குட்டி கார் தயாரிப்பில் யமஹா மும்முரம்: 2019ல் ரிலீசாகிறது

Written By:

இருசக்கர வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற ஜப்பானிய நிறுவனமான யமஹா சிறிய காரை தயாரிக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. நகர்ப்புறத்திற்கான போக்குவரத்து சாதனமாக இந்த புதிய குட்டிக் காரை யமஹா விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறது.

கடந்த 2013ம் ஆண்டு டோக்கிய மோட்டார் ஷோவில் குட்டிக் காரின் புரோட்டோடைப் மாடலை யமஹா பார்வைக்கு வைந்திருந்தது. இந்த காரை வர்த்தக ரீதியில் உற்பத்தி செய்வதற்கான முயற்சிகளை தற்போது தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய யமஹா நிறுவனத்தின் செய்திதொடர்பாளர், புதிய கார் திட்டத்தை யமஹா கையிலெடுத்திருப்பதை உறுதி செய்திருக்கிறார்.

 2 சீட்டர் கார்

2 சீட்டர் கார்

இந்த புதிய குட்டிக் கார் 2 பேர் அமர்ந்து செல்லும் இருக்கை வசதி கொண்டதாக இருக்கும். மேலும், இந்த காரில் 1000 சிசி பெட்ரோல் எஞ்சின் மற்றும் பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் மோட்டார்களையும் கொண்ட ஹைபிரிட் மாடலாக வர இருப்பதும் உறுதியாகியிருக்கிறது.

 ஐ - ஸ்ட்ரீம் தயாரிப்பு நுட்பம்

ஐ - ஸ்ட்ரீம் தயாரிப்பு நுட்பம்

இலகு எடை, பாதுகாப்பு, குறைவான சுற்றுச்சூழல் பாதிப்பு என்ற புதிய ஃபார்முலா - 1 கார்களுக்கான தயாரிப்பு நுட்பத்தை உள்ளடக்கியதே கார்டன் முர்ரேயின் ஐ ஸ்ட்ரீம் தயாரிப்பு நுட்பம். இதன் அடிப்படையில் இந்த புதிய கார் உருவாக்கப்பட்டுள்ளது.

முதலில் ஐரோப்பாவுக்கு...

முதலில் ஐரோப்பாவுக்கு...

ஐரோப்பிய மார்க்கெட்டில் முதலில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று யமஹா தெரிவித்திருக்கிறது. அதேவேளை, வளர்ந்து வரும் மார்க்கெட்டுகளிலும் இந்த புதிய குட்டிக் காரை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அந்த நிறுவனத்தின் அதிகாரி கூறியிருக்கிறார்.

அனுபவம்

அனுபவம்

பல ஆண்டுகளாக டொயோட்டா நிறுவனத்துடன் இணைந்து கார் எஞ்சின் தயாரிப்பில் யமஹா ஈடுபட்டு வருகிறது. மேலும், இதுவரை 3 மில்லியன் எஞ்சின்களை டொயோட்டா நிறுவனத்துக்கு யமஹா சப்ளை செய்திருக்கிறது. எனவே, புதிய குட்டிக் காரில் யமஹாவின் சொந்த தயாரிப்பில் உருவான 1000சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என்பது கூடுதல் தகவல்.

 இந்தியாவுக்கும் வாய்ப்பு

இந்தியாவுக்கும் வாய்ப்பு

1960களிலிருந்து டொயோட்டா நிறுவனத்துடன் இணைந்து கார் எஞ்சின் தயாரிப்பில் யமஹா ஈடுபட்டு வருகிறது. மேலும், இதுவரை 3 மில்லியன் எஞ்சின்களை டொயோட்டா நிறுவனத்துக்கு யமஹா சப்ளை செய்திருக்கிறது. எனவே, புதிய குட்டிக் காரில் யமஹாவின் சொந்த தயாரிப்பில் உருவான 1000சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

English summary

 Japanese two wheeler maker Yamaha is planning to introduce a two-seater car in Europe as early as 2019
Story first published: Saturday, February 28, 2015, 10:36 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark