ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய 12 விஷயங்கள்!!

Written By:

இந்த ஆண்டு முத்தான மூன்று கார் மாடல்கள் ஃபோர்டு நிறுவனத்திடமிருந்து வர இருக்கிறது. 4 மீட்டருக்கும் குறைவான நீளமுடைய ஃபோர்டு ஆஸ்பயர், புதிய தலைமுறை ஃபிகோ கார், அடுத்து புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி.

இந்த மூன்று மாடல்களில் ஃபோர்டு ஆஸ்பயர், ஃபுதிய ஃபிகோ பற்றிய முக்கிய செய்திகளை ஏற்கனவே டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படித்திருப்பீர்கள். இந்த நிலையில், அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய தலைமுறை ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி பற்றியத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். இந்த எஸ்யூவியை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கும், ஃபோர்டு பிரியர்களுக்கும் இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும்.

 01. அடிப்படை மாடல்

01. அடிப்படை மாடல்

புதிய தலைமுறை ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி ஃபோர்டு நிறுவனத்தின் பிரபலமான ரேஞ்சர் பிக்கப்- டிரக் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

 02. டிசைன் டீம்

02. டிசைன் டீம்

ஃபோர்டு நிறுவனத்தின் ஆஸ்திரேலியப் பிரிவு இந்த புதிய தலைமுறை ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் வடிவமைப்பு பொறுப்பை ஏற்றுக்கொண்டு செம்மையாக வடிவமைத்து அசத்தியுள்ளது.

03. கான்செப்ட் மாடல்

03. கான்செப்ட் மாடல்

ஃபோர்டு நிறுவனம் அறிமுகம் செய்த எவரெஸ்ட் கான்செப்ட் எஸ்யூவி மாடல்தான் புதிய எண்டெவராக மலர்ந்திருக்கிறது. எவரெஸ்ட் கான்செப்ட் எஸ்யூவி மாடலின் டிசைன் தாத்பரியங்களில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை. அதேநேரத்தில், பழைய எண்டெவர் மாடலுக்கும், புதிய மாடலுக்கும் தோற்றத்தில் அதிக வித்தியாசங்களுடன் மாற்றப்பட்டிருக்கின்றன.

04. எல்இடி விளக்குகள்

04. எல்இடி விளக்குகள்

முன்புறத்தில் சரிவக அமைப்பிலான புதிய குரோம் பூச்சுடன் கூடிய கம்பி அமைப்பு இந்த எஸ்யூவிக்கு கம்பீரத்தை கொடுக்கிறது. மேலும், முன்புறத்திலும், பின்புறத்திலும் ஸ்கஃப் பிளேட் கொடுக்கப்பட்டிருப்பதும் இதனை ஒரு முழுமையான எஸ்யூவி மாடலாக மாற்றிக் காட்டுகிறது.

05. சஸ்பென்ஷனில் மாற்றம்

05. சஸ்பென்ஷனில் மாற்றம்

பின்புறத்தில் லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் அமைப்புக்கு பதிலாக தற்போது புதிய இன்டிபென்டென்ட் காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் அமைப்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம், புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி ஓட்டுபவருக்கு சிறப்பான கையாளுமையை வழங்கும்.

 06. புதிய தொழில்நுட்ப வசதி

06. புதிய தொழில்நுட்ப வசதி

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் இருக்கும் மிக முக்கியமான வசதிகளில் ஒன்று டிஎம்எஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் டெர்ரெய்ன் மேனேஜ்மென்ட் சிஸ்டம். இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக சாதாரண சாலை, பனி படர்ந்த சாலை, மணல் சார்ந்த சாலை மற்றும் மலைச் சாலைகள் என ஒவ்வொரு சாலை நிலைக்கும் தகுந்தவாறு டிராக்ஷன் கன்ட்ரோல், எஞ்சின் டார்க் சக்கரங்களுக்கு செலுத்தும் முறை மற்றும் அனைத்து சக்கரங்களுக்கும் ஆற்றலை அளிக்கும் முறைகளில் மாறுதல்களை செய்து கொள்ளும்.

07. மின்னணு திரை

07. மின்னணு திரை

டேஷ்போர்டில் கொடுக்கப்பட்டிருக்கும் 8.0 இன்ச் மின்னணு திரை மூலம் வழிகாட்டும் தகவல்கள், பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் காரின் தொழில்நுட்ப வசதிகளை பெறும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, பெரும்பாலான வசதிகளை இங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

08. தொடர்பு வசதி

08. தொடர்பு வசதி

ஃபோர்டு நிறுவனத்தின் SYNC - 2 தகவல் தொடர்பு தொழில்நுட்பமும் இந்த புதிய தலைமுறை ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கிறது. வாய்மொழி உத்தரவுகள் மற்றும் அவசர நேரத்தில் தகவல் தொடர்பு வழங்கும் வசதியை இதன்மூலம் பெற முடியும்.

 09. எஞ்சின்

09. எஞ்சின்

தற்போதைய மாடலில் பயன்படுத்தப்படும் 2.5 லிட்டர் மற்றும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின்களுக்கு பதிலாக, புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் டீசல் எஞ்சின்களுடன் வருகிறது. இந்த டீசல் எஞ்சின்கள், முறையே 148 பிஎச்பி மற்றும் 197 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

10. இருக்கை அமைப்பு

10. இருக்கை அமைப்பு

இந்தியாவில் 7 பேர் அமர்ந்து செல்லக்கூடிய இருக்கை அமைப்புடன் வருகிறது. இது சிறப்பான இடவசதி மற்றும் கட்டுமானத் தரத்துடன் வர இருப்பதும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 11. எப்போது வருகிறது?

11. எப்போது வருகிறது?

வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் இந்த புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

 12. எதிர்பார்க்கும் விலை

12. எதிர்பார்க்கும் விலை

ரூ.18 லட்சம் முதல் ரூ.21 லட்சத்திற்கு இடையிலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிட்சுபிஷி பஜேரோ, சாங்யாங் ரெக்ஸ்டன், டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

 
English summary
You Want To Know About New Ford Endeavour.
Story first published: Monday, May 25, 2015, 7:53 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark