அஸ்டன் மார்ட்டின் வேன்குவிஷ் ஸகாட்டோ கான்செப்ட் கார் அறிமுகம்

Written By:

அஸ்டன் மார்ட்டின் நிறுவனம், வேன்குவிஷ் ஸகாட்டோ கான்செப்ட் என்ற புதிய காரை அறிமுகம் செய்கிறது.

வேன்குவிஷ் ஸகாட்டோ கான்செப்ட் குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

வேன்குவிஷ் ஸகாட்டோ கான்செப்ட்...

வேன்குவிஷ் ஸகாட்டோ கான்செப்ட்...

உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான அஸ்டன் மார்ட்டின், இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் ஸகாட்டோ என்ற டிசைன் வடிவமைப்பு நிறுவனத்துடன் கை கோர்த்து, வேன்குவிஷ் ஸகாட்டோ கான்செப்ட் என்ற கான்செப்ட் காரை உருவாக்கியுள்ளது.

உலகளாவிய அறிமுகம்;

உலகளாவிய அறிமுகம்;

ஆஸ்டின் மார்ட்டின் வேன்குவிஷ் ஸகாட்டோ கான்செப்ட் காரின் உலகளாவிய அறிமுகம், இத்தாலியில் நடைபெற உள்ளது.

இந்த வேன்குவிஷ் ஸகாட்டோ கான்செப்ட் கார், இத்தாலியின் கோமோ ஏறியில் (Lake Como), மே 21 மற்றும் மே 22 ஆகிய தேதிகளில் நடைபெரும் கன்கர்சோ தி'எளிகான்ஸா வில்லா தி'எஸ்ட் (Concorso d'Eleganza Villa d'Este) என்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யபடுகிறது.

வேன்குவிஷ் ஸகாட்டோ கான்செப்ட் காரானது, ஆஸ்டின் மார்ட்டின் மற்றும் ஸகாட்டோ என்ற இரு மாபெரும் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய 5-வது கார் ஆகும்.

இந்த 2 நிறுவனங்கள் இணைந்து, முதன் முதலாக 1960-ஆம் ஆண்டில் டிபி4 ஸகாட்டோ காரை உருவாக்கினர்.

இன்ஜின்;

இன்ஜின்;

முழுவதுமாக கார்பன் ஃபைபர் மூலம் உருவாக்கபட்டுள்ள அஸ்டன் மார்ட்டின் வேன்குவிஷ் ஸகாட்டோ கான்செப்ட் கார், 5.9 லிட்டர் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 591 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

வழக்கமான வேன்குவிஷ் ஸகாட்டோ கான்செப்ட் , 591 பிஹெச்பியை மட்டுமே வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் படி, அஸ்டன் மார்ட்டின் வேன்குவிஷ் ஸகாட்டோ கான்செப்ட் கார், அஸ்டன் மார்ட்டின் மற்றும் ஸகாட்டோ ஆகிய 2 நிறுவனங்களின் மிக சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது.

முன்பக்க டிசைன்;

முன்பக்க டிசைன்;

அஸ்டன் மார்ட்டின் வேன்குவிஷ் ஸகாட்டோ கான்செப்ட் காரின் முன் பக்க டிசைன் படி, இதற்கு தனித்துவம் மிக்க அஸ்டன் மார்ட்டினின் ஹெட்லேமப்கள் மற்றும் கிரில் பொருத்தபட்டுள்ளது.

சைட் டிசைன்;

சைட் டிசைன்;

அஸ்டன் மார்ட்டின் வேன்குவிஷ் ஸகாட்டோ கான்செப்ட் காரின் பக்கவாட்டு மிரர், அஸ்டன் மார்ட்டின் ஒன்-77 மாடலில் உள்ளது போல் அமைந்துள்ளது.

கிளாஸ் மூலம் போர்த்தபட்டது போன்ற டிசைன், அஸ்டன் மார்ட்டினின் மற்றொரு சிறப்பு அம்சமாகும்.

ரியர் டிசைன்;

ரியர் டிசைன்;

இதன் பிலேடட் டெயில்லேம்ப்கள், வல்கேன் ட்ரக்கை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது.

இதன் ரியர் டிஃப்யூசர், அஸ்டன் மார்ட்டின் டிபி 11 மாடலில் உள்ளது போல் உள்ளது.

சிறப்பம்சம்;

சிறப்பம்சம்;

ஸகாட்டோ டிசைன் நிறுவனத்தின் முக்கியமான டிரேட்மார்க் டிசைன் சிறப்பம்சமான டபுள் பப்பல் ரூஃப் மற்றும் ரவுண்டட் (வட்ட) ரியர் ரிஃப்ளக்டர்கல் ஆகியவை, இந்த அஸ்டன் மார்ட்டின் வேன்குவிஷ் ஸகாட்டோ கான்செப்ட் காரில் சேர்க்கபட்டுள்ளது.

டபுள் பப்பல் ரூஃப் டிசைன், 1950-களில் இருந்து, ஸகாட்டோ டிசைன் நிறுவனத்தின் முக்கிய டிசைன் அம்சமாக உள்ளது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

அஸ்டன் மார்ட்டின் வேன்குவிஷ் ஸகாட்டோ கான்செப்ட் காரின் உட்புற பகுதிகளில், கார்பன் ஃபைபர், அனோடைஸ் செய்யபட்ட பிரான்ஸ் மற்றும் அனிலைன் லெதர் ஆகியவற்றின் கலவை அதிக அளவில் உள்ளது.

இதன் சீட்கள் மற்றும் டோர் பேனல்கள், கனமான துணியை கொண்டு 'இசட்' அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட தையல் வேலைப்பாடுகள் ('Z' pattern quilt stitch) கொண்டுள்ளது. இதே போன்ற தையல் வேலைப்பாடுகள் ஹெட்ரெஸ்ட்களிலும் உள்ளது.

இந்த 'இசட்' அமைப்பிலான தையல் வேலைப்பாடுகள், செண்டர் கன்சோல் பகுதியிலும் உள்ளது.

உற்பத்தி;

உற்பத்தி;

அஸ்டன் மார்ட்டின் வேன்குவிஷ் ஸகாட்டோ கான்செப்ட் கார், தயாரிப்பு நிலை வரை சென்று உற்பத்தி செய்யப்படுமா, இல்லையா என்பது குறித்து எந்த விதமான அதிகாரப்பூர்வமான தகவல்களும் எதுவும் வெளியாகவில்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஜேம்ஸ்பாண்ட் காருடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்... பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்!

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் உபயோகிக்கபட்ட அஸ்டன் மார்ட்டின் டிபி10 கார் ஏலம்

அஸ்டன் மார்ட்டின் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Aston Martin have teamed up once again with Italian design house Zagato to unveil breathtaking Vanquish Zagato Concept. Aston Martin Vanquish Zagato Concept will make its global debut at Concorso d'Eleganza Villa d'Este, being held at Lake Como in Italy, from 21 - 22 May 2016. Vanquish Zagato Concept is fifth car made by two automotive giants together since the 1960's...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more