அதிநவீன பாதுகாப்பு அம்சங்களுடன் அசோக் லேலண்ட் சன்ஷைன் பஸ் இந்தியாவில் அறிமுகம்

Written By:

அசோக் லேலண்ட் நிறுவனம் வழங்கும் அசோக் லேலண்ட் சன்ஷைன் பஸ் விஜயவாடாவில் அறிமுகம் செய்யபட்டது.

அசோக் லேலண்ட் சன்ஷைன் பஸ் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

அசோக் லேலண்ட் சன்ஷைன்...

அசோக் லேலண்ட் சன்ஷைன்...

அசோக் லேலண்ட் சன்ஷைன் பஸ்ஸை, இந்தியாவின் முன்னணி கமர்ஷியல் வெஹிகிள் (வாகன) உற்பத்தியாளரான அசோக் லேலண்ட் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.

இது, விஜயவாடாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

அசோக் லேலண்ட் சன்ஷைன் மட்டும் தான், இந்தியாவில் முதன் முறையாக ஃபிராண்டல் கிராஷ் புரொடக்ஷன் (முன் பக்கத்தில் விபத்துக்கான பாதுகாப்பு - frontal crash protection) மற்றும் ரோல் ஓவர் ஏற்படாமல் தடுக்கும் வகையிலான டிசைன் (roll over compliant design) கொண்டுள்ள ஒரே பஸ் ஆகும்.

காட்சிப்படுத்தல்;

காட்சிப்படுத்தல்;

அசோக் லேலண்ட் சன்ஷைன் பஸ், முதன் முதலாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது. இது ஏராளமான பிரத்யேகமான அம்சங்கள் கொண்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

அசோக் லேலண்ட் சன்ஷைன் பஸ், ஆண்டி-பாக்டீரியல் இன்டீரியர்கள், ஆண்டி-ஸ்கிட் ஃப்ளோரிங் (வழுக்காத தரை அமைப்பு-anti-skid flooring), தீ பற்றாத இன்டீரியர்கள் (fire retardant interiors), நிகழ் கால டிராக்கிங்கிற்காக ஐ-அலர்ட் சிஸ்டம் (i- ALERT system) மற்றும் சிக்ஸ்த் சென்ஸ் ('6th Sense') எனப்படும் ஃபிரண்ட் கொள்ளிஷன் அவாய்டன்ஸ் சிஸ்டம் (front collision avoidance system) எனப்படும் முன் பக்கம் கிராஷ் ஏற்படாமல் தடுக்கும் வகையிலான சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் கொண்டுள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

முன்பு குறிப்பிட்ட அம்சங்கள் மட்டுமல்லாமல், அசோக் லேலண்ட் சன்ஷைன் பஸ், பாதி ஒருங்கிணைந்த சேஸி கன்ஸ்ட்ரக்ஷன் (semi-integral chassis construction - செமி-இன்டக்ரல் சேஸி கன்ஸ்ட்ரக்ஷன்) அமைப்பு கொண்டுள்ளது.

இதனால், தாழ்ந்த ஃபிக்ஸ்ட் என்ட்ரீ மற்றும் ஸ்திரமான பயணத்திற்கு தாழ்ந்த செண்டர் ஆஃப் கிராவிட்டி கொண்டுள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

அசோக் லேலண்ட் சன்ஷைன் பஸ், பேரபோலிக் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது. இதனால், மிக மென்மையான ரைட் சாத்தியமாகிறது.

பாதுகாப்பு;

பாதுகாப்பு;

அசோக் லேலண்ட் சன்ஷைன் பஸ், எமர்ஜென்சி எக்ஸிட் டோர்கள் மற்றும் டோர் அலாரம்கள் கொண்டுள்ளது.

வேரியன்ட்கள்;

வேரியன்ட்கள்;

அசோக் லேலண்ட் சன்ஷைன் பஸ், 40 சீட்டர் வேரியன்ட் மற்றும் 50 சீட்டர் வேரியன்ட் என 2 வேரியன்ட்களில் வெளியாகிறது.

எம்டி கருத்து;

எம்டி கருத்து;

அசோக் லேலண்ட் சன்ஷைன் பஸ் அறிமுகம் குறித்து அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் வினோத் கே. தாசரி மிகுந்த பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.

மேலும், "இந்த அசோக் லேலண்ட் சன்ஷைன் பஸ், எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலான பஸ் ஆகும். இதற்கு காரணம், இது ஸ்கூல் போக்குவரத்து துறையில், புதிய தரமதிப்பீடுகளை வகுக்க உள்ளது.

சன்ஷைன் பஸ், குழந்தைகளின் உலகத்தை பிரதிபளிக்கும் வித்தத்தில், மிகுந்த கலைநயத்துடனும், உயர்மட்ட பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. உலக தரத்திலான தொழில்நுட்பம், டிசைன் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுள்ளது. இது குழந்தைகளின் தினசரி போக்குவரத்து முறையையே, அனுபவம் போல் மாற்றும் அனைத்து அம்சங்களும் கொண்டுள்ளது" என வினோத் கே. தாசரி தெரிவித்தார்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய எலக்ட்ரிக் பஸ்சை அறிமுகப்படுத்திய அசோக் லேலண்ட்!

வால்வோ சிட்டி பஸ்சுக்கு நிகரான புதிய அசோக் லேலண்ட் ஜன் பஸ்: சிறப்பம்சங்கள்

அசோக் லேலண்ட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

அசோக் லேலண்ட் சன்ஷைன் பஸ்

அசோக் லேலண்ட் சன்ஷைன் பஸ்

அசோக் லேலண்ட் சன்ஷைன் பஸ்

அசோக் லேலண்ட் சன்ஷைன் பஸ்

அசோக் லேலண்ட் சன்ஷைன் பஸ்

அசோக் லேலண்ட் சன்ஷைன் பஸ்

English summary
Ashok Leyland, one of India's leading commercial vehicle manufacturer has launched their new Ashok Leyland 'Sunshine' school bus in Vijayawada. Ashok Leyland Sunshine is the only school bus in India to have roll over compliant design and frontal crash protection feature. Ashok Leyland Sunshine comes in two variants - 40 seater configuration or 50 seater set up. To know more, check here...
Story first published: Wednesday, June 29, 2016, 15:46 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark