இந்தியா வரும் புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவி... தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்... !!

Written By:

டஸ்ட்டர் மூலமாக இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் கலக்கிய ரெனோ கார் நிறுவனம் அடுத்ததாக புதிய எஸ்யூவி மாடல் ஒன்றை இந்தியாவில் களமிறக்க உள்ளது. ரெனோ கேப்டூர் என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவி டிசைனிலும், வசதிகளிலும் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் அம்சங்களை கொண்டிருக்கிறது.

ரெனோ எஸ்யூவி என்றவுடனே பலரின் ஆர்வமும், ஆசையும் அதிகரித்திருக்கிறது அல்லவா? அவர்களுக்காக இந்த எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் விசேஷ அம்சங்களை காணலாம்.

வடிவம்

வடிவம்

ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ரெனோ Captur எஸ்யூவியைவிட இந்த புதிய ரெனோ Kaptur[ஒரு எழுத்துதாங்க வித்தியாசம்] வடிவத்தில் சற்றே பெரியது. இந்த புதிய எஸ்யூவி 4,333 மிமீ நீளமும், 1,813மிமீ அகலமும், 1,613மிமீ உயரமும் கொண்டதாக இருக்கிறது. மேலும், இதன் வீல்பேஸ் 2,674மிமீ என்பதும் கவனிக்கத்தக்கது.

டிசைன்

டிசைன்

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி சற்று முரட்டுத்தனமான ஆஃப்ரோடு எஸ்யூவி போன்ற தோற்றத்தை பெற்று இளைய சமுதாய வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்தது. ஆனால், இந்த புதிய கேப்டூர் எஸ்யூவி, நவநாகரீக டிசைன் தாத்பரியங்களுடன் குடும்பத்தில் அனைவருக்கும் பிடிக்கும் டிசைன் தாத்பரியங்களை கொண்டிருக்கிறது.

 எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

முதல்முறையாக ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த எஸ்யூவியில் 1.6 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். ஆனால், இந்தியாவில் வரும்போது, தற்போது டஸ்ட்டர் எஸ்யூவியில் இருக்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 கே9கே டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும். மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

டஸ்ட்டர் எஸ்யூவி 5 சீட்டர் மாடலாக விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த புதிய எஸ்யூவி 7 பேர் அமர்ந்து செல்வதற்கான இருக்கை வசதியுடன் வருகிறது. அதாவது, மூன்று வரிசை இருக்கை அமைப்பு கொண்டதாக இருக்கும். மற்றொன்று, இதற்கு இணையாக கருதப்படும் ஸ்கோடா யெட்டி மற்றும் ஹூண்டாய் டூஸான் மாடல்கள் 5 சீட்டராக வரும் நிலையில், இதற்கு இருக்கை வசதி கூடுதல் வலு சேர்க்கும்.

போட்டி

போட்டி

விலை, சிறப்பம்சங்கள் அடிப்படையில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியை சற்று அதிகமானதாகவும், மஹிந்திரா எக்ஸ்யூவி 500, டாடா ஹெக்ஸா மாடல்களைவிட சற்றே குறைவான விலையில் மறைமுக போட்டியை கொடுக்கும்.

 இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

இந்த எஸ்யூவி 204 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருப்பதால், இந்திய சாலைநிலைகளை எளிதாக சமாளிக்கும். இந்த எஸ்யூவியில் 387 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் இருக்கும். இரு்கைகளை மடக்கினால் 1,200 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக அதிகரித்துக் கொள்ள முடியும். இந்த எஸ்யூவியில் 17 இன்ச் மேக் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

வசதிகள்

வசதிகள்

எல்இடி பகல்நேர விளக்குகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மீடியா நவ் நேவிகேஷன் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், 6 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம், எஞ்சின் ஸ்டார்ட் ஸ்டாப் வசதி, பின்புற இருக்கைக்கு தனி ஏசி வென்ட்டுகள் போன்றவை இருக்கும்.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

புதிய ரெனோ கேப்டர் எஸ்யூவி ரூ.8.70 லட்சத்திலிருந்து ரூ.13.5 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 அறிமுகம்

அறிமுகம்

இந்த ஆண்டு இறுதியில் ரஷ்யாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. அடுத்த ஆண்டு பண்டிகை காலத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோதனை ஓட்டம்

சோதனை ஓட்டம்

ஏற்கனவே, இந்தியாவில் ரெனோ கேப்டர் எஸ்யூவி ஆய்வுப் பணிகளுக்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், ரெனோ நிறுவனத்திடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.

 
English summary
10 things to know About India bound Renault Kaptur.
Story first published: Saturday, June 4, 2016, 17:14 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos