இந்தியா வரும் 2017 டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் அறிமுகம்!

By Ravichandran

இந்திய சந்தைகளுக்கு வழங்கப்பட உள்ள 2017 டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ், அறிமுகம் செய்யபட்டுள்ளது.

2017 டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

 2017 டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ்...

2017 டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ்...

ஜப்பானிய கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா தயாரிக்கும் பொலிவு கூட்டபட்ட 2017 டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ், அறிமுகம் செய்யபட்டுள்ளது.

பல்வேறு ஈர்க்கும் அம்சங்களை கொண்டுள்ள இந்த மாடல், இந்திய வாடிக்கையாளர்களால் விரும்பப்பட கூடிய மாடலாக திகழும் என்பதில் எந்த சந்தேகங்களும் இல்லை.

தோற்றம்;

தோற்றம்;

2017 டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ், அதன் முன் பகுதியில் மறுவடிவமைக்கபட்ட டேடைம் ரன்னிங் எல்இடிகள் உடைய மெல்லிய மற்றும் கூர்மையான தோற்றம் கொண்ட ஹெட்லேம்ப்கள் கொண்டுள்ளது.

இதன் முன் பகுதியில் உள்ள பம்பர்களுக்கு வேலைப்பாடுகள் செய்யபட்டு தற்போது ட்ரிபிள் ஸ்லாட் யூனிட்டாக உள்ளது.

2017 டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் காரின் பக்கவாட்டில் உள்ள டோர் ஹேண்டில்களுக்கு குரோம் பூச்சு வழங்கபட்டுள்ளது.

இதன் பின்பகுதியில், மறுவடிவமைக்கபட்ட டெய்ல் லேம்ப் கிளஸ்டர் வழங்கபட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இதன் முந்தைய மாடலில் உபயோகிக்கபட்டது போல், 2017 டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் மாடலிலும் அதே 1.8 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் இஞ்ஜின் உபயோகிக்கபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

2017 டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் மாடலின் இஞ்ஜின்கள், 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகிய 2 தேர்வுகளுடனும் இணைக்கபட்டுள்ளது.

எப்போது அறிமுகம்?

எப்போது அறிமுகம்?

பொலிவு கூட்டபட்ட 2017 டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ், ஐரோப்பாவில் இந்த ஆண்டில் வரும் மாதங்களிலும், இந்திய வாகன சந்தைகளில் 2017-ஆம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபடலாம் என தகவல்கள் வெளியாகின்றன.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஆசியன் என்சிஏபி கிராஷ் டெஸ்டில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா-விற்கு 4 ஸ்டார் ரேட்டிங்

விற்பனையில் உலகின் நம்பர்-1 பட்டத்தை தக்க வைத்துக் கொண்ட டொயோட்டா!

டொயோட்டா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
India Bound 2017 Toyota Corolla Altis was unveiled recently. Like earlier, this facelifted Corolla Altis is expected to use same old 1.8-litre petrol and 1.3-litre diesel engines. 2017 Toyota Corolla Altis would be launched for sale in Europe and would be launched in India in 2017. To know more about this 2017 Toyota Corolla Altis. check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X