கிராஷ் டெஸ்ட்டில் அதிக மதிப்பீடு பெற்ற 2017 ஹூண்டாய் எலன்ட்ரா - முழு விவரம்

By Ravichandran

இந்தியாவிற்கான 2017 ஹூண்டாய் எலன்ட்ரா செடான், ஐஐஹெச்எஸ் (IIHS) எனப்படும் அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் மிக உயரிய பாதுகாப்பு ரேட்டிங் பெற்றுள்ளது.

2017 ஹூண்டாய் எலன்ட்ரா செடான் பெற்ற பாதுகாப்பு ரேட்டிங் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

2017 ஹூண்டாய் எலன்ட்ரா...

2017 ஹூண்டாய் எலன்ட்ரா...

2017 ஹூண்டாய் எலன்ட்ரா, தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹூண்டாய் நிறுவனம் தயாரிக்கும் செடான் ஆகும்.

இது இந்திய சந்தைகளில் அதீதமாக எதிர்பார்க்கப்படும் வாகனமாக உள்ளது.

அமெரிக்காவில் அறிமுகம்;

அமெரிக்காவில் அறிமுகம்;

2017 ஹூண்டாய் எலன்ட்ரா செடான், 2016 துவக்கத்தில், ஸ்டாண்டர்ட் இஞ்ஜின் தேர்வுடன் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது.

எனினும், இதன் ஸ்போர்ட்ஸ் வேரியன்ட, இந்த ஆண்டு இறுதியில் தான் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்தியாவில் அறிமுகம்;

இந்தியாவில் அறிமுகம்;

2017 ஹூண்டாய் எலன்ட்ரா செடான், இந்திய வாகன சந்தைகளில் 2016 செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கிராஷ் டெஸ்ட்;

கிராஷ் டெஸ்ட்;

ஒவ்வொரு கார் மாடலின் பாதுகாப்பு தரத்தை சோதிக்க, அவ்வபோது ஆங்காங்கே கிராஷ் டெஸ்ட்கள் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது.

இந்த வகையில், ஐஐஹெச்எஸ் (IIHS) அல்லது இன்சூரன்ஸ் இன்ஸ்டிட்யூட் ஃபார் ஹைவே சேஃப்டி (Insurance Institute for Highway Safety) எனப்படும் அமைப்பு, 2017 ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் கிராஷ் டெஸ்டை அமெரிக்காவில் நிகழ்த்தியது.

மதிப்பீடு;

மதிப்பீடு;

ஐஐஹெச்எஸ் நடத்திய கிராஷ் டெஸ்ட்டில், 2017 ஹூண்டாய் எலன்ட்ரா செடான், டாப் சேஃப்டி பிக்+ (Top Safety Pick+) என்ற மிக உயரிய பாதுகாப்பு மதிப்பீடு பெற்றுள்ளது.

கிராஷ் டெஸ்ட்டின் பிரிவுகள்;

கிராஷ் டெஸ்ட்டின் பிரிவுகள்;

2017 ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் கிராஷ் டெஸ்ட், மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது.

இந்த கிராஷ் டெஸ்ட், மாடரேட் ஓவர்லேப் ஃபிரண்ட் (moderate overlap front), மாடரேட் ஓவர்லேப் சைட் (moderate overlap side), ஸ்மால் ஓவர்லேப் ஃபிரண்ட் (small overlap front), ரூஃப் ஸ்ட்ரெங்த் (roof strength) மற்றும் ஹெட் ரிஸ்ட் ரெயின்ட்ஸ் (head restraints) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது.

கிராஷ் டெஸ்ட் விவரங்கள்;

கிராஷ் டெஸ்ட் விவரங்கள்;

2017 ஹூண்டாய் எலன்ட்ரா செடான், தேர்வு முறையிலான கிராஷ் பிரிவென்ஷன் சிஸ்டம் கொண்டுள்ளது.

இதனால் தான், டிராக் டெஸ்ட்டில் மணிக்கு 19 கிலோமீட்டர் வேகத்தில் கிராஷ் டெஸ்ட் நடத்தப்பட்ட போதும், நல்ல மதிப்பிடு பெற உதவியது.

மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் கிராஷ் டெஸ்ட் நடத்தப்பட்ட போதும், சராசரியாக மணிக்கு 35 கிலோமீட்டர் அளவிலான பாதிப்பு குறைக்கபட்டது.

இவ்வாறாக, 2017 ஹூண்டாய் எலன்ட்ரா செடான், நல்ல மதிப்பீடு பெற்றது.

ஒப்பீடு;

ஒப்பீடு;

முந்தைய தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ராவில் மேற்கொள்ளப்பட்ட கிராஷ் டெஸ்ட்டின் போது, ஆக்குபன்ட் ஸ்பேஸ் பகுதியில் 9-இஞ்ச் வரை பாதிப்புகள் இருந்தது.

ஆனால், 2017 ஹூண்டாய் எலன்ட்ரா செடானில் மேற்கொள்ளப்பட்ட கிராஷ் டெஸ்ட்டின் போது, ஆக்குபன்ட் ஸ்பேஸ் பகுதியில் 2-இஞ்ச் வரை மட்டுமே பாதிப்புகள் இருந்தது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

ஹூண்டாய் நிறுவனம், இந்தியாவில் இந்த 2017 ஹூண்டாய் எலன்ட்ரா செடானை 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின் ஆகிய 2 தேர்வுகளில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2.0 லிட்டர் இஞ்ஜின்;

2.0 லிட்டர் இஞ்ஜின்;

2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட 2017 ஹூண்டாய் எலன்ட்ரா செடான், 146 பிஹெச்பியையும், 183 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

1.6 லிட்டர் இஞ்ஜின்;

1.6 லிட்டர் இஞ்ஜின்;

1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்ட 2017 ஹூண்டாய் எலன்ட்ரா செடான், 134 பிஹெச்பியையும், 306 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

2017 ஹூண்டாய் எலன்ட்ரா செடான், 6-ஸ்பீட் மேனுவல் அல்லது 6-ஸ்பீட் மேனுவல் ஆட்டோமேட்டிக் கியார்க்பாக்ஸ் தேர்வுகளுடன் வெளியாகும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

இந்தியாவிற்கான ஹூண்டாய் எலன்ட்ராவின் இஞ்ஜின் விவரங்கள் வெளியாகியது

எலன்ட்ரா தொடர்புடைய செய்திகள்

கிராஷ் டெஸ்ட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Upcoming 6th generation Hyundai Elantra scored highest safety rating - Top Safety Pick+ in Crash Test conducted by Insurance Institute for Highway Safety (IIHS) in US. These crash tests were conducted in 5 categories - moderate overlap front, side, and small overlap front as well as roof strength and head restraints. To know more about these Crash Tests, check here...
Story first published: Monday, August 1, 2016, 13:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X