டாடா டியாகோ ஹேட்ச்பேக் - அனுகூலங்களும், குறைபாடுகளும்: விரிவான தகவல்கள்

Written By:

டாடா டியாகோ வாங்க விரும்புகிறீர்களா?

டாடா டியாகோ ஹேட்ச்பேக் குறித்த அனுகூலங்களும், குறைபாடுகளும் உங்களுக்கு தெரியுமா?

இது குறித்த கூடுதல் தகவல்களை, வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

டியாகோ அறிமுகத்தின் குறிக்கோள்:

டியாகோ அறிமுகத்தின் குறிக்கோள்:

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், சிறிய ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் இழந்த தடத்தை கைபற்றும் முக்கிய நோக்கில் தான், டியாகோ ஹேட்ச்பேக்கை அறிமுகம் செய்தது.

டியாகோ ஹேட்ச்பேக் ஹேட்ச்பேக் குறிப்பிடக்கூடிய அளவிலான ஈர்க்கு அம்சங்களை நிச்சயம் கொண்டுள்ளது.

குறைபாடுகள் - டிசைன்;

குறைபாடுகள் - டிசைன்;

முந்தைய காலங்களில், தங்களின் கார்களின் கட்டுமானங்களின் இருந்த குறைபாடுகளால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகுந்த அவதியுற்றது.

அந்த விஷயத்தில் தற்போது, இந்த டியாகோ மாடலில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. எனினும், பிளாஸ்டிக் தொடர்பான விஷயங்களிலும், ஒட்டு மொத்த தரம்

தொடர்பான விஷயங்களை இன்னும் நன்றாக வடிவமைத்திருக்கலாம்.

குறைபாடுகள் - சத்தம்;

குறைபாடுகள் - சத்தம்;

வழக்கமாக டீசல் மாடல்களில் சத்தம் வருவது இயல்பான விஷயம். ஆனால், இந்த டாடா டியாகோ பெட்ரோல் மாடல் காரை ஸ்டார்ட் செய்யும் போது, சத்தம் வெளியாகிறது.

பெருமைக்குறிய லேண்ட் ரோவர் நிறுவனத்தை சொந்தமாக்கி கொண்டுள்ள டாடா நிறுவனம் இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.

டாடா மோட்டார்ஸ் அதன் நிபுணத்துவங்களை பயன்படுத்தி, டியாகோ மாடலுக்கும் சிறந்த தொழில்நுட்பங்களை வழங்கி இருக்கலாம்.

குறைபாடுகள் - இண்டீரியர்;

குறைபாடுகள் - இண்டீரியர்;

டாடா டியாகோவின் உட்புற பகுதிகளை உற்று நோக்கினால், சில தரக்குறைபாடுகள் உள்ளது. உதாரணமாக, ஏசி வெண்ட்கள் முழுமையாக மூடப்படாமல் உள்ளது.

இது போன்ற சிறு சிறு தவறுகளை உற்று நோக்கி சரி செய்து கொண்டால், டாடா நிறுவனம் தங்களை உயர் தர கார் உற்பத்தியாளராக நிலை நிறுத்தி கொள்ளலாம்.

குறைபாடுகள் - பெர்ஃபார்மன்ஸ்;

குறைபாடுகள் - பெர்ஃபார்மன்ஸ்;

டாடா டியாகோவின் செயல்திறன் தொடர்பான முக்கிய குறைபாடே, இதன் குறுகிய பவர் பேண்ட் தான். இதன் டீசல் இஞ்ஜினின் பவர் பேண்ட், 1,800 ஆர்பிஎம்கள் முதல் 3,000 ஆர்பிஎம்கள் என்ற அளவுகளுக்குள் மட்டுமே உள்ளது.

இந்த காருக்கு தேவையான உந்துதலை தர வேண்டிய நேரத்தில், இது மக்கர் செய்யும் வாய்ப்புகள் உள்ளது.

அனுகூலங்கள்;

அனுகூலங்கள்;

அனுகூலங்களை பொருத்த வரை, டாடா டியாகோ ஹேட்ச்பேக் ஏராளமான அனுகூலங்களை அதன் வசம் கொண்டுள்ளது.

அனுகூலங்கள் - பாதுகாப்பு;

அனுகூலங்கள் - பாதுகாப்பு;

பாதுகாப்பு பொருத்த வரை, டாடா டியாகோ ஹேட்ச்பேக் ஏராளமான அனுகூலங்களை கொண்டுள்ளது. இதில் ட்யூவல் ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் வசதி மற்றும் கார்னர் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் அகிய அம்சங்கள் வழங்கபட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ், தங்களின் கார்களில் இத்தகைய அம்சங்கள் தாமதம் செய்துவிட்டது. ஏராளமான கார் நிறுவனங்கள் இத்தகைய அம்சங்களை நெடுங்காலமாகவே வழங்கி வருகின்றன.

இருப்பினும், டாடா நிறுவனமும் வாடிக்கையாளர்களின் தேர்வுகளை வழங்குவதில் பின் தங்கி விடக்கூடாது என்பதில், முழு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

அனுகூலங்கள் - டிசைன்;

அனுகூலங்கள் - டிசைன்;

டாடா மோட்டார்ஸ் வழங்கும் டியாகோ ஹேட்ச்பேக்கின் உட்புற அமைப்பு, ஒட்டு மொத்த வடிவமைப்பு இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதத்தில்

வடிவமைக்கபட்டுள்ளது. இது முந்தைய மாடல்களுடன் ஒப்பிடுகையில் பெரிய முன்னேற்றம் ஆகும்.

டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் பெட்ரோல் வேரியண்ட், மிகவும் ஈர்க்கும் விதத்தில் உள்ளது. மேலும், செயல்திறன் தொடர்பான விஷயங்கள் நன்கு யோசித்து கட்டமைத்துள்ளனர். டீசல் மாடல்களும் சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது.

அனுகூலங்கள் - இட வசதி;

அனுகூலங்கள் - இட வசதி;

டாடா மோட்டார்ஸ் வழங்கும் கார்களின் முக்கிய அம்சமே அதன் இடவசதி அமைப்புகள் தான். டாடா டியாகோ ஹேட்ச்பேக்கும் ஏராளமான கேபின் ஸ்பேஸ் (கேபின் இட வசதி) கொண்டுள்ளது.

இதற்கு வழங்கபட்டுள்ள ஏர் கண்டிஷனிங் இந்த வசதிகளின் விசேஷங்களை கூட்டுகிறது.

அனுகூலங்கள் - ஆடியோ;

அனுகூலங்கள் - ஆடியோ;

டாடா டியாகோ ஹேட்ச்பேக்கில், ஹர்மன் வழங்கும் ஆடியோ சிஸ்டம் / ஹூக்-கார் ஆப் வழங்கபட்டுள்ளது.

மேலும், ஸ்மார்ட்ஃபோன் மூலம் இணைக்கபட்டுள்ள நேவிகேஷன் சிஸ்டம் கட்டாயம் வரவேற்கப்பட வேண்டிய அம்சமாக உள்ளது.

அனுகூலங்கள் - இதர வசதிகள்;

அனுகூலங்கள் - இதர வசதிகள்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக்கில் ரிவர்ஸ் பார்க்கிங் நடவடிக்கை, சென்சார்கள் மற்றும் கேமராக்கள் மூலம் மேற்கொள்ளபடுகிறது. இந்த ரிவர்ஸ் பார்க்கிங் நடவடிக்கை இன்ஃபோடெய்ன்மண்ட் சிஸ்டத்தில் டிஸ்பிளே செய்யபடுகிறது.

இந்த வசதியானது, இந்த டியாகோ ஹேட்ச்பேக் வாட்டிக்கையாளர்களுக்கு பிரிமியம் காருக்கான உணர்வை வழங்கும் வகையில் உள்ளது.

அனுகூலங்கள் - கிளட்ச் லாக்;

அனுகூலங்கள் - கிளட்ச் லாக்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் மிகவும் தனித்துவம் மிகுந்த அம்சமே இதன் கிளட்ச் லாக் வசதியாக தான் இருக்க முடியும்.

கிளட்ச் லாக்கை மிதித்து அழுத்தினால் தான் கார் ஸ்டார்ட் ஆகும். இல்லையெனில், கார் ஸ்டார்ட் ஆகாத வகையில் செட் செய்யபட்டுள்ளது.

அனுகூலங்கள் - என்விஹெச்;

அனுகூலங்கள் - என்விஹெச்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் டீசல் வேரியண்ட்டில், என்விஹெச் அல்லது நாயிஸ் (சத்தம்), வைப்ரேஷன் (அதிர்வுகள்) மற்றும் ஹார்ஷ்னஸ் (கடுமைதன்மை) ஆகிய விஷயங்கள் டீசல் வேரியண்ட்டில் குற்றைந்த அளவில் உள்ளது.

பழைய கார் மாடல்களோடு ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

அனுகூலங்கள் - கிடைக்கும் நிறங்கள்;

அனுகூலங்கள் - கிடைக்கும் நிறங்கள்;

டாடா டியாகோ ஹேட்ச்பேக், மொத்தம் 6 வண்ணங்களில் கிடைக்கிறது.

டாடா டியாகோ ஹேட்ச்பேக், வைட், சில்வர், பிரவுன், ரெட், ஆர்ஞ்ச் மற்றும் புளூ ஆகிய வண்ணங்களில் கிடைப்பதால், இது வயதான மற்றும் இளைய தலைமுறையினரையும் ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

டாடா டியாகோ புதுமையான அனுகுமுறைகளை கொண்டு கட்டமைக்கபட்டுள்ளது. டாடா டியாகோ காரை பல்வேறு வகையான முன்னேற்றங்களை சேர்த்து ஈர்க்கும் அம்சங்களுடன் பேக்கேஜ் செய்து வழங்கியுள்ளனர்.

எனினும், தயாரித்து முடிக்கபட்ட காரின் சிறு சிறு குறைகளை சரி செய்து விட்டால், இந்த காருக்கு நன்மை பயக்கும் வகையில் இருக்கும்.

எப்படி பார்த்தாலும், டியாகோ ஹேட்ச்பேக் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கபட்ட சிறந்த கார் ஆகும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஸீக்கா வைரஸ் கொடுத்த அதிர்ச்சி: டாடா ஸீக்கா காரின் பெயர் மாற்றம்

டாடா டியாகோ ஹேட்ச்பேக் கார் மார்ச் 28-ஆம் தேதி அறிமுகம்

டியாகோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Tata Motors recently launched their Tata Tiago Hatchback. Of course, this Car has lots of attractive features. Tata Tiago has lots of Pros and Cons. Do you think Tata Tiago has all ingredients to be a best seller. Let us look at the advantages and disadvantages of Tata Tiago in detail. To know about Tata Tiago Hatchback from Tata Motors, check out here...
Story first published: Wednesday, March 23, 2016, 19:53 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark