இந்தியாவில் 10,000 டிரக்குகளை விற்பனை செய்த வால்வோ!

Written By:

இந்தியாவில் இதுவரை 10,000 டிரக்குகளை விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது வால்வோ நிறுவனம்.

தனது 10,000வது டிரக்கை மஹாலெட்சுமி இன்ஃப்ரா கான்ட்ராக்ட்ஸ் நிறுவனத்துக்கு சமீபத்தில் டெலிவிரி கொடுத்தது.

Volvo Truck
 

இந்த மஹாலெட்சுமி இன்ஃப்ரா கான்ட்ராக்ட்ஸ் நிறுவனம் மட்டும் இதுவரை 350 வால்வோ டிரக்குகளை வாங்கியுள்ளது.

1998ம் ஆண்டிலிருந்து வால்வோ நிறுவனம் இந்தியாவில் டிரக்குகளை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

நவீன தொழில்நுட்பத்திலான வால்வோ டிரக்குகள் இந்திய தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதாக வால்வோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
Volvo has delivered more than 10,000 trucks in the Indian market. Volvo is the country's largest truck manufacturer in premium European segment
Story first published: Saturday, June 20, 2015, 10:01 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark