7-வது ஊதிய குழுவின் சம்பள உயர்வு எதிரொலி - பைக், கார்கள் விற்பனை அதிகரிக்குமா?

Written By:

மத்திய அரசு 7-வது ஊதிய குழு பரிந்துரைகளின் படி, சம்பளம் உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டடது. இந்த அறிவிப்பினால் லட்ச கணக்கான மக்கள் பயனடைய உள்ளனர். இந்த நிலையில், பைக் மற்றும் கார்களின் விற்பனையும் வெகுவாக அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த 2015-ஆம் ஆண்டில் மட்டும் 2.78 மில்லியன் பாசஞ்ஜர் வாகனங்கள் விற்பனையாகியது. இதில் 10% முதல் 15% வரையிலானோர் அரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷன் பெறுவோர்கள் ஆவர். அதாவது, சுமார் 400,000 வாடிக்கையாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷன் பெறுவோர்களாக இருந்தனர். தற்போது அறிவிக்கபட்டுள்ள 7-வது ஊதிய குழுவின் சம்பள உயர்வினால் 10 மில்லியன் (1 கோடி) பேர் நேரடியாக பயன் பெற உள்ளனர்.

7th-pay-commision-car-bike-sales-set-to-get-boost-immensely-soon

7-வது ஊதிய குழுவின் சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகிக்கொண்டே இருக்கும் நிலையில், நேற்றைய பங்கு சந்தை வர்த்தகத்தில் ஹீரோ மோட்டோகார்ப், டாடா மோட்டர்ஸ் நிறுவனம் மற்றும் மாருதி சுஸுகி ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கிடுகிடுவென உயர்ந்தது. இது போன்ற அறிகுறிகளால், பைக் மற்றும் கார்களின் விற்பனையில் அதிகரிப்பு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எனினும், இந்த 7-வது ஊதிய குழுவின் சம்பள உயர்வு அறிவிப்பினால், உடனடியாக பைக் மற்றும் கார்கள் விற்பனையில் பெரிய ஏற்றம் தெரிய வாய்ப்பில்லை என ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், 6-வது ஊதிய குழுவின் சம்பள உயர்வின் அரியர்கள் 2 வருடங்களுக்கானதாக இருந்தது. ஆனால், 7-வது ஊதிய குழுவின் சம்பள உயர்வு ஆனது, 2016 ஜனவரி 1-ஆம் தேதி துவங்கி 8 மாதங்களுக்கானதாக இருக்கும் என இந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

எப்படியும், செலவழிக்கக் கூடிய வருமானம் அதிகரிக்க உள்ளது. இதனால் மக்கள் தங்களின் தற்போதைய வாகனங்களை மாற்றி மேம்படுத்தி கொள்ளவோ அல்லது தங்களின் முதல் வாகனத்தையோ வாங்குவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது.

ஏறக்குறைய 89% மத்திய அரசு ஊழியர்கள் அடித்தட்டு கிரேட்டில் உள்ளனர். மேலும் 53% மத்திய அரசு ஊழியர்கள் கிராமப்புறங்களில் வசிப்பவர்ககளாக உள்ளனர். 44% அரசு ஊழியர்கள் 40-ற்கும் குறைவான வயதுடையவர்களாக உள்ளனர் என மோதிலால் ஆஸ்வால் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

இது குறித்து, ஹோண்டா மோட்டார்சைக்கிள் அன்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரி, யாத்வீந்தர் சிங் குலேரியா பல்வேறு கருத்துகளை கூறினார். "7-வது ஊதிய குழுவின் சம்பள உயர்வு அறிவிப்பு, மழைக்காலம் நெருங்குதல், ஓஆர்ஓபி விநியோகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஒரே நேரத்தில் ஒருமித்து நிகழ்கிறது. இது நிச்சயம் இரு சக்கர வாகனங்களின் விற்பனைக்கு உந்துதலாக இருக்கும். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெரும்பாலானோர், 2 சக்கர வாகனங்களின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். பண்டிகை காலனகளுக்கு முன்னதாக சரியான நேரத்தில் வழங்கப்பட உள்ள இந்த கூடுதல் பணம், இந்த துறைக்கு டர்போசார்ஜ் போல் செயல்பட வாய்ப்புகள் உள்ளது" என யாத்வீந்தர் சிங் குலேரியா தெரிவித்தார்.

அதிகப்படியான டிமான்ட் நுழைவு நிலை மற்றும் நடுத்தர மோட்டார்சைக்கிள்கள், கியர்லெஸ் ஸ்கூட்டர், காம்பேக்ட் செடான்கள் மற்றும் ஹேட்ச்பேக் ஆகியவைக்கு தான் இருக்கும். இதனால், இந்த செக்மென்ட் தொடர்பான வாகன விற்பனையில் உள்ள நிறுவனங்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்க உள்ளது.

"கடந்த ஆண்டு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு, நாங்கள் சுமார் 200,000 வாகனங்களை விற்றோம். 7-வது ஊதிய குழுவின் சம்பள உயர்வு அமலாக்கம் ஆவதனால், இந்த செக்மென்ட்டில், நாங்கள் 250,000+ வாகனங்கள் விற்க முடியும் என எதிர் பார்க்கிறோம்" என மாருதி சுஸுகி நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரவித்தார்.

இத்தகைய வகையில், அபாரமாக வாகனங்கள் விற்பனை ஆனால், அந்த அளவிற்கு சாலைகளில் 2 சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து விடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

English summary
Central government gave nod to pay hike in 7th Pay Commission, which will benefit lakhs of its employees. Implementation of 7th Pay Commission, coinciding with onset of monsoon and OROP disbursements, two-wheeler industry growth will be high. Immense sales of vehicles will reciprocate to increase in number of Bikes and Cars on Roads. To know more, check here...
Story first published: Thursday, June 30, 2016, 18:21 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark