மே மாத விற்பனையில் டாப் 10 கார்கள்: மாருதி பலேனோ அசத்தல்!

By Saravana Rajan

புதிய கார் மாடல்களின் வரவால், விற்பனையில் முன்னிலை வகிக்கும் முதல் 10 இடங்களை பிடிப்பதற்கான ரேஸில் கடும் போட்டி நிலவுகிறது. மாதத்திற்கு மாதம் இந்த பட்டியலில் பல சுவாரஸ்ய மாற்றங்களை காண முடிகிறது.

சிறிய ரக கார் மார்க்கெட்டில் முடிசூடா மன்னனாக விளங்கி வரும் மாருதி ஆல்ட்டோ காருக்கு தற்போது ரெனோ க்விட், டட்சன் ரெடிகோ என இரண்டு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, ஹூண்டாய் எலீட் ஐ20 காரை மாருதி பலேனோ கார் விற்பனையில் வீழ்த்தி சாதித்துள்ளது. கடந்த மாதம் எந்தெந்த கார் எந்த இடத்தில் உள்ளது என்பதை ஸ்லைடரில் காணலாம்.

10. மாருதி சியாஸ்

10. மாருதி சியாஸ்

கடந்த மாதம் டாப் 10 பட்டியலில் 10வது இடத்தையும், மிட்சைஸ் செடான் கார் செக்மென்ட்டில் முதலிடத்தையும் பிடித்துள்ளது மாருதி சியாஸ் கார். கடந்த மே மாதத்தில் 5,188 சியாஸ் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. சியாஸ் காரின் மைக்ரோ ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட டீசல் மாடல் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிக மைலேஜ், சிறப்பான இடவசதி, நம்பகமான எஞ்சின் என அனைத்து விதத்திலும் மாருதி சியாஸ் கார் சிறப்பான தேர்வாக அமைந்துள்ளது.

09. ரெனோ க்விட்

09. ரெனோ க்விட்

சிறிய கார் மார்க்கெட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது ரெனோ க்விட் கார். கடந்த மாதத்தில் 5,600 ரெனோ க்விட் கார்கள் விற்பனையாகியுள்ளன. சென்னையிலுள்ள ரெனோ ஆலையில் நடந்த பராமரிப்புப் பணிகள் காரணமாக, உற்பத்தி குறைந்ததால், விற்பனையும் குறைந்திருக்கிறது. ஜூனில் ரெனோ க்விட் காரின் விற்பனையை எப்படியிருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். எனினும், அசத்தலான டிசைன், அதிக இடவசதி, அதிக மைலேஜ், குறைவான பட்ஜெட் என வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.

 08. மாருதி செலிரியோ

08. மாருதி செலிரியோ

கடந்த மாதம் மாருதி செலிரியோ கார் 8வது இடத்தை பிடித்தது. மே மாதத்தில் 7,379 செலிரியோ கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. பெட்ரோல், டீசல் என்பது மட்டுமின்றி ஆட்டோமேட்டிக் கியர் ஷிஃப்ட் கொண்ட மாடலிலும் கிடைப்பது வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு மே மாதத்தைவிட, கடந்த மாதம் 11 சதவீதம் விற்பனை அதிகம்.

07. ஹூண்டாய் எலீட் ஐ20

07. ஹூண்டாய் எலீட் ஐ20

ஹேட்ச்பேக் மார்க்கெட்டின் ஹேண்ட்சம் மாடலாக வலம் வரும் ஹூண்டாய் எலீட் ஐ20 கார் 7வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 8,600 கார்கள் விற்பனையாகியுள்ளன. அதேநேரத்தில், நேரடி போட்டியாளரான மாருதி பலேனோவைவிட விற்பனை குறைந்திருப்பது ஹூண்டாய் நிறுவனத்துக்கு கவலை தரும் விஷயம். டிசைன், வசதிகளில் மிகச்சிறப்பான மாடல்.

06. மாருதி பலேனோ

06. மாருதி பலேனோ

கடந்த மாதம் ஹூண்டாய எலீட் ஐ20 காரை விற்பனையில் வீழ்த்தியதோடு, 5 இலக்க விற்பனை எண்ணிக்கையையும் பதிவு செய்துள்ளது மாருதி பலேனோ கார். கடந்த மாதத்தில் 10,004 மாருதி பலேனோ கார்கள் விற்பனையாகிருப்பது மாருதி நிறுவனத்துக்கு புது தெம்பை கொடுத்துள்ளது. அருமையான டிசைன், சிறந்த மைலேஜ், நம்பகமான எஞ்சின், சிறப்பம்சங்கள், விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வாக உள்ளது மாருதி பலேனோ.

 05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

பட்ஜெட் விலையில் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் 12,055 கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சிறிய குடும்பத்தினருக்க ஏற்ற கச்சிதமான கார். டிசைனிலும், வசதிகளிலும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

04. மாருதி ஸ்விஃப்ட்

04. மாருதி ஸ்விஃப்ட்

மாருதி பலேனோ காரின் வருகையால் மாருதி ஸ்வஃப்ட் காரின் விற்பனையில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. மாதத்திற்கு 15,000க்கும் மேல் இருந்த ஸ்விஃப்ட் விற்பனை கடந்த சில மாதங்களாகவே குறைந்து வருகிறது. இந்தநிலையில், கடந்த மாதத்தில் 12,355 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. அதிக மைலேஜ், குறைவான பராமரிப்பு, துறுதுறுப்பான டிசைன் இந்த காரின் ப்ளஸ் பாயிண்டுகள்.

03. மாருதி வேகன் ஆர்

03. மாருதி வேகன் ஆர்

பல காலமாக 4வது இடத்தில் இருந்த மாருதி வேகன் ஆர் தற்போது மூன்றாவது இடத்தை நிரந்தரமாக தக்க வைத்து வருகிறது. கடந்த மாதத்தில் 13,231 மாருதி வேகன் ஆர் கார்கள் விற்பனையாகின. அடக்கமான வடிவம், அதிக ஹெட்ரூம், சிறந்த மைலேஜ், சரியான விலை என்பதுடன், குறைவான பராமரிப்பு ஆகியவை இதற்கு வலு சேர்க்கும் அம்சங்கள்.

 02. மாருதி டிசையர்

02. மாருதி டிசையர்

இந்திய மக்களின் விருப்பமான மாடல்களில் 2வது இடத்தை பெற்றிருக்கிறது மாருதி டிசையர். காம்பேக்ட் செடான் மார்க்கெட்டில் போட்டியாளர்களை பல மடங்கு விஞ்சிய தூரத்தில் இருக்கிறது இந்த கார். கடந்த மாதத்தில் மட்டும் 16,968 மாருதி டிசையர் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. நடுத்தர வர்க்கத்தினரின் பாக்கெட்டை பதம் பார்க்காத செடான் ரக கார் என்பதே இதன் முக்கிய பலம்.

01. மாருதி ஆல்ட்டோ

01. மாருதி ஆல்ட்டோ

ரெனோ க்விட் வருகையால் கடந்த மாதம் கீழே விழுந்து அடிபட்ட, மாருதி ஆல்ட்டோ கார் கடந்த மாதம் சுதாரித்துக் கொண்டு சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது. கடந்த மாதத்தில் 19,874 மாருதி ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு மே மாதத்தைவிட, தற்போது 12 சதவீதம் விற்பனை குறைவுதான். ஆனாலும், கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் பலருக்கும் ஃபர்ஸ்ட் சாய்ஸ் ஆல்ட்டோதான். மாருதியின் சர்வீஸ் நெட்வொர்க்கும், குறைந்த பராமரிப்பு செலவும், வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா

எம்பிவி கார் பிரிவில் புதிய டொயோட்டா இன்னோவா கார் அசத்தியிருக்கிறது. கடந்த மாதம் 7,529 புதிய இன்னோவா கார்கள் டெலிவிரி கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதனால், மாருதி எர்டிகாவை விற்பனையில் விஞ்சி அசத்தியிருக்கிறது புதிய இன்னோவா கார்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

எஸ்யூவி வகையில் வந்த மற்றொரு புதிய மாடலான மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியும் விற்பனையில் அசத்தியிருப்பதோடு, ஹூண்டாய் க்ரெட்டாவை வீழ்த்த வேண்டும் என்ற மாருதியின் நோக்கத்தையும் கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறது விட்டாரா பிரெஸ்ஸா. ஆம், கடந்த மாதத்தில் 7,193 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார்கள் விற்பனையாகியுள்ளன.

Most Read Articles
English summary
10 Best selling cars in India May 2016.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X