2016 செவர்லே பீட் காரை ஜிஎம் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்தது

By Ravichandran

புதிய 2016 செவர்லே பீட் காரை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 2016 செவர்லே பீட் கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

புதிய மேம்பாடுகள்;

புதிய மேம்பாடுகள்;

2016 செவர்லே பீட் காரின் மேம்பாடுகளின் ஒரு பகுதியாக, புதுமையான இண்டீரியர்கள், 2 புதிய நிறங்களின் தேர்வுகள், மற்றும் கூடுதல் பாதுகாப்பு தொடர்பான வசதிகள் மேம்படுத்தபட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

2016 செவர்லே பீட் காரின் இஞ்ஜின் தொடர்பான விஷயத்திலும், எக்ஸ்டீரியர் டிசைன் உள்ளிட்ட விஷயங்களில் எந்த விதமான மாற்றங்களும் செய்யபடவில்லை.

மாறாத அம்சங்கள்;

மாறாத அம்சங்கள்;

2016 செவர்லே பீட் ஹேட்ச்பேக் காரில், ஸ்டீயரிங்-மவுண்டட் ஆடியோ கண்ட்ரோல்கள் மற்றும் ஹைட்-அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட் (உயரம் மாற்றக்கூடிய டிரைவர் இருக்கை) உள்ளிட்ட அம்சங்கள் மாற்றப்படவில்லை.

இந்த வசதிகள் சில தேர்வு செய்யபட்ட வேரியண்ட்களில் மட்டும் வழங்கபடுகிறது.

மாற்றபட்ட அம்சங்கள்;

மாற்றபட்ட அம்சங்கள்;

ரிமோட் கீ-லெஸ் (சாவி இல்லாத) எண்ட்ரீ (நுழைவு)-க்கு பதிலாக ஃபோல்டபிள் (மடங்க கூடிய) கீ, எல்டி வேரியண்ட்-டில் டிரைவர் சைட்-ஏர்பேக், பாடி-கலர்ட் டோர் ஹேண்டில்கள், லோயர் (அடி நிலை) ட்ரிம்களில், சில்வர் இண்டீரியர் ஹைலட்கள் உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளது.

புதிய நிறங்கள்;

புதிய நிறங்கள்;

2016 செவர்லே பீட், புல் மீ ஓவர் ரெட் மற்றும் சாட்டின் ஸ்டீல் கிரே உள்ளிட்ட 2 புதிய வண்ணங்களிலும் கிடைக்க உள்ளது.

பெயர் மாற்றம்;

பெயர் மாற்றம்;

ஒரு முக்கியமான செய்தி உள்ளது. 2016 செவர்லே பீட் டாப் எண்ட் (உயர் ரக) வேரியண்ட் முன்னதாக, எல்டி(ஓ) என அழைக்கபட்டு வந்தது.

இந்த வேரியண்ட், இனி எல்டிஇசட் என்ற பெயரில் அழைக்கபடும்.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள்;

கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள்;

2016 செவர்லே பீட் மாடலின் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களின் ஒரு பகுதியாக ஃப்ரண்ட் டியூவல் ஏர்பேக்குள் மற்றும் ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்-கள் தொடர்ந்து வழங்கபடும்.

கூடுதலாக ஈபிடி எனப்படும் எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிப்யூஷன் என்ற வசதியும் சேர்க்கபட உள்ளது.

கிடைக்கும் தேர்வுகள்;

கிடைக்கும் தேர்வுகள்;

2016 செவர்லே பீட், பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆகிய 2 தேர்வுகளிலும் கிடைக்கும்.

இஞ்ஜின், திறன்;

இஞ்ஜின், திறன்;

2016 செவர்லே பீட், 1.2 லிட்டர் டிஓஹெச்ஸி பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டிசிஐசி டீசல் இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கும்.

பெட்ரோல் இஞ்ஜின், 76.83 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 106.5 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

டீசல் இஞ்ஜின், 56.31 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 142.5 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

2016 செவர்லே பீட் மாடலின் பெட்ரோல் இஞ்ஜின், ஒரு லிட்டருக்கு 17.8 கிலோமீட்டர் எரிபொருள் திறன் வழங்குகிறது.

2016 செவர்லே பீட் மாடலின் டீசல் இஞ்ஜின், ஒரு லிட்டருக்கு 25.44 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

விலை விவரங்கள்;

விலை விவரங்கள்;

2016 செவர்லே பீட், 4.28 லட்சம் ரூபாய் - 5.55 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம், புது டெல்லி) விலையில் விற்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய செவர்லே பீட் எப்படியிருக்கு... ஒரு சுற்று சுற்றி பார்த்துடுவோமா?

செவர்லே பீட் தொடர்புடைய செய்திகள்

செவர்லே பீட் காருக்கு சிறப்பு சேமிப்புச் சலுகைகள்

Most Read Articles
English summary
General Motors has launched the 2016 Chevrolet Beat recently. The new Chevrolet Beat has not received any changes to its engine options or exterior design. 2016 Chevrolet Beat has been priced between 4.28 lakh - 5.55 lakh (ex-showroom, New Delhi). 2016 Chevrolet Beat is available in two new colour options.
Story first published: Thursday, January 14, 2016, 19:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X