இந்தியாவுக்கு அவசியம் வரவேண்டிய 5 கியா கார் மாடல்கள்!

Written By:

இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் கியா மோட்டார்ஸ் நிறுவனமும் இந்தியாவில் கால் பதிக்க முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக இந்தியாவில் ஆலை அமைப்பதற்கான திட்டத்துடன் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் மாடல்கள் குறித்து இந்தியர்கள் மத்தியில் ஆவல் எழுந்துள்ளது. மேலும், ஹூண்டாய் மாடல்களைவிட சற்றே குறைவான விலையில் அவை வருகை தரலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்தநிலையில், இந்தியாவுக்கு வர வேண்டியதாக கருதப்படும் 5 கியா கார்கள் குறித்த விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. கியா பிகான்ட்டோ

01. கியா பிகான்ட்டோ

ஹூண்டாய் ஐ10 காருக்கு மாற்றாக கருத முடியும். மேலும், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரைவிட விலை குறைவாக வரும் என்று நம்பலாம். போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களுக்கு இந்த மாடல் மிக சரியான தேர்வாக அமையும்.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

சர்வதேச அளவில் பிகான்ட்டோ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இயான் காரில் இருக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வரும் வாய்ப்புள்ளது. இதனால், போட்டியாளர்களுக்கு மிக சவாலாக இருக்கும்.

02. கியா ரியோ [ஹேட்ச்பேக்]

02. கியா ரியோ [ஹேட்ச்பேக்]

ஃபோர்டு ஃபிகோ, மாருதி ஸ்விஃப்ட் போன்ற கார்களுக்கு இணையான ரகத்தில் இதனை நிலைநிறுத்த முடியும். ஆனால், போட்டியாளர்களைவிட பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களை பெற்றிருக்கும். எல்இடி பகல்நேர விளக்குகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், கீ லெஸ் என்ட்ரி, ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்டென்ஸ் உள்ளிட்ட வசதிகளுடன் வரும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த கார் போட்டியாளர்களைவிட இடவசதியிலும் சிறப்பாக இருக்கும். ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் இருக்கும் அதே எஞ்சின் ஆப்ஷன்களுடன் சற்றே குறைவான விலையில் வரும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, இதுவும் இந்தியாவுக்கு அவசியமான மாடலாக கருத முடியும்.

 03. கியா ரியோ செடான்

03. கியா ரியோ செடான்

ரியோ ஹேட்ச்பேக் காரின் அடிப்படையிலான மிட்சைஸ் செடான் கார் மாடலாக இருக்கும். இடவசதியிலும், வசதிகளிலும் போட்டியாளர்களை விஞ்சும். டொயோட்டா எட்டியோஸ் காருக்கு இணையான விலையில் நிலைநிறுத்தப்படும் வாய்ப்புள்ளது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

ஹூண்டாய் வெர்னா காரில் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் இதிலும் பயன்படுத்தப்படும். விலையிலும் மிட்சைஸ் செடான் கார்களுக்கு கடும் சவாலை தரும் என்று நம்பலாம்.

04. கியா கேரன்ஸ்

04. கியா கேரன்ஸ்

இந்தியாவுக்கு எம்பிவி கார்களை கொண்டு வரும் திட்டத்தை ஹூண்டாய் கைவிட்ட நிலையில், கியா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் ஏற்கனவே கையில் இருக்கும் இந்த எம்பிவி காரை உடனடியாக களமிறக்கும் வாய்ப்புள்ளது. ரெனோ லாட்ஜி, மாருதி எர்டிகா போன்ற கார்களுக்கு இது போட்டியாக இருக்கும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த காரில் 7 பேர் பயணிப்பதற்கான இருக்கை வசதியும், சிறப்பான இடவசதியையும் கொண்டிருக்கும். ஹூண்டாய் வெர்னா காரின் எஞ்சின்களை இந்த காரிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே, விலையும் வாடிக்கையாளர்களின் கையை கடிக்காது.

5. கியா ஸ்போர்ட்டேஜ்

5. கியா ஸ்போர்ட்டேஜ்

எஸ்யூவி இல்லாமல் இந்த லிஸ்ட் முழுமை பெறாது. ஏனெனில், தற்போதைய சூழலில் எஸ்யூவி இல்லாமல் இறங்குவது உசிதமாக இருக்காது. கியா ஸ்போர்ட்டேஜ் எஸ்யூவி நம் நாட்டு தயாரிப்பான மஹிந்திரா எக்ஸ்யூவி500 போன்ற மாடல்களுடன் போட்டி போடும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த ஸ்போர்ட்டேஜ் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த டீசல் எஞ்சின் 134 பிஎச்பி பவரையும், 183 பிஎச்பி பவரையும் அளிக்கும் இரண்டு விதமான டியூனிங்கில் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வசதிகளிலும், இடவசதியிலும் குறை வைக்காது.

போட்டி அதிகரிக்கும்...

போட்டி அதிகரிக்கும்...

கியா கார்கள் வந்தால் நிச்சயம் மாருதி கார்களுக்கு மட்டுமின்றி, தனது தாய் நிறுவனமான ஹூண்டாய் கார்களுக்கும் கடும் போட்டியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
5 Kia Cars That Should Come To India.
Story first published: Thursday, August 18, 2016, 15:47 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos