அடுத்த ஆண்டு இந்தியாவில் 7 புதிய கார்களை களமிறக்கும் வால்வோ!

Written By:

புத்தாண்டு நெருங்கி கொண்டிருக்கிறது. புதிய திட்டங்களுடன் புத்தாண்டை கொண்டாட பல்வேறு விதமான திட்டங்கள் ஒவ்வொருவர் மனதிலும் இருக்கும். ஆனால், வால்வோ சொகுசு கார் பிரியர்களுக்கு இன்னும் கூடுதலான காரணங்கள் உள்ளது.

ஆம், அடுத்த ஆண்டு 7 புதிய கார் மாடல்களை வால்வோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. அறிமுகமாகும் கார்களை குறித்த விரிவான தகவல்களை ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

1) வால்வோ வி40 கிராஸ் கண்ட்ரி;

1) வால்வோ வி40 கிராஸ் கண்ட்ரி;

முதல் மாடலான வால்வோ வி40 கிராஸ் கண்ட்ரி கார், புதிய பொலிவுடன் வர உள்ளது. இது தான், இந்தியாவில் சிறப்பாக தோன்றும் கிராஸ்ஓவர் காராக இருக்கும்.

இந்த வால்வோ வி40 கிராஸ் கண்ட்ரி கார், புதிய பம்பர்கள், ஹெட்லைட்கள் மற்றும் டெய்ல் லேம்ப்கள் மாற்றங்கள் செய்யபட்டது. மேலும், இண்டீரியர்களிலும் சில மாற்றங்கள் செய்யபட்டுள்ளது. மற்றபடி, இதன் இஞ்ஜினில் எந்த விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை.

இஞ்ஜின் ; 2.0 லிட்டர், 5-சிலிண்டர், டர்போ டீசல், 150 பிஹெச்பி |

1.6 லிட்டர், 4-சிலிண்டர், டர்போ பெட்ரோல், 180 பிஹெச்பி

2) வால்வோ வி40;

2) வால்வோ வி40;

இரண்டாவது மாடலான வால்வோ வி40 ஹேட்ச்பேக், மீண்டும் புதிய பொலிவுகளை பெற உள்ளது.

வால்வோ வி40 கிராஸ் கண்ட்ரி காரை போலவே, வால்வோ வி40 காரும் பம்பர்கள், ஹெட்லைட்கள் மற்றும் டெய்ல் லேம்ப்கள் மற்றும் ஃப்ரண்ட் கிரில் உள்ளிட்ட மாற்றங்களை பெறுகின்றது.

தற்போதைய மாடலில் உள்ள இஞ்ஜினே, இந்த புதிய வால்வோ வி40 ஹேட்ச்பேக் காருக்கும் பொருத்தப்பட உள்ளது.

இஞ்ஜின் ; 2.0 லிட்டர், 5-சிலிண்டர், டர்போ டீசல், 150 பிஹெச்பி

3) வால்வோ எஸ்60 கிராஸ் கண்ட்ரி;

3) வால்வோ எஸ்60 கிராஸ் கண்ட்ரி;

வால்வோ எஸ்60 கிராஸ் கண்ட்ரி இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் போது, அது தான், இந்தியாவில் முதல் கிராஸ்ஓவர் செடானாக இருக்கும்.

எஸ்60 செடான் காரை அடிப்படையாக கொண்டு, இந்த வால்வோ எஸ்60 கிராஸ் கண்ட்ரி மாடலின் ரைட் ஹைட் 65மில்லிமீட்டர் ஏற்றம் பெற உள்ளது. மேலும், இந்த வாகனத்தை சுற்றி அடியில், கிலாட்டிங்க்ஸ் சேர்க்கபட உள்ளது.

இஞ்ஜின் ; 2.4-லிட்டர், 5-சிலிண்டர், டர்போ டீசல், 178 பிஹெச்பி

4) வால்வோ எஸ்60 போல்ஸ்டார்;

4) வால்வோ எஸ்60 போல்ஸ்டார்;

வால்வோ எஸ்60 போல்ஸ்டார் மாடல் வருகை மிக இனிமையான விஷயம். போல்ஸ்டார் தான் வால்வோவின் திறன் வெளிபடுத்தும் பிரிவாக உள்ளது.

மெர்சிடிஸ் நிறுவனத்திற்கும் பிஎம்டபுள்யூ நிறுவனத்திற்கு, ஏஎம்ஜி மற்றும் எம் பிரிவும் எப்படி விளங்குகிறதோ, அவ்வாறு தான், வால்வோவின் திறன் வெளிபடுத்தும் பிரிவாக போல்ஸ்டார் விளங்குகிறது.

ஆற்றல்மிக்க வால்வோ எஸ்60 போல்ஸ்டார், புதுமையான பம்பர்கள், ஸ்போர்ட்ஸ் சீட்கள் மற்றும் திருத்தியமைக்கப்பட்ட என்ஜின் உள்ளிட்ட மாற்றங்களை பெறுகின்றது.

இஞ்ஜின் ; 3.0-லிட்டர், 6-சிலிண்டர், டர்போ பெட்ரோல், 345 பிஹெச்பி

5) வால்வோ எஸ்90;

5) வால்வோ எஸ்90;

வால்வோ நிறுவனத்தின் ஃபிலாக்‌ஷிப் செடானாக விளங்கும் வால்வோ எஸ்90 மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யபட உள்ளது.

இந்த காரை பார்த்தால், அது எவ்வளவு அம்சமாக விளங்குகின்றது என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லாமல் தவிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த வால்வோ எஸ்90, அடிப்படையில் எக்ஸ்சி90 எஸ்யூவி-யின் லக்‌ஷுரி செடான் வெர்ஷனாக விளங்குகிறது. எனவே, வால்வோ எஸ்90 மற்றும்

எக்ஸ்சி90 எஸ்யூவின் இண்டீரியர் அமைப்புகளில் அதிக ஒற்றுமைகள் இருக்கலாம்.

இஞ்ஜின் ; 2.0-லிட்டர், 4-சிலிண்டர், ட்வின் டர்போ டீசல், 225 பிஹெச்பி (எதிர்பார்க்கபடும் இஞ்ஜின்)

6) வால்வோ எக்ஸ்சி90;

6) வால்வோ எக்ஸ்சி90;

எக்ஸலன்ஸ் வால்வோ, தங்களின் எக்ஸ்சி90 எஸ்யூவி-யின் இரண்டு வெர்ஷன்களையும் இந்தியாவிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அவை,

எக்ஸ்சி90 ஸ்டாண்டர்ட் எஸ்யூவி மற்றும் எக்ஸ்சி90 எக்ஸலன்ஸ் மாடல்களாகும்.

எக்ஸ்சி90 எக்ஸலன்ஸ் மாடல், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் மற்றும் ரேஞ்ஜ் ரோவர் காருக்கு போட்டியாக விளங்க உள்ளது.

எக்ஸ்சி90 எக்ஸலன்ஸ் மாடல், மஸாஜர்களுடனான 4-சீட் கான்ஃபிகரேஷன் கொண்டுள்ளது.

மேலும், ரியர் பக்கத்தில் உள்ள பயணிகளுக்கு டச் ஸ்க்ரீன் மானிட்டர் (தொடுதிரை மானிட்டர்), பிரிட்ஜ் வசதி, சூடு படுத்தும் மற்றும் கூளிங் வாய்ப்புகள் கொண்ட கப் ஹோல்டர்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.

இஞ்ஜின் ; 2.0-லிட்டர், 4-சிலிண்டர்கள், ட்வின் டர்போ டீசல், 225 பிஹெச்பி (எதிர்பார்க்கபடும் இஞ்ஜின்)

7) வால்வோ எக்ஸ்சி90 ஆர்-டிசைன்;

7) வால்வோ எக்ஸ்சி90 ஆர்-டிசைன்;

எக்ஸ்சி90 மாடலின் இரண்டாவது வெர்ஷனாக விளங்குவது ஆர்-டிசைன் ஆகும். வால்வோ எக்ஸ்சி90 ஆர்-டிசைன் புதுபிக்கபட்ட மற்றும் ஸ்போர்டியான ப்ரண்ட் மற்றும் ரியர் பம்பர்கள், ட்வின் எக்ஸ்ஹாஸ்ட்கள் கொண்டுள்ளது.

தாழ்வான உயரம் கொண்ட ஸ்டாண்டர்ட் மாடல்களின் டயர்களை காட்டிலும், இது பெரிய சக்கரங்களை கொண்டுள்ளது. மேலும், எக்ஸ்டீரியர்களில்

சில்வர் ஆக்ஸ்ண்ட்கள் கொண்டுள்ளது.

எக்ஸ்சி90 ஆர்-டிசைன், எஸ்யூவியின் ஸ்போர்ட்டியான மாடலாக விளங்க உள்ளது.

இஞ்ஜின் ; 2.0-லிட்டர், 4-சிலிண்டர், ட்வின் டர்போ டீசல், 225 பிஹெச்பி (எதிர்பார்க்கபடும் இஞ்ஜின்)

English summary
Volvo is planning to launch 7 New Models For India In the year 2016. Even if all the models may not be new, they come up with facelifts, which are as good as new models. These Cars are the list of Models, which are to be introduced very soon in 2016.
Story first published: Saturday, November 28, 2015, 11:04 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark