2017 போர்ஷே பனமிரா செடான் காரை அறிமுகம் செய்தது போர்ஷே நிறுவனம்

Written By:

போர்ஷே நிறுவனம், தங்களின் இரண்டாம் தலைமுறை 2017 போர்ஷே பனமிரா செடான் காரை அறிமுகம் செய்துள்ளனர்.

இரண்டாம் தலைமுறையை சேர்ந்த போர்ஷே பனமிரா செடான் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

போர்ஷே பனமிரா...

போர்ஷே பனமிரா...

ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் போர்ஷே நிறுவனம், இரண்டாம் தலைமுறை 2017 போர்ஷே பனமிரா செடானை பெர்லினில் நடைப்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தனர்.

பனமிரா செடான் முதல் முறையாக 2009-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பின்னர், 2013-ஆம் ஆண்டில் மேம்படுத்தி வழங்ககப்பட்டது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

2017 போர்ஷே பனமிரா செடான், 3 விதமான இஞ்ஜின் தேர்வுகளில் வெளியாகிறது.

2017 போர்ஷே பனமிரா செடான், புதிய டர்போசார்ஜ்ட் 2.9 லிட்டர் வி6 பெட்ரோல் இஞ்ஜின், டர்போசார்ஜ்ட் 4-லிட்டர் வி8 பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டர்போசார்ஜ்ட் 4-லிட்டர் வி8 டீசல் இஞ்ஜின் ஆகிய 3 விதமான இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

2.9 லிட்டர் வி6 பெட்ரோல் இஞ்ஜின்;

2.9 லிட்டர் வி6 பெட்ரோல் இஞ்ஜின்;

புதிய டர்போசார்ஜ்ட் 2.9 லிட்டர் வி6 பெட்ரோல் இஞ்ஜின், பனமிரா 4எஸ் மாடலில் காணப்படுகிறது. இந்த இஞ்ஜின், 434 பிஹெச்பியையும், 434 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

பனமிரா 4எஸ், நின்ற நிலையில் இருந்து, மணிக்கும் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.4 நொடிகளில் எட்டிவிடும். இது உச்சபட்சமாக மணிக்கு 289 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

பனமிரா 4எஸ், ஒரு லிட்டருக்கு 12.34 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

4-லிட்டர் வி8 பெட்ரோல் இஞ்ஜின்;

4-லிட்டர் வி8 பெட்ரோல் இஞ்ஜின்;

4-லிட்டர் வி8 ட்வின் டர்போ பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட பனமிரா 542 பிஹெச்பியையும், 770 டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின் கொண்ட பனமிரா, நின்ற நிலையில் இருந்து, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.6 நொடிகளில் எட்டிவிடும் திறன் உடையது. இந்த 3.6 நொடி குறியீட்டை, தேர்வு முறையிலான ஸ்போர்ட் குரோனோ பேக்கேஜ் உடன் பொருத்தப்படும் எட்ட முடிகிறது.

இதன் மூலம், இந்த இஞ்ஜின் கொண்ட பனமிரா, இதன் முந்தைய மாடலை காட்டிலும், அரை நொடி கூடுதல் வேகத்தில் இந்த இலக்கை எட்டுகிறது.

இதன் உச்சபட்ச வேகம், மணிக்கு 306 கிலோமீட்டர் என்ற அளவில் உள்ளது. பனமிரா டர்போ, ஒரு லிட்டருக்கு 10.63 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

4-லிட்டர் வி8 டர்போசார்ஜ்ட் டீசல் இஞ்ஜின்;

4-லிட்டர் வி8 டர்போசார்ஜ்ட் டீசல் இஞ்ஜின்;

4-லிட்டர் வி8 டர்போசார்ஜ்ட் டீசல் இஞ்ஜின் பொருத்தபட்டுள்ள போர்ஷே பனமிரா 4எஸ் தான் உலகிலேயே மிகவும் வேகமான டீசல் வாகனம் என போர்ஷே நிறுவனம் கூறுகிறது.

இந்த போர்ஷே பனமிரா 4எஸ், உச்சபட்சமாக மணிக்கு 285 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது. இதன் 4-லிட்டர் வி8 டர்போசார்ஜ்ட் டீசல் இஞ்ஜின், 416 பிஹெச்பியையும், 850 டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

இது நின்ற நிலையில் இருந்து, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.2 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. இது, ஒரு லிட்டருக்கு, 14.9 மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

2017 போர்ஷே பனமிரா செடானின் அனைத்து வேரியன்ட்களின் இஞ்ஜின்களும் புதிய 8-ஸ்பீட் பிடிகே டியூவல் கிளட்ச் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக தான், பவர் மற்றும் டார்க் 4 வீல்களுக்கும் கடத்தப்படுகிறது.

போர்ஷே நிறுவனம், தங்களது பனமிரா செடானில், ரியர் வீல் டிரைவ் வசதியையும் சேர்க்க முடிவு செய்துள்ளது.

பரிமாணங்கள்;

பரிமாணங்கள்;

2017 போர்ஷே பனமிரா செடான், 5,049 மில்லிமீட்டர் நீளமும், 1,937 மில்லிமீட்டர் அகலமும், 1,423 மில்லிமீட்டர் உயரமும் கொண்டுள்ளது.

முந்தைய போர்ஷே பனமிரா செடானை காட்டிலும், 2017 போர்ஷே பனமிரா செடானின், நீளம் 34 மில்லிமீட்டரும், அகலம் 6 மில்லிமீட்டரும், உயரம் 5 மில்லிமீட்டரும், கூடுதலாக கொண்டுள்ளது.

மேலும், 2017 போர்ஷே பனமிரா செடானின் வீல் பேஸ், 2,950 மில்லிமீட்டர் என்ற அளவில் உள்ளது. இது முந்தைய மாடலை காட்டிலும் 30 மில்லிமீட்டர் கூடுதலாக உள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

2017 போர்ஷே பனமிரா செடானின், லோயர் என்ட் மாடல்கள், ஸ்டீல் ஸ்ப்ரங் சஸ்பென்ஷன் அமைப்பு கொண்டுள்ளது. ஆனால் டாப் என்ட் வேரியன்ட்கள், ஏர் சஸ்பென்ஷன் அமைப்பு கொண்டிருக்கும்.

இந்த ஏர் சஸ்பென்ஷன் அமைப்பு, எலக்ட்ரானிக் டேம்பர் கண்ட்ரோல் மற்றும் டைனமிக் சேஸி கண்ட்ரோல் ஆகியவற்றின் கலவையை கொண்ட 3 நிலை டேம்பர்களை கொண்டுள்ளது.

இந்த ஏர் சஸ்பென்ஷன் அமைப்பு, டார்க் வெக்டரிங் மற்றும் ஆக்டிவ் ரோல் ஸ்டெபிலைசேஷன் பணிகளை மேற்கொள்கிறது.

டிசைன்;

டிசைன்;

2017 போர்ஷே பனமிரா செடான் மாடலின் டிசைன், முந்தைய போர்ஷே பனமிரா மாடலை காட்டிலும் அதிக கூர்மையாக உள்ளது.

இது வரவேற்கத்தக்க மாற்றம் ஆகும்.

2017 போர்ஷே பனமிரா செடானின் முன் முனையில், புதிய ஏர் இன்டேக்குகள் மற்றும் மறுவடிவமைக்கப்பட்ட கிரில் கொண்டுள்ளது. இதனால், 2017 போர்ஷே பனமிரா செடான் கூடுதல் ஆக்கிரோஷமான தோற்றம் பெறுகிறது.

ரியர்;

ரியர்;

2017 போர்ஷே பனமிரா செடானில் உள்ள எல்இடி டெயில்லேம்ப்கள், 718 பாக்ஸ்டர் மாடலில் இருந்து பெறப்பட்டுள்ளது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

2017 போர்ஷே பனமிரா செடானின் இன்டீரியரில் உள்ள டேஷ்போர்ட்டில், டேக்கோமீட்டர் மட்டுமே ஒரே ஆனலாக் பகுதியாக உள்ளது.

இதன் இரு பக்கங்களிலும், 2 7-இஞ்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் தான், டிரைவருக்கு தேவையான பிற டயல்கள் மற்றும் பிற தகவல்கள் காணப்படுகிறது.

டேஷ்போர்ட்;

டேஷ்போர்ட்;

2017 போர்ஷே பனமிரா செடானின் டேஷ்போர்ட்டில் 12.3 இஞ்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே கொண்டுள்ளது. இது ஆப்பிள் கார் பிளே, சாட்டலைட் நேவிகேஷன் மற்றும் வாய்ஸ் ஆக்டிவேட்டட் கண்ட்ரோல்கள் கொண்டுள்ளது.

இதன் செண்டர் கன்சோல் போல், கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் டச் அடிப்படையில் உள்ளது. முன்பு கொச கொச என இருந்த எக்கச்சக்கமான பட்டங்களை காட்டிலும் இந்த டச் அடிப்படையிலான அமைப்பு நன்றாக உள்ளது.

விலை;

விலை;

2017 போர்ஷே பனமிரா செடான் 4எஸ், €113,027 யூரோக்கள் ((€113,027) - இந்திய மதிப்பில் சுமார் 84.83 லடசம் ரூபாய் என்ற விலையில் விற்கப்படும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

அதிசக்திவாய்ந்த புதிய பனமிரா மாடலை அறிமுகப்படுத்திய போர்ஷே

பனமிரா தொடர்புடைய செய்திகள்

போர்ஷே தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
German carmaker Porsche has unveiled their second generation Porsche Panamera sedan at an event in Berlin, Germany. Panamera was first introduced in 2009, and underwent refresh in 2013. New Panamera will be available with three engine options. 2017 Porsche Panamera 4S Sedan is priced at €113,027 (Rs. 84.83 lakh) in Germany. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark