1.0 லிட்டர் இஞ்ஜின் கொண்ட ரெனோ க்விட் கார் விரைவில் அறிமுகம்

By Ravichandran

1.0 லிட்டர் இஞ்ஜின் கொண்ட ரெனோ க்விட், அறிமுகம் செய்யப்படுவதற்கு தயாராகி கொண்டிருக்கிறது.

விரைவில் வெளியாக உள்ள, ரெனோ க்விட் 1.0 லிட்டர் கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

85,000+ புக்கிங்-கள்...

85,000+ புக்கிங்-கள்...

இந்திய சந்தைகளில் அறிமுகம் செய்யபட்ட ரெனோ க்விட், பிரெஞ்ச் நாட்டு கார் நிறுவனத்தின் தலையெழுத்தையே மாற்றி அமைத்துவிட்டது.

அறிமுகம் செய்யபட்டது முதல், தற்போது வரை 85,000-ற்கும் கூடுதலான புக்கிங்களை கடந்து, தொடர்ந்து புக்கிங்களை குவித்து கொண்டே இருக்கிறது.

1.0 லிட்டர் இஞ்ஜின் க்விட்;

1.0 லிட்டர் இஞ்ஜின் க்விட்;

தற்போதைய நிலையில், 800சிசி க்விட் தான் விற்பனையில் உள்ளது. விரைவில், 1.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட ரெனோ க்விட் அறிமுகத்திற்கு தயாராகிறது.

இஞ்ஜின் திறன்;

இஞ்ஜின் திறன்;

1.0 லிட்டர் இஞ்ஜின் கொண்ட ரெனோ க்விட், 76 பிஹெச்பி-யை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

சென்னையில் உற்பத்தி;

சென்னையில் உற்பத்தி;

1.0 லிட்டர் இஞ்ஜின் கொண்ட ரெனோ க்விட், சென்னையில் உள்ள அந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில், தயாரிக்கபட உள்ளது. மேலும், இங்கிருந்து ஏற்றுமதியும் செய்ய பட உள்ளது.

ஆரம்ப கட்டத்தில், இந்த புதிய ரெனோ க்விட், பிரேசில் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யபட உள்ளது.

எப்போது அறிமுகம்?

எப்போது அறிமுகம்?

1.0 லிட்டர் இஞ்ஜின் கொண்ட ரெனோ க்விட், பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ-வின் போது அறிமுகம் செய்யபட உள்ளது.

ஏர்-பேக்கு;

ஏர்-பேக்கு;

1,000சிசி இஞ்ஜின் கொண்ட ரெனோ க்விட், ஏபிஎஸ் மற்றும் ஏர்-பேக்குகள் உள்ளிட்ட வசதிகளை ஸ்டாண்டர்ட் அம்சங்களாக கொண்டுள்ளது.

தற்போது விற்பனையில் உள்ள 800சிசி ரெனோ க்விட் மாடல்களில், ஏர்-பேக்குகள் தேர்வு முறை வசதியாகவே வழங்கபடுகிறது.

ஏஎம்டி வசதி;

ஏஎம்டி வசதி;

ஏஎம்டி அல்லது ஆட்டோமேட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்ட இந்த புதிய ரெனோ க்விட், இந்திய சந்தைகளில் இந்த ஆண்டில் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யபட உள்ளது.

விலை;

விலை;

1,000சிசி இஞ்ஜின் கொண்ட ரெனோ க்விட், தற்போது விற்பனையில் உள்ள 800சிசி ரெனோ க்விட் காரின் டாப்-எண்ட் வெர்ஷனை காட்டிலும், சுமார் 50,000 ரூபாய் என்ற அளவிலான கூடுதல் விலையில் விற்கபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ரெனோ க்விட் கார் விரைவில் இரண்டு புதிய மாடல்களில் வருகிறது

மாருதியை அண்ணாந்து பார்க்க வைத்த ரெனோ க்விட் கார் புக்கிங்

ரெனோட் நிறுவனத்தின் க்விட் கார் 50,000 புக்கிங்குகளை பெற்று சாதனை

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

Most Read Articles
English summary
1.0 litre Renault Kwid car is getting ready for launch at the 2016 Delhi Auto Expo. This new 1,000cc petrol engine Renault Kwid is a more powerful variant of the 800cc Kwid. This 1.0 litre Renault Kwid car is being manufactured at the Renault's Chennai plant and exported to other markets.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X