லீட்லீ நாக்ட் டவுன் முறை என்பது, உபகரணங்கள் கொண்டு வரபட்டு அசம்பிள் செய்யப்படும் முறையாகும்.

போட்டி கார்கள்;

போட்டி கார்கள்;

போலோ ஜிடிஐ கார், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஃபளாக்‌ஷிப் ஹேட்ச்பேக்காக விளங்குகிறது.

இதனால், இந்த காருக்கு இந்தியாவில் நேரடி போட்டி காராக எந்த காரும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.

விலை;

விலை;

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ கார், சுமார் 20 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகபடுத்தபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

Most Read Articles
English summary
Volkswagen Polo GTI Is Expected To Be Launched In India By Mid-2016. Prior Launch Testing processes of the Polo GTI has commenced in Volkswagen's facility in Chakan, Pune. The Polo GTI is to be offered in the form Completely Knocked Down (CKD) unit by Volkswagen India.
Story first published: Saturday, November 28, 2015, 13:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X