விலை குறைவான ஆடியின் புதிய சொகுசு கார்: 2019-ல் அறிமுகம்

Written By:

சிறிய ரகத்திலான புதிய சொகுசு கார் மாடலை ஆடி நிறுவனம் 2019-ஆம் ஆண்டு அறிமுகம் செய்ய உள்ளது

புதிய சிறிய வகை சொகுசு கார் குறித்த விரிவான தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

(*) இது புதிய சப்-ஏ1 சிட்டி காரின் படங்கள் அல்ல. அனைத்து படங்களும் உதாரணத்திற்கு காட்டபட்டுள்ளது.

புதிய மாடல் அறிமுகம்;

புதிய மாடல் அறிமுகம்;

அனைத்து நிறுவனங்களும், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, அவ்வபோது புதிய புதிய மாடல்களை அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் ஆடி நிறுவனமும், 2019-ல் ஒரு புதிய சப்-ஏ1 சிட்டி காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது.

(*) இது புதிய சப்-ஏ1 சிட்டி காரின் படங்கள் அல்ல. அனைத்து படங்களும் உதாரணத்திற்கு காட்டபட்டுள்ளது.

போட்டியை சமாளிக்க புதிய அறிமுகம்;

போட்டியை சமாளிக்க புதிய அறிமுகம்;

இந்த புதிய சப்-ஏ1 சிட்டி கார், ஸ்மார்ர் ஃபார்ஃபோர், வாக்ஸ்ஹால் ஆடம் மற்றும் பியட் 500 ஆகிய கார்களுக்கு போட்டியாக உருவாக்கபடுகிறது.

வகைபடுத்தல்;

வகைபடுத்தல்;

புதிய சிட்டி கார், தற்போது நுழைவு-நிலை மாடலாக விளங்கும், ஏ1 காருக்கு கீழே வகைபடுத்தபடும்.

புதிய தொழில்நுட்பம்;

புதிய தொழில்நுட்பம்;

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் என்எஸ்எஃப் அல்லது நியூ ஸ்மால் ஃபேமிலி ஃப்ரண்ட்-வீல் டிரைவ் ஆர்கிடெக்சர் (கட்டுமான தொழில்நுட்பம்) இந்த புதிய சப்-ஏ1 சிட்டி காருக்கு பின்பற்றபடுகிறது.

இந்த நியூ ஸ்மால் ஃபேமிலி ஃப்ரண்ட்-வீல் டிரைவ் ஆர்கிடெக்சர் 3-டோர் மற்றும் 5-டோர் பாடிஸ்டைல் உடைய கார்களை வடிவமைக்கும் வகையில்

பன்முக தன்மை கொண்ட பிளாட்ஃபார்மாக விளங்குகிறது.

இஞ்ஜின் அமைப்பு;

இஞ்ஜின் அமைப்பு;

ஆடி சிட்டி கார், 1.0 லிட்டர் டர்போ சார்ஜ்ட், 3 - சிலிண்டர்கள் உடைய பெட்ரோல் இஞ்ஜின் கொண்டிருக்கும். மேலும், விடபுள்யூ ஈ-அப் காரில் உபயோகிப்படுவது போன்ற, எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் லித்தியம்-இயான் பேட்டரி பேக் உடைய ஆல்-எலக்ட்ரிக் பவர்ட்ரெய்ன் வகையிலான அமைப்பும் இந்த ஆடி சிட்டி காரில் சேர்க்கபட உள்ளது.

டீசல் இஞ்ஜின் கிடையாது;

டீசல் இஞ்ஜின் கிடையாது;

டீசல் இஞ்ஜின் வடிவமைக்க அதிக பொருட்செலவு ஆகும் என்பதால், டீசல் இஞ்ஜின் அடிப்படையிலான வாகனங்களை தயாரிக்கும் திட்டம் கைவிடபட்டுள்ளதாக ஆடி நிறுவனம் அறிவித்துள்ளது.

3-வது முயற்சி;

3-வது முயற்சி;

இந்த செக்மெண்டில் நுழைவதற்காக, ஆடி நிறுவனம் மேற்கொள்ளும் பொருட்டு 3-வது முறையாக முயற்சி செய்து வருகிறது. 1999-ல், ஒரிஜினல் ஆடி ஏ2 அறிமுகம் செய்யபட்டது. ஆனால், மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ் மாடலின் ஆபார விற்பனையை மீறி வாடிக்கையாளர்களை ஈர்க்க தவறிய்தால், ஆடி ஏ2 மாடல் ரத்து செய்யபட்டது.

2-வது முறையாக, ஒரு எலகட்ரிக் ஏ2 கான்செப்ட் மாடலும் அறிமுகம் செய்யபட்டு, உற்பத்திக்கு தயார் செய்யபட்டு வந்தது. ஆனால், 2013-ஆம் ஆண்டில் இந்த திட்டம் மீண்டும் கைவிடபட்டது.

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

English summary
Audi is planning for the introduction of Sub-A1 City Car by 2019. Audi is working on this brand new city car to take on the Smart Forfour, Vauxhall Adam and Fiat 500. Sub-A1 City Car is slotted below the brand's current entry-level model, the A1. Volkswagen Group's New Small Family (NSF) front-wheel drive architecture is used for Sub-A1 City Car.
Story first published: Tuesday, January 19, 2016, 12:10 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark