புதிய ஆடி இ-ட்ரான் குவாட்ரோ எலக்ட்ரிக் எஸ்யூவி தயாராகிறது

Written By:

ஆடி நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி புருசெல்ஸ் நகரத்தில் உற்பத்தி செய்யபட உள்ளது.

ஆடி நிறுவனம் சார்பாக தயாரிக்கபடும் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

டீசல் கேட்டில் பாதிக்கபட்ட ஆடி...

டீசல் கேட்டில் பாதிக்கபட்ட ஆடி...

ஆடி நிறுவனம் டீசல்கேட் எனப்படும் மாசுஉமிழ்வு தொடர்பான விவகாரத்தில், மென்பொருளில் ஊழல் செய்தது. இதனால் இந்த நிறுவனத்தின் மதிப்பு வெகுவாக பாதிக்கபட்டது.

இதில் இருந்து தங்கள் நிறுவனத்தின் மதிப்பை பழைய நிலைக்கு கொண்டு வர பிற ஆராய்ச்சி மற்றும் உருவாக்கம் தொடர்பான நடவடிக்கைகளை இந்த நிறுவனம் நிறுத்தி விட்டது.

எலக்ட்ரிக் எஸ்யூவி செய்யும் முயற்சியில் ஆடி;

எலக்ட்ரிக் எஸ்யூவி செய்யும் முயற்சியில் ஆடி;

கடுமையாக பாதிக்கபட்ட தங்கள் நிறுவனத்தின் பெயரை காப்பாற்றி கொள்ள, இ-ட்ரான் குவாட்ரோ எலக்ட்ரிக் எஸ்யூவி என்ற எலக்ட்ரிக் காரின் உற்பத்தியில் ஆடி நிறுவனம் மும்முறமாக இறங்கியுள்ளது.

மாற்று சக்தியில் இயங்கும் வாகனங்கள்;

மாற்று சக்தியில் இயங்கும் வாகனங்கள்;

ஆடி நிறுவனம், இ-ட்ரான் குவாட்ரோ எலக்ட்ரிக் எஸ்யூவி மட்டுமல்லாது, ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் குவாட்ரோ கார்களை உருவாக்க, அனைத்து நிதி மற்றும் இஞ்ஜினியரிங் ஆதாரங்களையும் முடிக்கிவிட்டுள்ளது.

இந்த இ-ட்ரான் காரின் உற்பத்தி, தங்கள் நிறுவனத்தை டீசல்கேட் பிரச்னையின் அவபெயரில் இருந்து காப்பாற்றும் என ஆடி நிறுவனம் நம்புகிறது.

ப்ருசெல்ஸ் நகரில் உற்பத்தில் ஆலை;

ப்ருசெல்ஸ் நகரில் உற்பத்தில் ஆலை;

வெரும் எல்க்ட்ரிக் ஸ்போர்ட் யூடிலிட்டி வாகனங்களை மட்டும் உற்பத்தி செய்வதற்காக, ஆடி நிறுவனம் பெல்ஜியம் நாட்டு தலைநகரான ப்ருசெல்ஸ் நகரில் புதிய உற்பத்தி ஆலையை ஆடி நிறுவனம் ஸ்தாபிக்கிறது.

பிற திட்டங்கள் ஒத்திவைப்பு;

பிற திட்டங்கள் ஒத்திவைப்பு;

இந்த எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் பொருட்டு, க்யூ4, டிடி ஆஃப் ரோட் மற்றும் டிடி ஸ்போர்ட்பேக் கான்செப்ட்களின் உருவாக்கத்தை கொஞ்ச காலத்திற்கு ஆடி நிறுவனம் ஒத்திவைத்துள்ளது.

முதல் காட்சிபட்டுத்தல்;

முதல் காட்சிபட்டுத்தல்;

ஆடி நிறுவனத்தின் புதிய இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி முதன் முதலாக 2015 பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் காட்சிபடுத்தபட்டது.

எலக்ட்ரிக் மோட்டார்;

எலக்ட்ரிக் மோட்டார்;

புதிய ஆடி இ-ட்ரான் எலக்ட்ரிக் ஸ்போர்ட் யூடிலிட்டி வாகனத்தில், 3 எலக்ட்ரிக் மோட்டார்கள் உபயோகிக்கபடுகிறது.

ரேஞ்ச்;

ரேஞ்ச்;

புதிய ஆடி இ-ட்ரான் எலக்ட்ரிக் ஸ்போர்ட் யூடிலிட்டி எஸ்யூவி, சுமார் கிலோமீட்டர் செல்லும் வகையிலான ரேஞ்ச் கொண்டுள்ளது. இதற்கான உயர்-திறன் கொண்ட பேட்டரிகளும், ப்ருசெல்ஸ் நகரின் உற்பத்தில் ஆலையிலேயே தயாரிக்கபட உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஆடி லூனார் க்வாட்ரோ விண்வெளி வாகனம் பற்றிய தகவல்கள்

ஆடி க்யூ3 எஸ்யூவியின் புதிய டைனமிக் டீசல் மாடல் - விமர்சனம்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

English summary
Audi's New All-electric SUV is to be manufactured in Brussels, capital of Belgium. Audi was caught up in the diesel-gate and lost its Brand value considerably. To bring back its Brand Value, Audi is involved in the making of New All-electric SUV called e-tron Quattro and hydrogen fuel cell Quattro.
Story first published: Tuesday, January 26, 2016, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark