மார்ச்சில் ரிலீசாகும் டாப் - 5 புதிய கார் மாடல்கள்... பட்டியலை பார்த்துட்டு புக் பண்ணுங்க!

By Saravana

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பல புதிய கார் மாடல்கள் மார்ச்சில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன.

அதில், அதிகம் எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய கார் மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். புதிதாக கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இந்த பட்டியல் பயனுள்ளதாக அமையும்.

01. டாடா டியாகோ

01. டாடா டியாகோ

டாடா ஸீக்கா என்று பெயரிடப்பட்ட இந்த கார் சமீபத்தில் டியாகோ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அட்டகாசமான டிசைன், நவீன வசதிகள், பட்ஜெட் விலையில் வரும் இந்த கார் நடுத்தர வர்த்தக்கத்தினரின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. குஜராத் மாநிலம், சனந்த் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள டாடா மோட்டார்ஸ் ஆலையில் இந்த காரின் உற்பத்தி துவங்கப்பட்டுவிட்ட நிலையில், விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. பட்ஜெட் விலை கொண்ட ஹேட்ச்பேக் கார்களில் மிகவும் முக்கிய இடத்தை பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா டியாகோ கூடுதல் விபரங்கள்

டாடா டியாகோ கூடுதல் விபரங்கள்

டாடா டியாகோ காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. அனைத்து மாடல்களிலும் டீசல் எஞ்சின்தான் எதிர்பார்க்கப்படும். ஆனால், இந்த காரின் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரூ.3.80 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

02. மஹிந்திரா குவான்ட்டோ ஃபேஸ்லிஃப்ட்

02. மஹிந்திரா குவான்ட்டோ ஃபேஸ்லிஃப்ட்

விற்பனையில் சோபிக்காத மஹிந்திரா குவான்ட்டோ காம்பேக்ட் எஸ்யூவி தற்போது புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. முகப்பு, பின்புறத்தில் டிசைன் மாற்றங்களுடன், கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டு வர இருக்கிறது. இந்த புதிய மாடலில் அதிகம் எதிர்பார்க்கப்படுவது, ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல். மேலும், இது ஒரு 7 சீட்டர் மாடலாகவும் கிடைப்பதும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Picture credit: autocolumn

குவான்ட்டோ கூடுதல் விபரங்கள்

குவான்ட்டோ கூடுதல் விபரங்கள்

மஹிந்திரா குவான்ட்டோ ஃபேஸ்லிஃப்ட் மாடலில் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் மீண்டும் தொடர்கிறது. ஆனால், பெயர் மாற்றம் இருக்கும் என நம்பப்படுகிறது. இந்த எஸ்யூவி கன்ட்டோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.6.5 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படும் இந்த எஸ்யூவி ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், தனது பங்காளியான மஹிந்திரா டியூவி300 மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Picture credit: autocolumn

03. ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட்

03. ஹோண்டா அமேஸ் ஃபேஸ்லிஃப்ட்

காம்பேக்ட் செடான் கார் செக்மென்ட்டில் போட்டி அதிகமாகிவிட்ட காரணத்தால், ஹோண்டா அமேஸ் காருக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதனை போக்கிக் கொள்ளும் விதத்தில், ஹோண்டா அமேஸ் காருக்கு புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு களமிறக்கப்பட உள்ளது. டிசைன், இடவசதி, பூட் ரூம், சிறந்த எஞ்சின், அதிக மைலேஜ் என பல விதங்களிலும் வாடிக்கையாளர்களை கவர்ந்த ஹோண்டா அமேஸ் கார் தற்போது புதுப்பொலிவு பெற்று வருவது வாடிக்கையாளர்களின் ஆவலைத் தூண்டியிருக்கிறது.

ஹோண்டா அமேஸ் கூடுதல் தகவல்கள்

ஹோண்டா அமேஸ் கூடுதல் தகவல்கள்

முகப்பிலும், பின்புறத்தில் டெயில் லைட் க்ளஸ்ட்டரிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. மேலும், இன்டீரியரில் அழுது வடிந்த டேஷ்போர்டு இப்போது புதுப்பொலிவுடன் மிகவும் அருமையாக மாற்றம் செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். ஹோண்டா அமேஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் எஞ்சினில் மாற்றங்கள் இருக்காது. முந்தைய மாடலில் இருந்த அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் பயன்படுத்தப்படுகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றுமம் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் உண்டு. வரும் 3ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. எனவே, தற்போது பல டீலர்களுக்கு இந்த கார் வந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சற்று கூடுதலான விலையில் விற்பனைக்கு வருகிறது.

04. ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட்

04. ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட்

ஹூண்டாய் க்ரெட்டா வரவால், ரெனோ டஸ்ட்டருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதற்காக, புதுப்பொலிவுடன் ரெனோ டஸ்ட்டர் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த புதியம மாடலின் முகப்பிலும், பின்புறத்தில் டெயில் லைட் க்ளஸ்ட்டரிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ரெனோ டஸ்ட்டரை எதிர்பார்ப்பதற்கு முக்கிய காரணமாக, ஏஎம்டி மாடலில் வருவதை கூறலாம்.

கூடுதல் விபரங்கள்

கூடுதல் விபரங்கள்

ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, ஏஎம்டி மாடலிலும் வருகிறது. ஆனால், ரெனோ டஸ்ட்டரின் 110 பிஎஸ் பவர் கொண்ட டீசல் மாடலில் மட்டுமே இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும். இந்த மாடல் பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் மாடல்களில் ரூ.8.30 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஏஎம்டி மாடல் ரூ.13 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வரும் என தகவல்கள் கூறுகின்றன.

05. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

05. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

இந்த பட்டியலில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகம் பெற்றிருக்கும் மாடல் என்றால் அது மாருதி விட்டாரா பிரெஸ்ஸாதான். ஆம், காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் களமிறங்கும் இந்த மாடல் விற்பனையிலும் கலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், டீசல் மாடலில் மட்டுமே வர இருப்பதையும் மனதில் வையுங்கள்.

கூடுதல் தகவல்கள்

கூடுதல் தகவல்கள்

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் 90 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும். ரூ.8.50 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
5 Most Awaited New Car launches In March 2016.
Story first published: Monday, February 29, 2016, 11:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X