ஆப்பிள் நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் எப்போது அறிமுகமாகிறது தெரியுமா?

Written By:

ஆப்பிள் நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் அடுத்த 5 ஆண்டுகளில் அறிமுகம் செய்யபட உள்ளது.

ஆப்பிள் நிறுவனம், உலகம் முழுவதும் அதன் ஐஃபோன்களுக்கும், கணினிகளுக்கும் மிகுந்த புகழ்வாய்ந்த நிறுவனமாக திகழ்கிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஆய்வாளரான பைபர் ஜாஃப்ரே ஜீன் முன்ஸ்டர், ஆப்பிள் நிறுவனம் அடுத்ததாக எலக்ட்ரிக் காரை தயாரிக்க உள்ளது என்றார். இந்த ரகசிய எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் திட்டமானது, 5 ஆண்டு திட்டம் போல் செயல்படுத்தபட்டு வருகிறது என ஜாஃப்ரே கூறினார்.

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த திட்டம், பிராஜக்ட் டைடன் என்று அழைக்கபடுகிறது. இந்த எலக்ட்ரிக் காரை ஆப்பிள் நிறுவனம் தான் வடிவமைத்து வருகிறது. ஆப்பிள் எலக்ட்ரிக் கார் திட்டத்தினுடைய உற்பத்தி பொறுப்பு, அவுட்சோர்ஸிங் அல்லது அயலாக்கம் எனப்படும் பிற நிறுவனங்களிடம் வழங்கபட உள்ளது.

"ஆப்பிள் எலக்ட்ரிக் கார், 2019 அல்லது 2020-ஆம் ஆண்டில் காட்சிபடுத்தபடும். இந்த மாடல், 2021-ஆம் ஆண்டு முதல் தான், விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதன் மதிப்பு சுமார் 75,000 டாலர்களாக இருக்கலாம். இது இன்றைய காலகட்டத்தில் விற்கபடும் டெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் செடானின் அடிப்படை மாடலின் விலை ஆகும்" என ஜாஃப்ரே தெரிவித்தார்.

apple-electric-car-could-be-available-for-sale-by-2021-end

இந்த எலக்ட்ரிக் கார் திட்டத்திற்கு என பிரத்யேகமான குழு பணிபுரிந்து வருகிறது. மேலும், இந்த எலக்ட்ரிக் கார் திட்டத்தில் பணிபுரிந்து வரும் குழுவினரின் எண்ணிக்கையும் அதிகரிக்கபட்டு வருகிறது.

எந்த காரணத்தை கொண்டும், இந்த எலக்ட்ரிக் கார் திட்டத்தை, ஆப்பிள் நிறுவனம் கைவிடாது என தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்த எலக்ட்ரிக் கார் திட்டம் முக்கியமான பணம் கொழிக்கும் திட்டம் என ஆப்பிள் நிறுவனம் புரிந்து வைத்துள்ளது.

English summary
Tech Giant Apple could be launching their own Electric Car. This plan is being referred to as "Project Titan". This Electric Car would be designed by Apple, while 80% of this car Production would be outsourced. This Electric Car might be showcased in 2019 or 2020. It will be available for sale from 2021. This car will be priced at about $75,000. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark