மேம்படுத்தபட்ட புதிய 2017 பிஎம்டபுள்யூ ஐ3 எலக்ட்ரிக் கார் அறிமுகம்

Written By:

பிஎம்டபுள்யூ நிறுவனம், தங்களின் 2017 ஐ3 எலக்ட்ரிக் காரை, டெஸ்லா மாடல் 3 காருக்கு சவால் விடும் வகையில், மேம்படுத்தியுள்ளனர்.

மேம்படுத்தபட்ட புதிய 2017 பிஎம்டபுள்யூ ஐ3 எலக்ட்ரிக் கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

2017 பிஎம்டபுள்யூ ஐ3...

2017 பிஎம்டபுள்யூ ஐ3...

பிஎம்டபுள்யூ நிறுவனம், தங்களின் லிட்டில் கிரீன் சிட்டி கார் என்றும் அழைக்கபடும் ஐ3 எலக்ட்ரிக் காரின், 2017-ஆம் ஆண்டுக்கு ஏற்றவாறு மேம்பாடுகளை வழங்கியுள்ளனர்.

இதன் பேட்டரி பேக்குகளை சிங்கிள் சார்ஜ் செய்வதன் மூலம் அதிக தூரம் செய்யும் வகையில் மேம்படுத்தியுள்ளனர்.

அடர்ந்த பேட்டரி;

அடர்ந்த பேட்டரி;

2017 பிஎம்டபுள்யூ ஐ3 எலக்ட்ரிக் காரில் அடர்ந்த பேட்டரி சேர்க்கபட்டுள்ளது. முந்தைய தலைமுறை பிஎம்டபுள்யூ ஐ3 எலக்ட்ரிக் காரில் 22kWh பேட்டரி பேக் பொருத்தபட்டிருந்தது.

ஆனால், இந்த 2017 பிஎம்டபுள்யூ ஐ3 எலக்ட்ரிக் காரில் 33kWh பேட்டரில் பொருத்தபட்டிருக்கும். இதனால், பவர் பேக் கூடுதல் திறன் கொண்டதாக இருக்கும்.

சார்ஜிங்;

சார்ஜிங்;

2017 பிஎம்டபுள்யூ ஐ3 எலக்ட்ரிக் காரின் புதிய பேட்டரி பேக்கை, பிஎம்டபுள்யூ-வின் லெவல் 2 சார்ஜர் மூலம் சார்ஜிங் செய்ய 4 1/2 மணி நேரம் ஆகும்.

எனினும், 50kW DC ஃபாஸ்ட் சார்ஜர் உபயோகித்து சார்ஜிங் செய்வதன் மூலம், 2017 பிஎம்டபுள்யூ ஐ3 எலக்ட்ரிக் காரின் 80% சார்ஜிங் பணிகளை 40 நிமிடங்களில் முடித்து விடலாம்.

எடை;

எடை;

2017 பிஎம்டபுள்யூ ஐ3 எலக்ட்ரிக் காரின் பேட்டரி பேக்கின் அடர்த்தி, திறனை அதிகரிக்கும் நேரத்தில் இதன் அளவு, பழைய அளவிலேயே தான் இருக்கிறது.

ஆனால், இந்த காரின் எடை 45 கிலோகிராம் கூடியுள்ளது.

ரேஞ்ச்;

ரேஞ்ச்;

2017 பிஎம்டபுள்யூ ஐ3 எலக்ட்ரிக் காரின் பேட்டரி பேக்கின் திறன் அதிகரிக்கபட்டதினால், 129 கிலோமீட்டர் (80 மைல்) என்று இருந்த இதன் ரேஞ்ச் 183 கிலோமீட்டர் (114 மைல்) என்ற அளவிற்கு கூடியுள்ளது.

தொழில்நுட்ப விவரங்கள்;

தொழில்நுட்ப விவரங்கள்;

2017 பிஎம்டபுள்யூ ஐ3 எலக்ட்ரிக் காரின் ஹைப்ரிட் ரேஞ்ச் எக்ஸ்டெண்டர், 2-சிலிண்டர்கள் உடைய 650 சிசி இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் பேட்டரி பேக்குடன், ப்யூவல் டேங்கின் கொள்ளளவும் கூடியுள்ளது.

7.1 லிட்டர் (1.9 கேல்லன்) என்ற அளவில் இருந்த 2017 பிஎம்டபுள்யூ ஐ3 எலக்ட்ரிக் காரின் ஃப்யூவல் டேங்க், 9.1 லிட்டர் (2.4 கேல்லன்) என்ற அளவிற்கு உயர்த்தபட்டுள்ளது.

ரேஞ்ச் வெளியீடு?

ரேஞ்ச் வெளியீடு?

2017 பிஎம்டபுள்யூ ஐ3 எலக்ட்ரிக் காரின் ஹைப்ரிட் ரேஞ்ச் எக்ஸ்டெண்டர் ரேஞ்ச் குறித்த தகவல்களை, பிஎம்டபுள்யூ நிறுவனம் இது வரை வெளியிடபடவில்லை.

போட்டி;

போட்டி;

2017 பிஎம்டபுள்யூ ஐ3 எலக்ட்ரிக் கார், டெஸ்லா மாடல் 3 காருடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

அறிமுகம்;

அறிமுகம்;

2017 பிஎம்டபுள்யூ ஐ3 எலக்ட்ரிக் கார், அடுத்த ஆண்டு காலகட்டத்தில் அறிமுகம் செய்யபடும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பிஎம்டபிள்யூ ஐ3 எலக்ட்ரிக் கார் அடிப்படையில் முதல் ஆப்பிள் கார் உருவாகிறது?

ஐ3 தொடர்புடைய செய்திகள்

பிஎம்டபிள்யூ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
BMW's has updated their little green city car - i3 Electric Car for 2017. BMW has added a more denser battery to ensure that its drivers can go further on a single charge of its battery pack. Increase in capacity has upped range from 129 kilometers (80 miles) to 183 kilometers (114 miles). 2017 BMW i3 will compete with Tesla Model 3, To know more, check here...
Story first published: Friday, May 6, 2016, 7:11 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark