ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்டீயரிங் டெக்னாலஜிக்கு காப்புரிமை... !!

By Meena

மென்பொருள் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத் துறையில் யுனிவர்சல் கிங்காக விளங்கும் நிறுவனம் ஆப்பிள். ஸ்டீவ் ஜாப்ஸின் உழைப்பில் உதயமான அந்நிறுவனம், அவரது காலத்துக்குப் பிறகும் சர்வதேச அளவில் கோலோச்சி நிற்கிறது.

அதற்குக் காரணம் தரம் மற்றும் புதுமைதான். அந்த இரண்டிலும் இதுவரை எந்த சமரசத்துக்கும் ஆப்பிள் நிறுவனம் இடம் கொடுத்ததில்லை. அந்நிறுவனம் தானியங்கி காருக்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகின. அதன் மூலம் உலக அளவில் புதிய மைல் கல்லை ஆப்பிள் எட்டப்போகிறது என்றெல்லாம் பேச்சுகள் அடிபட்டன. இந்த நிலையில்தான் அந்நிறுவனம் மேம்படுத்திய ஸ்டீயரிங் தொழில்நுட்பமொன்றுக்கு அண்மையில் காப்புரிமை பெறப்பட்டுள்ளது. ஸ்டீயரிங் என்பதால், இது ஆப்பிளின் தானியங்கி கார் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை என்று நாமாக ஓர் அனுமானத்துக்கு வந்துவிடலாம்.

ஆப்பிள் கார் டெக்னாலஜி

சரி, இந்த ஸ்டீயரிங் டெக்னாலஜி எதற்கு? என்ன பயன்பாட்டுக்கானது? என்பது குறித்து ஆராய முற்பட்டபோது, சில விஷயங்களை உணர முடிந்து. அதாவது, ஆப்பிள் மட்டும் அந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டறியவில்லை. ஸ்வீடனைச் சேர்ந்த பிஏஇ என்ஜினியரிங் என்ற நிறுவனமும் இந்தப் பணியில் இணைந்துள்ளது என்று தெரிகிறது.

பாதுகாப்புப் படைக்குத் தேவையான தொழில்நுட்பங்களை வடிவமைத்துத் தருவதில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருவதுதான் இந்த பிஏஇ. காப்புரிமை பெற்ற அந்த ஸ்டீயரிங் தொழில்நுட்பத்தின் வரைபடத்தைப் பார்க்கும்போது, வழக்கமான டெக்னாலஜியில் இருந்து அது மாறுபட்டது என்பது தெளிவாகிறது.

வரைபடத்தில் ஸ்டீயரிங் கட்டுப்பாட்டு சாதனங்கள், பற்சக்கரத்தில் இயங்கும் வாகனத்தின் இரு பகுதிகளை இணைக்கிறது. மையப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ஸ்டீயரிங் பகுதியானது வயர்கள், குழாய்கள் மற்றும் இன்ன பிற சாதனங்களால் காரின் மற்ற பகுதிகளுக்கு கட்டுப்பாட்டை வழங்குகிறது.

குளிர் பிரதேசங்களில் வாகனங்களை இயக்கும்போது, அடிப்பாகங்களில் பனி உறைந்து நிற்பதைத் தடுக்கும் வகையில் இந்தத் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கரடு முரடான சாலையில் செல்லும்போது பாறைகள், சிறு கற்கள் ஆகியவை வாகனத்தில் மாட்டிக் கொள்ளும் பிரச்னைக்கு இந்த தொழில்நுட்பம் தீர்வளிக்கும் என்றும் தெரிகிறது.

வரைபடத்தின் அடிப்படையில் ஆப்பிள் நிறுவனம் மேம்படுத்தி வரும் டெக்னாஜியை அணுகும்போது இந்த விஷயங்கள் மட்டுமே தற்போது புலப்படுகிறது. அது குறித்த கூடுதல் தகவல்களை அறிய மேலும் சில காலம் பொருத்திருக்க வேண்டியுள்ளது. அவற்றை உடனுக்குடன் அறிந்து கொள்ள இணைந்திருங்கள் டிரைவ் ஸ்பார்க்குடன்...

Most Read Articles
English summary
Apple Receives Patent For A New Steering System.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X