புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகியது

Written By:

டொயோட்டா நிறுவனம் தயாரிக்கும் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகியது.

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் டொயோட்டா நிறுவனம், இந்த புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியை உருவாக்கி வருகிறது.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி தொடர்பான கூடுதல் தகவல்களை, வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி, முதல் முறையாக இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டது. அப்போது எடுக்கபட்ட ஸ்பை படங்கள் தற்போது வெளியாகியது.

இது, கடந்த ஆண்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணிகளுக்காக இறக்குமது செய்யப்பட்ட வாகனமாக இருக்கும் என நம்பப்படுகிறது. முன்னதாக, புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி, கடந்த ஆண்டே தாய்லாந்தில் அறிமுகம் செய்யபட்டது.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

புதிய 2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி, குரோம் கிரில், ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்-கள் உடைய புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் 18-இஞ்ச் அல்லாய் வீல்கள் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

இஞ்ஜின் வகைகள்;

இஞ்ஜின் வகைகள்;

புதிய 2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி, சர்வதேச சந்தைகளில், 2.4-லிட்டர் டீசல் இஞ்ஜின், 2.8-லிட்டர் டீசல் இஞ்ஜின் மற்றும் 2.7 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் ஆகிய 3 விதமான இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கும்.

இந்தியாவிற்கான இஞ்ஜின்;

இந்தியாவிற்கான இஞ்ஜின்;

இந்திய சந்தைகளை பொருத்த வரை, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவிகானப்படுவது போன்ற இஞ்ஜின் தான், புதிய 2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியிலும் பொருத்தப்படும்.

புதிய 2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் 2.4 லிட்டர் இஞ்ஜின், 148 பிஹெச்பியையும், 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

இதன் 2.8 லிட்டர் இஞ்ஜின், 175 பிஹெச்பியையும், 450 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக உள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

புதிய 2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி, 6-ஸ்பீட் மேனுவல் மற்றும் 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீடுகள் தொடருமா?

முதலீடுகள் தொடருமா?

இந்தியாவில் தொடர்ந்து கடுமையாகி கொண்டே இருக்கும் மாசு உமிழ்வு தொடர்பான நெறிமுறைகளின் காரணமாக, டொயோட்டா நிறுவனம் தங்களது முதலீடுகளை குறைத்து கொள்ள திட்டமிட்டு வருவதாக கூறியது.

ஆனால், தற்போது வெளியாகிய ஸ்பை படங்களை பார்த்தால், டொயோட்டா நிறுவனம், புதிய 2016 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியை இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்வதற்கு தொடர்பான முயற்சிகளை மேற்க்கொண்டு வருவதாகவே தெரிகின்றது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் அறிமுகம்: படங்கள், தகவல்கள்!

ஃபார்ச்சூனர் தொடர்புடைய செய்திகள்

டொயோட்டா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Spy Pictures Credit - www.team-bhp.com

English summary
Spy Pics of 2016 Toyota Fortuner SUV spotted while testing on Indian Roads were revealed. This test mule spotted is believed as the one unit, that Toyota imported for R&D purposes in October last year. From New spy shots, Toyota India appears to be still working on Launch of 2016 Fortuner for Indian Market. Earlier, Toyota announced cease of further investments in India. To know more, check here...
Story first published: Thursday, August 4, 2016, 11:19 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark