கூடுதல் அம்சங்களுடன் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் விற்பனைக்கு அறிமுகம்!

Posted By:

ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் வந்திருக்கும் நிலையில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களை கவரும் விதத்தில் இந்த சிறப்பம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஹை- லைன் ப்ளஸ்

ஹை- லைன் ப்ளஸ்

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ ஹை- லைன் ப்ளஸ் என்ற பெயரில் இந்த புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் இந்த புதிய வேரியண்ட் கிடைக்கும்.

வசதிகள்

வசதிகள்

புதிய மல்டிமீடியா நேவிகேஷன் சிஸ்டம், ஜன்னலுக்கான மறைப்பு திரை, ஸ்கஃப் பிளேட்டுகள் ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கின்றன.

வெளிப்புற அம்சங்கள்

வெளிப்புற அம்சங்கள்

கருப்பு நிற ஃபினிஷ் செய்யப்பட்ட கூரை மற்றும் சைடு மிரர்கள் குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றன. பக்கவாட்டில் பிளாஸ்டிக் தகடும் கொடுக்கப்பட்டுள்ளது.

விலை விபரம்

விலை விபரம்

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் பெட்ரோல் ஹை- லைன் ப்ளஸ் வேரியண்ட் ரூ.9.42 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் ஹை- லைன் வேரியண்ட் ரூ.10.67 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். இரண்டும் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.

 சிறப்பு சலுகைகள்

சிறப்பு சலுகைகள்

பண்டிகை காலத்தை முன்னிட்டு, ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காருக்கு லாயல்டி போனஸ் மற்றும் ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த ஹை லைன் ப்ளஸ் வேரியண்ட்டிற்கு ஆண்டுக்கு 9.99 சதவீத வட்டி விகிதத்திலான சிறப்பு கடன் திட்டமும் வழங்கப்படுகிறது.

 
English summary
Volkswagen India has launched their all-new Vento Highline Plus model ahead of the festive season. It goes soon sale with immediate effect across VW India dealerships.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark