வால்வோ எக்ஸ்சி 90 எஸ்யூவிக்கு இந்தியாவில் அமோக வரவேற்பு!

Written By:

புதிய தலைமுறை வால்வோ எக்ஸ்சி90 சொகுசு எஸ்யூவி ரக காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அசத்தலான டிசைனில் மாற்றம் கண்ட புதிய தலைமுரை வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவி சர்வதேச அளவில் விற்பனைக்கு வந்துள்ளது.

கடந்த மே மாதம் இந்த புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை இந்தியாவில் 266 பேர் இந்த புதிய எஸ்யூவிக்கு முன்பதிவு செய்துள்ளனர். இது வால்வோ நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தில் முக்கிய திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கிறது.

டாப் என்ட் மாடலுக்கு வரவேற்பு

டாப் என்ட் மாடலுக்கு வரவேற்பு

இந்தியாவில் மொமென்டம் மற்றும் இன்ஸ்க்ரிப்ஷன் ஆகிய இரு வேரியண்ட்டுகளில் வால்வோ எக்ஸ்சி 90 கிடைக்கிறது. இதில், டாப் வேரியண்ட் அதிக வரவேற்பை பெற்றிருப்பதாக, வால்வோ நிறுவனம் தெரிவித்து உள்ளது.

நவீன வசதிகள்

நவீன வசதிகள்

டாப் என்ட் மாடலான இன்ஸ்கிரிப்ஷனில் 8 இன்ச் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிஸ்டத்தின் மூலம் காரின் பெரும்பான்மையான தொழில்நுட்ப வசதிகளை இயக்க முடியும். மேலும், காருக்குள் வெறும் 8 பட்டன்கள் மட்டுமே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் இருக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 228 பிஎஸ் பவரையும், 470 என்எம் டார்க்கையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது.

முக்கிய வசதிகள்

முக்கிய வசதிகள்

பானோரமிக் சன்ரூஃப், பார்க் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ரியர் கேமரா, நேவிகேஷன் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கிடைக்கிறது.

விலை விபரம்

விலை விபரம்

வால்வோ எக்ஸ்சி90 காரின் மொமென்ட்டம் என்ற வேரியண்ட் ரூ.64.9 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும், இன்ஸ்கிரிப்ஷன் டாப் வேரியண்ட் ரூ.77.9 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது.

வெற்றி, வெற்றி...

வெற்றி, வெற்றி...

இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வால்வோ இந்தியா கார் நிறுவனத்துக்கு ஊக்கத்தை அளித்துள்ளதோடு, சர்வதேச அளவில் மொத்தம் 56,000 முன்பதிவுகளை இந்த எஸ்யூவி அள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், சமீபத்தில் வெளியிடப்பட்ட யூரோ என்சிஏபி கிராஷ் டெஸ்ட் சோதனை முடிவுகளில், இந்த எஸ்யூவிக்கு அதிகபட்சமான 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்றிருக்கிறது.

 
English summary
Volvo XC90 Received 266 Bookings In India Since Launch.
Story first published: Saturday, September 5, 2015, 11:27 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark