கங்காருகள் மீது அதிக அளவிலான கரிசனம் கொண்ட வால்வோ

Written By:

வால்வோ நிறுவனத்தின் கார்கள் தற்போது கங்காருக்களை கண்டறியும் தொழில்நுட்பத்துடன் வர உள்ளது.

ஆட்டோமொபைல் உலகில், பாதுகாப்பு விஷயத்தை பொருத்த வரை, வால்வோ நிறுவனம் எப்போதுமே முன்னோடியாக விளங்கி வந்துள்ளது. முதன்முதலாக, ஆட்டோமொபைல்களில் சீட்பெல்ட்களை வழங்கியதே இந்த வால்வோ நிறுவனம் தான்.

பாதுகாப்பு விஷயத்தில் உள்ள சாதனையை, வால்வோ நிறுவனம் மேலும் விரிவுபடுத்த விரும்புகிறது. 2020-ஆம் ஆண்டிற்குள், வால்வோ வாகனத்துடன் தொடர்புடைய வகையில், எந்த ஒரு விபத்தும் நிகழகூடாது என்ற வகையில் வாகனங்கள் தயாரிக்க வேண்டும் என்பதே அந்த லட்சியமாகும்.

வால்வோவிடம் தற்போது உள்ள தொழில்நுட்பத்தின் படி, அதன் வாகனங்கள் சாலையில் செல்லும்போது, அருகில் யாரேனும் சைக்கிளில் செல்பவர்கள் அல்லது பாதசாரிகள் சென்றால், சமிஞ்சைகள் கிடைத்துவிடும். கேமரா மற்றும் ரேடார்களின் உதவியுடன் சமிஞ்சைகளில் கிடைத்த பின்னும், டிரைவரிடம் இருந்து உடனடியாக, தகுந்த நடவடிக்கைகள் இல்லையென்றால், வாகனங்கள் தானாகவே வேக்ததை குறைத்து கொள்ளும்.

ஸ்வீடன் ஆட்டோமொபைல் நிறுவனமான வால்வோ, கொள்ளிஷன் டெக்னாலஜி, மிருகங்களுடன் மோதுவதையும் தடுத்து கொள்ளும் வகையில் உள்ளது. அதன்படி, தற்போது கடமான் (மூஸ்), மாடுகள், மற்றும் கலைமான் (ரெய்ண்டீர்) உள்ளிட்ட மிருகங்களை மோதுவதில் இருந்து வால்வோ வாகனங்கள் தவிர்த்து கொள்ளும்.

Volvo making New Safety Technology Detect Kangaroos through Kangaroo detection technology

இதே தொழில்நுட்பத்தை, கங்காரூக்களை மோதுவதில் இருந்து தவிர்த்து கொள்ளும் வகையில், கங்காரு டிடெக்‌ஷன் டெக்னாலஜி எனப்படும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றனர். கங்காருக்கள் உருவத்தில் சிறியதாக உள்ள மிருகங்களாகும். கங்காருக்கள் வழக்கமாக, மணிக்கு 20 முதல் 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லகூடியவையாகும். ஆனால், அவை, உச்சபட்சமாக மணிக்கு 70 கிலோமீட்டர் வரையிலும் கூட செல்லும் திறன் கொண்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு தான் கங்காரு டிடெக்‌ஷன் டெக்னாலஜியை கொண்டுவர வால்வோ முயற்சித்து வருகின்றது. இதற்காக, ஆஸ்திரேலியாவின் தலைநகர் கன்பரா அருகில் உள்ள டிட்பின்பில்லா வனபகுதிகளில், கங்காருக்கள் பற்றிய ஆராய்ச்சிகளை வால்வோ இஞ்ஜினியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற வாகன உற்பத்தியாளர்கள், வாகனங்கள் மீது கங்காருக்கள் மோதினால், வாகனங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். ஆனால், வால்வோ நிறுவனம் ஒரு படி மேலே சென்று, வால்வோ கார்கள் கங்காருக்களுடன் மோதாமல் இருப்பதற்கும், கங்காரு டிடெக்‌ஷன் டெக்னாலஜி போன்ற பல பாராட்டபட வேண்டிய முயற்சிகளை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

Volvo New Safety Technology Can Detect Kangaroos Now
English summary
Volvo's New Safety Technology Can Detect Kangaroos Now. Volvo is a pioneer when it comes to safety. Volvo has given us seatbelts and is aiming to achieve a goal by 2020, which is, no fatalities involving a Volvo vehicle. Another interesting development by Volvo is the Kangaroo detection technology, which helps the driver to avoid an animal collision.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark