மஹிந்திரா மான்சூன் சேலஞ்ச் ராலியில் டிரைவ்ஸ்பார்க் அணிக்கு 2ம் இடம்!

Written By:

கார்களை விற்பனை செய்வதோடு நின்று கொள்ளாமல், வாடிக்கையாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணும் விதத்தில், தனது வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு வகை கார் பந்தயங்களையும், பயணங்களையும் மஹிந்திரா ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. அதில், பருவமழை காலத்தில் மஹிந்திரா நிறுவனம் நடத்தும் மான்சூன் சேலஞ்ச் என்ற ராலி வகை பந்தயம் அதன் வாடிக்கையாளர்களிடையே பிரபலமானது.

தென்மேற்கு பருவமழை வெளுத்துக் கட்டி வரும் இந்த நேரத்தில், அதுபோன்றதொரு போட்டியை கர்நாடக மாநிலத்தின் கடற்கரை நகரமான மங்களூரிலிருந்து கோவா வரை 600 கிமீ தூரத்திற்கு நடத்தப்பட்டது. கடந்த 25 மற்றும் 26ந் தேதிகளில், இரண்டு நாட்கள் நடந்த போட்டியில் மஹிந்திரா கார் உரிமையாளர்களும், தென்னிந்தியாவை சேர்ந்த ஆட்டோமொபைல் பத்திரிக்கை துறையினரும் பங்கு கொண்டனர். மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் மீடியா பிரிவில் டிரைவ்ஸ்பார்க் தளத்தின் அணி இரண்டாம் இடத்தை பிடித்து அசத்தியது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

சேலஞ்ச் கிளாஸ், கார்பரேட் கிளாஸ், கப்பிள் கிளாஸ், மீடியா கிளாஸ் மற்றும் ஓப்பன் கிளாஸ் என 5 பிரிவுகளில் போட்டியாளர்கள் பங்குகொண்டனர். மொத்தம் 27 கார்கள் போட்டியில் பங்கேற்றன.

 TSD Rally

TSD Rally

இது நேரம், வேகம், தூரத்தை கணக்கிட்டு இலக்கை அடையும் விதத்தில் TSD Rally வகை போட்டியாக நடத்தப்பட்டது. இதில், வேகமாக செல்வது என்பது இரண்டாம் பட்சம்தான். குறிப்பிட்ட தூரத்திற்கு இடையிலான தூரத்தை நிர்ணயிக்கப்பட்ட சரியான கால அளவில் கடப்பதுதான் புத்திசாலித்தனம். அதன் அடிப்படையிலேயே புள்ளிகள் வழங்கப்படும். இதனை கண்காணிப்பதற்காக ஆங்காங்கே பந்தய கண்காணிப்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

விறுவிறுப்பு

விறுவிறுப்பு

போட்டி துவங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர்தான் பந்தய பாதை விபரம் உள்ளிட்ட தகவல்கள் அளிக்கப்படும். இந்த நிலையில், மங்களூரில் துவங்கி ஷிமோகாவில் முடிந்த போட்டியின் முதலாவது நாள் புள்ளிகளின் அடிப்படையில், எமது டிரைவ்ஸ்பார்க் குழுவினர் வழக்கம்போல் சிறந்த படங்களை எடுக்கும் நோக்கில் சிறிது கால விரயம் செய்து விட்டனர். இதனால், முதல் நாள் இறுதியில் கடைசி இடத்தில் இருந்தனர்.

சுதாரிப்பு

சுதாரிப்பு

ஆனால், இரண்டாவது நாளில் எமது குழுவினர் சுதாரித்துக் கொண்டு மிக துல்லியமாக கணக்கீடுகளை செய்து, இலக்குகளை சரியான அளவில் கடந்தனர். இதனால், ஷிமோகாவிலிருந்து கோவா வரையிலான இரண்டாவது நாள் பந்தயத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தினர்.

கடினம்

கடினம்

இந்த வகை போட்டிகள் ஒழுங்குப்படுத்தப்பட்ட சாலை அல்லது பந்தய களங்களில் நடைபெறுவது போன்று இருக்காது. அனைத்து நிலை சாலைகளையும் கடந்து வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டியிருக்கும். இடையில் படகுகள் மூலமாக நீர் நிலைகளை கடந்தும் பயணிக்க வேண்டியிருந்தது. இயற்கை எழில் சூழ்ந்த சாலைகள், நெடுஞ்சாலைகள் வழியாக பந்தய பாதை அமைந்திருந்ததால், இது மஹிந்திரா கார் உரிமையாளர்களுக்கு மிகவும் சவாலாகவும், புதிய அனுபவத்தை தருவதாகவும் அமைந்தது.

டிரைவ்ஸ்பார்க் குழு

டிரைவ்ஸ்பார்க் குழு

டிரைவ்ஸ்பார்க் குழு சார்பில் எடிட்டர் ஜோபோ குருவில்லா டிரைவராகவும், ராஜ்கமல் கோ டிரைவராகவும் செயல்பட்டனர். எமது புகைப்பட நிபுணர் அபிஜித் விளங்கில் வழக்கம்போல் இந்த பந்தய நிகழ்வுகளை மிகவும் அற்புதமாக படம் பிடித்து தந்திருக்கிறார்.

வெற்றிபெற்றவர்கள் விபரம்

வெற்றிபெற்றவர்கள் விபரம்

சேலஞ்ச் கிளாஸில் வில்சன் - ஸ்ரீஜித், கார்பரேட் கிளாஸில் வினய்குமார் - ரவிகுமார், கப்பிள் கிளாஸில் ராஜ்மோகன் - சித்ரா, ஓப்பன் கிளாஸில் சந்தோஷ் - நாகராஜன் ஆகியோர் வெற்றி பெற்றனர். மீடியா கிளாஸில் எமது டிரைவ்ஸ்பார்க் டீம் இரண்டாவது இடத்தையும் பிடித்தது.

ஒத்துழைப்பு

ஒத்துழைப்பு

மீடியா சார்பில் கலந்து கொண்ட எமக்கு புதிய மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி வழங்கப்பட்டிருந்தது. ஏற்கனவே விற்பனையில் இருந்த குவான்ட்டோ எஸ்யூவியில் மாறுதல்களையும், கூடுதல் அம்சங்களையும் சேர்த்து சமீபத்தில் நூவோஸ்போர்ட் என்ற பெயரில் இந்த எஸ்யூவி விற்பனை செய்யப்படுகிறது. முதல் நாளில் கடைசி இடத்தில் இருந்தாலும், இரண்டாவது நாளில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறுவதற்கு நூவோஸ்போர்ட் எஸ்யூவியும் சிறப்பான ஒத்துழைப்பு அளித்தது.

சிறப்பான எஞ்சின்

சிறப்பான எஞ்சின்

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவியில் 100 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல, 1.5 லிட்டர் எம்ஹாக்80 டீசல் எஞ்சின் உள்ளது. இது 3 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சினாக இருந்தாலும், மிகச் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியது. மூன்று மேலும், Power மற்றும் Economy என்ற இருவிதமான ஆப்ஷன்களில் எஞ்சினின் செயல்திறனை மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. இந்த எஸ்யூவி லிட்டருக்கு 17.45 கிமீ மைலேஜ் தரும் என்றும் அராய் சான்று கூறுகிறது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவியின் இரண்டாவது வரிசை இருக்கை மிகச்சிறப்பான இடவசதியை அளிக்கிறது. நூவோஸ்போர்ட் எஸ்யூவியில் ஆக்ஸ், யுஎஸ்பி, புளூடூத் இணைப்பு வசதிகளுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சிஸ்டம் என ஏராளமான வசதிகள் உள்ளன. உட்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பாகங்களின் தரமும் மனதுக்கு நிறைவை தந்தது. மேலும், டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இதன் முக்கிய பாதுகாப்பு வசதிகள்.

புதிய அனுபவம்

புதிய அனுபவம்

மொத்தத்தில் மஹிந்திரா கார் உரிமையாளர்களுக்கு மட்டுமல்ல, எமது குழுவினருக்கும் இந்த ராலி பந்தயம் புதுவித அனுபவத்தை தந்ததாக தெரிவித்தனர்.

  

English summary
2016 Mahindra Monsoon Challenge – The Road To Victory.
Story first published: Thursday, June 30, 2016, 11:11 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark