ஆடி க்யூ3 டைனமிக் எடிஷன் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

Written By:

ஆடி நிறுவனம், தங்களின் க்யூ3 மாடலில், க்யூ3 டைனமிக் எடிஷன் என்ற ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளனர். இந்தியாவில் தசரா மற்றும் பண்டிகை காலங்கள் துவங்கிவிட்டன. இந்த நிலையில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றனர் அல்லது தற்போது விற்பனையில் இருக்கும் மாடல்களின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளனர். அந்த வகையில் தான், க்யூ3 டைனமிக் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆடி க்யூ3 டைனமிக் எடிஷன் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி விரிவாக தெரிந்து கொள்ளளாம்.

ஸ்பெஷல் எடிஷன்;

ஸ்பெஷல் எடிஷன்;

ஜெர்மனியை சேர்ந்த ஆடி நிறுவனம், க்யூ3 டைனமிக் எடிஷன் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. பிரத்யேகத்தன்மையை பாதுக்காக்க, இந்த க்யூ3 டைனமிக் எடிஷன் மாடலில் வெறும் 101 கார்கள் மட்டுமே விற்கப்படும்.

பிரத்யேக அம்சங்கள்;

பிரத்யேக அம்சங்கள்;

ஆடி க்யூ3 டைனமிக் எடிஷன், இதன் முன் டோரில் தனித்துவம்மிக்க ஆடி புரோஜெக்ஷன் லேம்ப்கள் கொண்ட ஆடி எல்இடி ஹெட்லேம்ப்கள் கொண்டுள்ளது. ஆடி க்யூ3 டைனமிக் எடிஷனின் டர்ன் சிக்னல்கள், எல்இடி டெயில்லேம்ப்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. உள்ளிருந்து உதித்து கொண்டு வரும் இன்ட்யூட்டிவ் டர்ன் சிக்னல்கள் ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்கப்படும்.

நிறங்கள்;

நிறங்கள்;

ஆடி க்யூ3 டைனமிக் எடிஷனின் வீல் ஆர்ச்கள், ஃபிரன்ட் பம்பர், ரியர் பம்பர் மற்றும் சைட் ராக்கர் மோல்டிங்களுக்கு முழுமையான பெயின்ட் பினிஷ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதன் ஃபிரன்ட் கிரில் பகுதிக்கு குரோம் பூச்சு வழங்கப்பட்டிருக்கிறது.

ஸ்டாண்டர்ட் அம்சங்கள்;

ஸ்டாண்டர்ட் அம்சங்கள்;

ஆடி க்யூ3 டைனமிக் எடிஷன், ஸ்போர்ட்டியான ஏர் இன்லெட் கவர், ஆக்கிரோஷமான ஃபிரன்ட் லோயர் பம்பர் மற்றும் கிளியர் லென்ஸ் டெயில் லேம்ப் ஆகியவை ஸ்டாண்டர்ட் அம்சங்களாக கொண்டுள்ளது.

புக்கிங்;

புக்கிங்;

ஆடி க்யூ3 டைனமிக் எடிஷனின் புக்கிங், இந்தியா முழுவதும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களிலும் ஏற்கப்பட்டு வருகிறது.

விலை;

விலை;

ஆடி க்யூ3 டைனமிக் எடிஷன், 39.78 லட்சம் ரூபாய் என்ற ஈர்க்கும் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்கப்படுகிறது.

மேலும்... #ஆடி #audi
English summary
2016 Festive Season has arrived in India and with that offers and discounts are also here. Audi India has now launched special edition model exclusively for festive season. Special edition from Audi is christened 'Q3 Dynamic Edition'. Only 101 Q3 Dynamic Editions will be sold in India to maintain exclusivity. Dynamic Edition is now available for booking. To know more, check here...
Story first published: Thursday, October 6, 2016, 16:50 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos