மாருதி சுஸுகியின் புதிய ஆல்ட்டோ 800 விரைவில் அறிமுகம்

Written By:

மாருதி சுஸுகி நிறுவனம், இந்திய வாகன சந்தைகளில், புதிய ஆல்ட்டோவை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம், இந்திய வாகன சந்தைகளில் ஏராளமான புதிய தயாரிப்புகளை வழங்கி வருகின்றனர். அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக், மாருதி நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான தயாரிப்புகளில் ஒன்றாக உள்ளது.

மாருதி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவிருக்கும் புதிய ஆல்ட்டோ 800 தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

கடும் போட்டி;

கடும் போட்டி;

மாருதி சுஸுகி ஆல்ட்டோ, ரெனோ க்விட் மற்றும் டட்சன் ரெடி-கோ ஆகிய மாடல்களின் ரூபத்தில் கடுமையான சவால்களை எதிர்நோக்கி வருகிறது. ரெனோ க்விட் மற்றும் டட்சன் ரெடி-கோ, ஆல்ட்டோ 800 மாடலின் விற்பனை அளவுகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த போட்டியினை சமாளிக்கவே மாருதி நிறுவனம் புதிய ஆல்ட்டோவை அறிமுகம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.

மேம்பாடுகள்;

மேம்பாடுகள்;

மாருதி நிறுவனம், போட்டியினை எதிர்கொள்ள தங்களின் ஆல்ட்டோவில் சில மேம்பாடுகள் செய்து வழங்க உள்ளனர்.

அறிமுகம்;

அறிமுகம்;

மாருதி நிறுவனம், புதிய ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக்கை, 2017-ஆம் ஆண்டு இறுதியில் அல்லது 2018-ஆம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய உள்ளனர்.

ஜப்பானின் மாடல்?

ஜப்பானின் மாடல்?

தற்போதைய நிலையில், ஜப்பானின் வாகன சந்தைகளில் வழங்கப்படும் ஆல்ட்டோ 800 மாடலே தான் இந்திய வாகன சந்தைகளுக்கும் அளிக்கப்படும். டிசைன் படி, ஜப்பானிற்கான ஆல்ட்டோ 800 மற்றும் இந்தியாவிற்கான புதிய ஆல்ட்டோ 800 ஏறக்குறைய ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால், இந்தியாவிற்கான புதிய ஆல்ட்டோ 800 மாடலில், தவிர்க்க முடியாத பல்வேறு ஈர்க்கும் வகையிலான அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மாருதியின் புதிய ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக்கின் இஞ்ஜினில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்ட்டோ மாடலானது, 800சிசி இஞ்ஜின் மற்றும் 1.0 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் இஞ்ஜின்கள் தேர்வுகளுடனேயே வெளியாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

மாருதியின் புதிய ஆல்ட்டோ 800 ஹேட்ச்பேக்கின் இஞ்ஜின்கள், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் வெளியாகும். இதன் 1.0 லிட்டர் இஞ்ஜின் மட்டும், ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுடன் வெளியாகும்.

English summary
Maruti Suzuki plans on updating its Alto 800 to compete with new rivals like Renault Kwid and Datsun redi-GO in Indian market. All-new Alto 800 is expected to be introduced in India by 2017-end or during early 2018. Indian market shall receive Alto 800 that is currently offered in Japanese market. Design will be extremely similar to each other. To know more, check here...
Story first published: Monday, September 26, 2016, 15:59 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos