ஜூன் 23ல் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ ஃபேஸ்லிஃப் ரிலீஸ்... முன்பதிவு நடக்கிறது!

Written By:

வரும் 23ந் தேதி மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

மேலும், ஃபோக்ஸ்வேகன் டீலர்களில் ரூ.25,000 முன்பணம் செலுத்தி, புதிய வென்ட்டோ மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Volkswagen Vento
 

வெளிப்புறத்தில் பல மாற்றங்களை செய்து முகப்புத் தோற்றம் சிறப்பாக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக, முகப்பு க்ரில் அமைப்பு, பானட், பின்புற பம்பர் ஆகியவை புதிது.

பழைய மாடலில் இருந்த அதே எஞ்சின் ஆப்ஷன்கள்தான் இந்த புதிய மாடலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் செயல்திறன் கொண்டதாக மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

புதிய வண்ணங்களிலும் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த காரைப் பற்றிய விபரங்களை தெரிந்துகொள்வதற்கு டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்பில் இருங்கள்.

English summary
Volkswagen will be providing its Vento sedan with a facelift for the Indian market. This new and refreshed model will be introduced to the country on 23rd of June, 2015.
Story first published: Thursday, June 11, 2015, 12:41 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark