நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் புதிய சுஸுகி ஸ்விஃப்ட் கார் ஜப்பானில் அறிமுகம்!

Written By:

பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய தலைமுறை சுஸுகி ஸ்விஃப்ட் காரின் படங்கள் மற்றும் தகவல்கள் ஜப்பானில் இன்று வெளியிடப்பட்டது. புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த புதிய சுஸுகி ஸ்விஃப்ட் கார் வடிவமைப்பிலும், வசதிகளிலும் பன்மடங்கு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

அடுத்த ஆண்டு இந்தியாவில் மாருதி பிராண்டில் களமிறங்க இருக்கும் இந்த புதிய ஸ்விஃப்ட் காரில் இடம்பெற்று இருக்கும் முக்கிய அம்சங்கள் மற்றும் படங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

புதிய ஸ்விஃப்ட் காரின் படங்கள், தகவல்கள் இதோ!

மாருதி பலேனோ கார் உருவாக்கப்பட்டிருக்கும் அதே இலகு எடை பிளாட்ஃபார்மில்தான் புதிய சுஸுகி ஸ்விஃப்ட் காரும் தயாரிக்கப்பட்டுள்ளது. தோற்றத்தில் மாறுதல்கள் செய்யப்பட்டிருந்தாலும், அடிப்படை டிசைன் தாத்பரியத்திலிருந்து வழுவாமல் வெகு நேர்த்தியாக புதுப்பொலிவு கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்விஃப்ட் காரின் படங்கள், தகவல்கள் இதோ!

புதிய அறுகோண வடிவ க்ரில் அமைப்பு, நேர்த்தியான புதிய ஹெட்லைட், புதிய பம்பர் அமைப்பு என முகப்பில் முக்கிய மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. எல்இடி ஹெட்லைட்டுகள், ஹாலஜன் பனி விளக்குகள் போன்ற பல நவீன வசதிகளுடன் வருகிறது. இவை அனைத்தும் நிச்சயம் இந்தியா வரும் புதிய ஸ்விஃப்ட் காரிலும் இடம்பெற்று இருக்கும்.

புதிய ஸ்விஃப்ட் காரின் படங்கள், தகவல்கள் இதோ!

பக்கவாட்டில் சி பில்லர் வித்தியாசமான வடிவமைப்புடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது. 16 அங்குல விட்டத்துடன் புதிய அலாய் வீல்களுடம் கவர்ச்சியை கூட்டிக் கொண்டுள்ளது. பின்புறம் நோக்கி சரியும் தாழ்வான கூரை அமைப்பு காரின் துள்ளலாான தோற்றத்திற்கு உதவி புரிகிறது.

புதிய ஸ்விஃப்ட் காரின் படங்கள், தகவல்கள் இதோ!

பின்புறத்தில் டெயில் லைட்டுகள் டிசைன் மாற்றம் செய்யப்பட்டு, தற்போதைய முந்தைய தலைமுறை மாடலை போன்று இருக்கிறது. ஆனால், எல்இடி லைட்டுகளுடன் நவீனத்துவம் பெற்றிருக்கிறது. பம்பர் அமைப்பிலும் மாற்றம் காணப்படுகிறது.

புதிய ஸ்விஃப்ட் காரின் படங்கள், தகவல்கள் இதோ!

இன்டீரியரிலும் பல புதிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. புதிய டேஷ்போர்டு அமைப்பு, வட்ட வடிவ ஏசி வென்ட்டுகள், சென்டர் கன்சோலின் பெரும்பான்மையான பகுதியை ஆக்கிரமித்திருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அதற்கு கீழே ஏசி கட்டுப்பாட்டு சுவிட்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஸ்விஃப்ட் காரின் படங்கள், தகவல்கள் இதோ!

தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல் அமைப்பு, இரட்டை குடுவைகள் மற்றும் டிஜிட்டல் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருடன் முற்றிலும் புதிதாக மாறியிருக்கிறது. ஸ்டீயரிங் வீலில் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் உண்டு. க்ரூஸ் கன்ட்ரோல், எஞ்சின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், கீ லெஸ் என்ட்ரி சிஸ்டம் போன்ற அம்சங்களும் இடம்பெற்று இருக்கிறது.

புதிய ஸ்விஃப்ட் காரின் படங்கள், தகவல்கள் இதோ!

ஜப்பானில் வெளியிடப்பட்டு இருக்கும் புதிய சுஸுகி ஸ்விஃப்ட் காரில் 100 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 89 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் இடம்பெற்று இறுக்கிறது. டீசல் மாடலில் மைக்ரோ ஹைபிரிட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்விஃப்ட் காரின் படங்கள், தகவல்கள் இதோ!

அதேநேரத்தில், இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும். இந்தியாவில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்விஃப்ட் காரின் படங்கள், தகவல்கள் இதோ!

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் பிரேக் ஆற்றலை சரிவிகிதத்தில் சக்கரங்களுக்கு செலுத்தும் இபிடி தொழில்நுட்பம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், 7 ஏர்பேக்குகள் கொண்டதாக வருகிறது.

புதிய ஸ்விஃப்ட் காரின் படங்கள், தகவல்கள் இதோ!

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவில் புதிய சுஸுகி ஸ்விஃப்ட் கார் உலகளாவிய முறையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு பண்டிகை காலத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு களமிறங்கும்.

English summary
Suzuki has unveiled the 2017 Swift in its home market Japan.
Story first published: Tuesday, December 27, 2016, 15:04 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark