இந்தியாவிற்கான புதிய ஆடி ஏ3 செடான் ரிலீஸ் தேதி வெளியாகியது

Written By:

ஆடி நிறுவனம் தயாரிக்கும் பொலிவு கூட்டப்பட்ட புதிய 2017 ஆடி ஏ3 செடானின் ரிலீஸ் தேதி வெளியாகியது. ஏறக்குறைய அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும், தங்களின் புகழ்பெற்ற தயாரிப்புகளுக்கு பொலிவு கூட்டி புதிய மாடல்களை அறிமுகம் செய்வது வழக்கம். அவ்வலையில், ஆடி நிறுவனமும், பொலிவு கூட்டப்பட்ட புதிய 2017 ஆடி ஏ3 செடானை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளனர்.

புதிய ஆடி ஏ3 செடான் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்...

அறிமுகம்...

ஜெர்மனியை சேர்ந்த ஆடி நிறுவனம் தயாரிக்கும் ஏ3 செடானுக்கு பொலிவு கூட்டப்பட்டு, இது அடுத்த ஆண்டு ஃபிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி ஏ3...

ஆடி ஏ3...

ஆடி நிறுவனம் தயாரிக்கும் ஏ3 செடானின் முதல் மாடல் முன்னதாக 2013-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இது அறிமுகம் செய்யப்பட்டு சில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதன் பொலிவு கூட்டப்பட்ட மாடல், இன்னும் சில மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஸ்டைல்;

ஸ்டைல்;

புதிய ஆடி ஏ3 செடானின் ஸ்டைல் அம்சங்களில் சில மாற்றங்கள் செய்யப்படும். ஆடி ஏ3 மற்றும் ஏ4 ஆகிய செடான்கள் தான் இந்நிறுவனத்தின் நுழைவு நிலை செடான்கள் ஆகும். இதில், ஆடி ஏ3 செடான் சிறிய மற்றும் விலை குறைந்த மாடல் ஆகும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஆடி ஏ3 செடான் பெரிய மற்றும் கூடுதல் திறன்மிக்க 1.8 டிஎஃப்எஸ்ஐ இஞ்ஜின் கொண்டுள்ளது. ஆனால், ஆடி ஏ4 மாடல், சிறிய 1.4 லிட்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது. புதிய ஆடி ஏ3 செடான், சிறிய இஞ்ஜின் கொண்டிருக்கும்.

இன்டீரியர்;

இன்டீரியர்;

புதிய ஆடி ஏ3 செடான், ஆடியின் விர்ச்சுவல் காக்பிட் மற்றும் ஹை-ரெசல்யூஷன் 12.3-இஞ்ச் டையகனல் டிஎஃப்டி ஸ்கிரீன் கொண்டிருக்கும்.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

புதிய ஆடி ஏ3 செடானில், டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களான டிராஃபிக் ஜாம் அசிஸ்ட் சிஸ்டம், அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல் (ஏசிசி) மற்றும் எஸ் ட்ரானிக் டிரான்ஸ்மிஷன் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இது 16-இஞ்ச் அல்லாய் வீல்கள் கொண்டிருக்கும்.

விலை;

விலை;

தற்போதைய ஏ3 செடான், 27.1 லட்சம் ரூபாய் என்ற விலையில் விற்கபப்படுகிறது. சிறிய 1.4 இஞ்ஜின் கொண்ட புதிய ஆடி ஏ3 செடானின் துவக்க விலை 25 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையிலேயே விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

ஏர்பஸ், போயிங் விமானங்களுக்கு போட்டியாக களமிறங்கிய ரஷ்ய பயணிகள் விமானம்!

புகாட்டி வேரான் கார் மீது இந்த சாமியாருக்கு வந்த ஆசையை பாருங்கள்!

ஜிம்பாப்வே போலீஸ் பைக்கை 'தல' தோனி இரவல் வாங்கி ஓட்டியதன் காரணம்?

மேலும்... #ஆடி #audi
English summary
German manufacturer Audi have given facelift to their Audi A3 sedan and this car will hit Indian roads from next year. First A3 model was launched back in 2013 internationally. Audi has included driver assistance systems such as traffic jam assist system, Adaptive Cruise Control (ACC) and S Tronic transmission in A3 Sedan. This A3 will also have 16-inch alloy wheels. To know more, check here...
Story first published: Friday, October 14, 2016, 11:32 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more