2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது, ஃபோக்ஸ்வேகனின் டிகுவான் எஸ்யூவி

Posted By:

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி இந்தியாவில் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

முன்னதாக, இந்த டிகுவான் எஸ்யூவி, சர்வதேச அளவில் 2015 ஃப்ரான்க்ஃபர்ட் மோட்டர் ஷோவில் அறிமுகம் செய்யபட்டது. 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட உள்ள டிகுவான், 2016 பாதியில் இந்திய வாகன சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வடிவமைப்பு;

வடிவமைப்பு;

ஃபோக்ஸ்வேகனின் டிகுவான் எஸ்யூவி, எம்க்யூபி ப்ளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது.

இந்த எம்க்யூபி ப்ளாட்ஃபார்ம் தான் ஆடி ஏ3, ஷ்கோடா ஆக்டேவியா மற்றும் சூப்பர்ப், ஃபோக்ஸ்வேகன் கொல்ஃப், பஸ்ஸாட் மற்றும் டூரான் உள்ளிட்ட வாகனங்களுக்கும் உபயோகிக்கபட்டுள்ளது. டிகுவானின் பல்வேறு வடிவமைப்பு அம்சம்கள், கிராஸ் கூபே ஜிடீஈ கான்செப்டை அடிப்படையாக கொண்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டிகுவான் எஸ்யூவிகள், 1.8 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இஞ்ஜின்களுடன் வருகின்றது.

இதோடு மட்டுமல்லாமல், தேர்வு முறையில், ஆல்-வீல் டிரைவ் (ஏடபுள்யூடி) சிஸ்டம் மற்றும் ஃபிரன்ட் வீல் டிரைவ் (ஃஎப்டபுள்யூடி) சிஸ்டம் வசதிகளுடன், டிகுவான் எஸ்யூவிகளை ஃபோக்ஸ்வேகன் வழங்குகின்றது.

பிற மாடல்கள்;

பிற மாடல்கள்;

டிகுவான் எஸ்யூவி இந்தியாவில் அடிப்படை மாடலிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த அடிப்படை மாடல் 1.4 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ பெட்ரோல் இஞ்ஜினுடன் வர உள்ளது. இது ஃபிரன்ட் வீல் டிரைவ் (ஃஎப்டபுள்யூடி) சிஸ்டம் கொண்டதாக இருக்கும்.

பிற அம்சங்கள்;

பிற அம்சங்கள்;

முந்தைய தலைமுறை டிகுவான்களை காட்டிலும், இந்த புதிய டிகுவான் எஸ்யூவி, 50 கிலோ எடை குறைவானதாக இருக்கும்.

இதனால், கூடுதல் திறனும், கூடுதலான எரிபொருள் சிக்கனமும் (மைலேஜ்) கிடைக்கும் என தெரிகிறது. அதிக சீட்டிங் கம்ஃப்ர்ட்டுக்காகவும் (அமரும் வசதி), அதிக பூட் ஸ்பேஸ்-காக (இட வசதி), வீல் பேஸ் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகனின் சவால்;

ஃபோக்ஸ்வேகனின் சவால்;

ஃபோக்ஸ்வேகன் குழுமம், சர்வதேச அளவில் #டீசல்கேட் எனப்படும் மாசு உமிழ்வு சோதனை ஊழலில் சிக்கி தவித்து வருகிறது. ஆனால், டிகுவான் 2016-ஆம் ஆண்டு பாதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யபடுவதற்குள் நிலைமைகள் பல்வேறு விதமாக மாற வாய்ப்புகள் உள்ளது.

தற்போதைய நிலையில், இந்தியாவில் கிடைக்கும் ஃபோக்ஸ்வேகன் குழும தயாரிப்புகள், ஏதேனும் மாசு உமிழ்வு சோதனை ஊழல்களில் சிக்கியுள்ளனவா என்று ஆராய் எனப்படும் ஆட்டோமொபைல் ரிசர்ச் ஆஸோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகின்றது குறிப்பிடதக்கது.

English summary
Volkswagen Tiguan SUV To Debut At 2016 Delhi Auto Expo. Tiguan SUV will be launched in the Indian market by mid-2016. The global debut of the Tiguan (SUV) was at the 2015 Frankfurt Motor Show.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark